Latest Updates
-
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதியம் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க கை & கால் விரல்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்க உடலில் கொலஸ்ட்ரால் அதிகமா இருக்காம்...!
உங்க உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், விரல்கள் மற்றும் கால் விரல்களில் அதிக வலி ஏற்படலாம். கைகள் மற்றும் கால்களின் இரத்தத் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதால் அவற்றைத் தொடும்போது வலி உணர்வு ஏற்படும்.
ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத்தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால், இன்றைய பிஸியான காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெரும்பாலான மக்கள் பின்பற்றுவதில்லை. அதனால்தான், சர்க்கரை நோய், உடல் பருமன், இரத்த அழுத்தம் உட்பட உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், நீங்கள் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லமால் இருப்பது எடையை அதிகரித்து, உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். அதிகளவு கொலஸ்ட்ரால் உங்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய நோய் ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. ஆதலால், ஒவ்வொருவரும் தங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கண்காணிப்பதும், அவற்றை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.

குறிப்பிட்ட உடல் பாகங்களுக்கு இரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறுக்கீடுகளால் கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு ஏற்படுகிறது. உயர் இரத்த கொலஸ்ட்ரால் அளவுகளால் உடலில் இரத்தம் அடர்த்தியாக பாய்கிறது. இது நரம்புகளுக்கு செல்லும் இரத்தத்தின் இயல்பான ஓட்டத்தில் குறுக்கிடுகிறது மற்றும் கூச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. உங்கள் உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பதை உங்கள் விரல்கள் மூலம் எவ்வாறு தெரிந்துகொள்ளலாம் என்று இக்கட்டுரையில் காணுங்கள்.

அதிக கொழுப்புக்கு வழிவகுக்கும் காரணிகள்
அதிக கொலஸ்ட்ரால் அளவுகளால் பல நோய்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது, புகைபிடிப்பது, மது அருந்துவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை உங்கள் எடையை அதிகரிக்கும். இவை அனைத்தும் நமது அமைப்புகளில் கொலஸ்ட்ராலை உருவாக்குவதற்கு பங்களிக்கும் மற்ற காரணிகளாகும். மேலும், இது இரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் உள்ளிட்ட ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்தலாம்.

விரல்களில் அதிக வலி
உங்க உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், விரல்கள் மற்றும் கால் விரல்களில் அதிக வலி ஏற்படலாம். கைகள் மற்றும் கால்களின் இரத்தத் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதால் அவற்றைத் தொடும்போது வலி உணர்வு ஏற்படும். உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான மற்றொரு அறிகுறி விரல்கள் மற்றும் கால்விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது ஆகும்.

உள்ளங்கையில் மஞ்சள் கொலஸ்ட்ரால் படிதல்
ஹைப்பர் கொலஸ்ட்ரால் தோலில் மஞ்சள் நிற படிவுகளை கொண்டிருக்கும். குறிப்பாக கண்ணைச் சுற்றிலும் சில சமயங்களில் உள்ளங்கை மற்றும் கீழ் கால்களின் பின்புறமும் மஞ்சள் படிவுகள் ஏற்படலாம். இது சாந்தெலஸ்மா என்று அழைக்கப்படுகிறது. அதிக கொலஸ்ட்ரால் உங்கள் விரல் நுனியில் உணர்வின்மையை ஏற்படுத்தாது.

கண்களில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற படிவுகள்
தோலில் குறிப்பாக மேல் கண்ணிமை மற்றும் கீழ் கண்ணிமையில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கொலஸ்ட்ரால் படிவுகள் படிந்திருக்கும். மேலும், இது கைகளில் உள்ளங்கை மற்றும் காலின் பாதப் பகுதியில் சிறிய மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற வளர்ச்சிகள் அல்லது படிவுகளை உண்டாக்கலாம். இந்த நிலை ஹைப்பர் ட்ரைகிளிசரைடு அளவை அடைந்தால், உடலில் கொழுப்பு படிவுகள் கொத்துகொத்தாக உருவாகும். ஹைப்பர் கொலஸ்ட்ரால் மற்றும் ஹைபர்டிரிகிளிசெரிடெமியா ஆகியவை நோயாளிக்கு இருதய மற்றும் நரம்பியல் நோய்களுக்கு வழிவகுக்கும்.

இறுதிக்குறிப்பு
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுக்க, உங்கள் வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை மாற்றம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். பிரச்சனை மற்றும் பாதிப்பு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் மற்றும் அவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
