Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உள்ளங்கை மற்றும் பாதங்களில் அடிக்கடி கூச்ச உணர்வு ஏற்படுகிறதா? இதோ அதை தடுக்கும் சில எளிய தீர்வுகள்!
பொதுவாக கைகள் மற்றும் பாதங்களில் கூச்ச உணர்வு தோன்றுவது வழக்கமாக இருந்தாலும் தொடர்ந்து இந்த நிலையை நீங்கள் அனுபவித்தால் வேறு ஏதாவது பாதிப்பின் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.
உங்கள் பாதங்களில் அல்லது உள்ளங்கையில் என்றாவது கூச்ச உணர்வை உணர்ந்திருக்கிறீர்களா? நீண்ட நேரம் உட்கார்ந்தபடி இருந்து பிறகு எழும்போது பாதங்களில் ஒருவிதமான கூச்ச உணர்வு தோன்றும். இது ஒரு பொதுவான செயல்தான் என்றாலும் மருத்துவ மொழியில் இதனை பரேஸ்டீசியா என்று கூறுவார்கள்.

பொதுவாக கைகள் மற்றும் பாதங்களில் கூச்ச உணர்வு தோன்றுவது வழக்கமாக இருந்தாலும் தொடர்ந்து இந்த நிலையை நீங்கள் அனுபவித்தால் வேறு ஏதாவது பாதிப்பின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். அதனால் உங்கள் சந்தேகங்களுக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை செய்வது நல்லது.
வழக்கமான கூச்ச உணர்வுக்கு சில எளிய தீர்வுகள் உள்ளன. இந்த தீர்வுகள் ஓரளவிற்கு உணர்வை கட்டுப்படுத்தும். இந்த எளிய தீர்வுகள் பற்றி நாம் இந்த பதிவில் இப்போது காணலாம்.

மரத்துப்போவது அல்லது கூச்ச உணர்வை குறைப்பதற்கான எளிய தீர்வுகள்:
பாதங்கள் மற்றும் உள்ளங்கையில் உண்டாகும் கூச்ச உணர்வை எளிய முறையில் நீக்க கீழே ஐந்து குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை முயற்சித்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

லாவண்டர் எண்ணெய் பயன்படுத்துங்கள்:
கூச்ச உணர்வு உட்பட பல்வேறு ஆரோக்கிய கோளாறுகளுக்கு அத்தியாவசிய எண்ணெய் சிறந்த தீர்வை தருகிறது . பரேஸ்டீசியா போன்ற பாதிப்பை போக்க லாவண்டர் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். லாவண்டர் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண தன்மை கொண்டது.
* தேங்காய் எண்ணெயுடன் 10 துளிகள் லாவண்டர் எண்ணெய் சேர்க்கவும்
* இந்த எண்ணெய்யை கூச்ச உணர்வு இருக்கும் கைகள் அல்லது கால்களில் தடவவும்.
* கூச்ச உணர்வு இருக்கும் இடத்தை மென்மையாக மசாஜ் செய்யவும்.
* இரவு உறங்கச் செல்வதற்கு முன் இப்படி செய்வதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

எப்சம் உப்பு
எப்சம் உப்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை கூச்சஉணர்வுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இந்த உணர்வை குறைக்க எப்சம் உப்பு பயன்படுத்தி கால்களை ஊற விடலாம். இதனால் எரிச்சலுற்ற நரம்புகள் இதமான உணர்வை பெற்று மரத்துப்போவது, கூச்ச உணர்வு போன்றவை குறையலாம்.
* ஒரு டப்பில் பாதி அளவு நீர் எடுத்துக் கொள்ளவும்.
* இந்த நீரில் ஒரு கப் அளவு எப்சம் உப்பு சேர்க்கவும்.
* இந்த கலவையில் உங்கள் கால்களை அரை மணிநேரம் ஊற விடவும்.
* தொடர்ந்து இப்படி செய்வதால் விரைவில் இந்த பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.

பாத மசாஜ்:
கூச்ச உணர்வை குறைக்க மசாஜ் சிகிச்சை ஒரு தரமான நிரூபிக்கப்பட்ட சிகிச்சையாகும் . தொடர்ச்சியாக உண்டாகும் கூச்ச உணர்வை குறைக்க, கைகளையும் கால்களையும் மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும். மசாஜ் செய்வதால் நரம்புகள் ஊக்குவிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் அதிகரித்து கூச்ச உணர்வு குறைகிறது.

இலவங்கப்பட்டை:
கூச்ச உணர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு இலவங்கப்பட்டை சிறந்த தீர்வைத் தருகிறது. இலவங்கப்பட்டையில் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை உள்ளன. இவை ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூச்ச உணர்வை குறைக்கிறது. மரத்துப் போகும் உணர்வும் இதனால் குறைகிறது.
* ஒரு பாத்திரத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
* அதில் ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை தூள் சேர்க்கவும்.
* இதனை நன்றாக கலக்கவும்.
* இந்த நீரை ஒரு நாளில் இரண்டு முறை பருகவும்.
* இதனால் பரேஸ்டீசியா கட்டுப்படுத்தப்படுகிறது.

தயிர்:
தயிர் அல்லது யோகர்ட் உட்கொள்வதால் கூச்ச உணர்வு குறைகிறது. யோகர்ட்டில் மாங்கனீசு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் இருப்பதால் நரம்புகளின் செயல்பாடு அதிகரித்து, ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, உள்ளங்கை மற்றும் பாதங்களில் கூச்ச உணர்வு குறைகிறது.
* தினமும் ஒரு கிண்ணம் தயிர் அல்லது யோகர்ட் உட்கொள்வதால் கூச்ச உணர்வு குறைவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications
