For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 'ஒரு இலை' வயிற்றுக் கொழுப்பை இருமடங்கு வேகத்தில் கரைக்குமாம் - அதை எப்படி சாப்பிடுவது?

வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க நம் வீட்டு சட்னி முதல் பல சமையலுக்கு சேர்க்கும் ஒரு பொருள் பெரிதும் உதவி புரியும். அது தான் புதினா. இந்த இலை இந்தியாவில் பெரும்பாலான சமையலில் ஃப்ளேவருக்காக சேர்க்கப்படுகிறது.

|

கொரோனாவால் நம்மில் பலர் வீட்டில் இருந்து கொண்டே அலுவலக வேலைகளை செய்து வருகிறோம். இதனால் தற்போது பலரது உடல் எடை அதிகரித்திருக்கும். சொல்லப்போனால் பலரின் வயிற்றுப் பகுதி பெருத்து, பானை போன்று வயிறு மாறியிருப்பதைப் பார்க்கலாம். கொரோனாவிற்கு முன்பாவது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில் சிறு நடைப்பயிற்சியையாவது மேற்கொண்டிருப்போம். ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்வதால், பலரும் உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் சாப்பிடுவது, உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது, தூங்குவது என்றே நாட்களை கடத்தியிருப்போம். இதனால் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றில் தேங்கி வீங்கியிருக்கும்.

How To Eat Mint (Pudina) Leaves To Cut Belly Fat

இப்படி வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்க நம் வீட்டு சட்னி முதல் பல சமையலுக்கு சேர்க்கும் ஒரு பொருள் பெரிதும் உதவி புரியும். அது தான் புதினா. சொல்லப்போனால் இந்த இலை இந்தியாவில் பெரும்பாலான சமையலில் ஃப்ளேவருக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது. ஆனால் சுவையையும் தாண்டி, புதினா பல மகத்தான மருத்துவ நன்மைகளுக்காக ஆயுர்வேதத்தில் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

MOST READ: கொரோனா தடுப்பூசி போட்ட நாளில் இந்த 2 விஷயங்களை கட்டாயம் ஃபாலோ பண்ணணுமாம்.. அது என்னென்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதினாவின் நன்மைகள்

புதினாவின் நன்மைகள்

புதினாவில் மெந்தால் என்னும் செயலில் உள்ள எண்ணெய் உள்ளது. மேலும் இதில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளன. இதனால் இது அஜீரணத்தைப் போக்க உதவுகிறது. புதினா இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் சிறந்தது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்த நிவாரணப் பொருள். புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுவதன் மூலம், அதில் உள்ள கிருமி நாசினி பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தை உடனடியாக போக்குகிறது. கூடுதலாக, புதினா இலைகள் உடல் எடையை இரட்டிப்பு வேகத்தில் குறைக்கவும் உதவும். சரி, புதினா எப்படி உடல் எடையை இழக்க உதவுகிறது என்பதை இப்போது காண்போம்.

செரிமானத்தை மேம்படுத்தும்

செரிமானத்தை மேம்படுத்தும்

புதினா அனைத்து விதமான செரிமான பிரச்சனைகளைப் போக்கக்கூடியது. இதில் இருக்கும் செயலில் உள்ள உட்பொருட்கள், செரிமானத்தை மேம்படுத்தும். மோசமான செரிமானம் தான் ஒருவரது எடை இழப்பிற்கு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. செரிமான மண்டலம் சிறப்பாக இல்லாத போது, உடலால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் போவதோடு, உடலில் இருந்து கழிவுகளையும் திறம்பட வெளியேற்ற முடியாமல் போய், எடை அதிகரிக்க தூண்டும்.

மெட்டபாலிசம் மேம்படும்

மெட்டபாலிசம் மேம்படும்

புதினா செரிமான நொதிகளைத் தூண்டி, உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவற்கு உதவுகிறது. எப்போது உடலால் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடிகிறதோ, அப்போது உடலின் மெட்டபாலிசம் மேம்படும். மெட்டபாலிசம் மேம்பட்டால், எடை இழப்பு செயல்முறை வேகமாக நடக்கும்.

கலோரி குறைவானது

கலோரி குறைவானது

புதினாவில் கலோரிகள் மிகவும் குறைவு. 2 டேபிள் ஸ்பூன் புதினா இலைகளில் 2 கலோரிகளே உள்ளன. எனவே இது எடை இழப்பு டயட்டில் சேர்க்க ஏற்ற மிகவும் சிறப்பான மூலிகை.

எடையைக் குறைக்க புதினா இலைகளை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

எடையைக் குறைக்க புதினா இலைகளை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

புதினா நீர்

எடையை இழக்க நினைப்போருக்கு புதினா நீர் மிகவும் சிறப்பான பானம். இது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருக்க உதவும். அதற்கு 4-5 புதினா இலைகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து (ஃப்ரிட்ஜில் கூட வைக்கலாம்), மறுநாள் காலையில் அந்நீரைக் குடிக்க வேண்டும். வேண்டுமானால், அத்துடன் எலுமிச்சை துண்டுகள் மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

புதினா டீ

புதினா டீ

புதினா டீ உடலின் மெட்டபாலிசத்தில் மாயங்களை ஏற்படுத்தி, வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவும். அதற்கு சிறிது உலர்ந்த புதினா இலைகளை நீரில் போட்டு 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

புதினா ரெய்தா

புதினா ரெய்தா

கோடைக்காலத்தில் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். நீங்கள் இந்த கோடைக்காலத்தில் எடையைக் குறைக்க நினைத்தால், உங்கள் உணவில் ரெய்தாவை சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் கொண்டு தயாரிக்கப்படும் ரெய்தா, குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நல்ல செரிமானம் நிலையான எடை இழப்புக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும். அத்தகைய ரெய்தாவுடன் புதினாவை சேர்த்துக் கொண்டால், எடை இழப்பு செயல்முறை மேலும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Eat Mint (Pudina) Leaves To Cut Belly Fat

Here in this article we are discussing about how to eat mint leaves to cut belly fat. Take a look.
Story first published: Friday, March 12, 2021, 13:23 [IST]
Desktop Bottom Promotion