For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன? எவ்வளவு காலம் உயிர் வாழலாம்?

முற்றிய நிலை கல்லீரல் நோய் தான் ஹெபடைடிஸ் சி ஆகும். இதனை இறுதி கட்ட ஹெபடைடிஸ் சி அல்லது இறுதி கட்ட கல்லீரல் நோய் என்றும் கூறுவர்.

|

உடலில் இதயத்தைப் போன்றே கல்லீரலும் மிகவும் முக்கியமான உறுப்பாகும். கல்லீரலைத் தாக்கும் பல வகையான நோய்கள் உள்ளன. அதில் முற்றிய நிலை கல்லீரல் நோய் தான் ஹெபடைடிஸ் சி ஆகும். இதனை இறுதி கட்ட ஹெபடைடிஸ் சி அல்லது இறுதி கட்ட கல்லீரல் நோய் என்றும் கூறுவர். இந்த கட்டத்தில் கல்லீரலானது ஹெபடைடிஸ் சி வைரஸினால் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கும்.

Hepatitis C: What Happens In End-Stage Liver Disease?

ஹெபடைடிஸ் சி வைரஸ் கல்லீரலைத் தாக்கி மெதுவாக அரித்துக் கொண்டிருக்கும். இப்படி நீண்ட காலம் கல்லீரல் ஒரு வைரஸினால் தாக்கப்படும் போது, கல்லீரல் பல நாட்களாக அழற்சிக்கு உட்பட்டிருக்கும். இந்த வகை கல்லீரல் பிரச்சனைக்கு என்று தனியாக எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறியும் தெரியாது. இல்லாவிட்டால் பல நாட்களாக ஒரே மாதிரியான மிதமான சில அடிப்படை அறிகுறியே தெரியும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பெரும்பாலானோருக்கு கல்லீரலில் உள்ள தீவிர பிரச்சனை, முற்றிய நிலையில் தான் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு ஒரே மாதிரியான அறிகுறி இருப்பதே. இதன் விளைவாகவே நோய் முற்றிய நிலையில் உடலில் உள்ள பல பெரிய நோய்களை கண்டறிய முடிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் இழைநார் வளர்ச்சி

கல்லீரல் இழைநார் வளர்ச்சி

ஹெபடைடிஸ் சி வைரஸ் தாக்கத்தினால், கல்லீரலின் பெரும்பாலான பகுதி சேதமடைந்திருக்கும். இப்படி நீண்ட காலம் இந்த வைரஸ் தாக்கம் இருந்தால், அது கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி இருப்பது கண்டறியப்பட்டால், ஆரம்பத்திலேயே நிலைமை மோசமாகாமல் இருப்பதற்கான சிகிச்சையை வழங்க வசதியாக இருக்கும். இப்படி கொடுக்கப்படும் சிகிச்சையினால் ஒருவேளை கல்லீரல் பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம் அல்லது சேதத்தைக் குறைக்கலாம்.

ராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க...

இறுதி கட்ட கல்லீரல் நோயின் அறிகுறிகள்:

இறுதி கட்ட கல்லீரல் நோயின் அறிகுறிகள்:

* இரத்தக்கசிவு

* கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்

* கடுமையான அரிப்பு

* பசியின்மை

* குமட்டல்

* திரவ தேக்கத்தினால் அடிவயிறு மற்றும் கால்களில் வீக்கம்

* கவனச் சிதறல் மற்றும் ஞாபக மறதி

தீவிர நிலையில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி

தீவிர நிலையில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி

ஒருவருக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி பிரச்சனை இருந்தால், கல்லீரலின் பெரும்பாலான முக்கிய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுவிடும். இது முற்றிய நிலையில் கல்லீரல் செயலிழப்பு கூட ஏற்படலாம். மேலும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி உள்ளவர்கள் வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும்.

உங்களுக்கு எப்பவும் மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க...

இரைப்பையில் இரத்தக்கசிவு

இரைப்பையில் இரத்தக்கசிவு

செரிமான பாதை அல்லது இரைப்பையில் இரத்தக்கசிவு ஏற்படலாம். இதற்கு காரணம் தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதியுடன் தொடர்புடைய குழாய்களில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்திருப்பது தான்.

மூளை மற்றும் நரம்பு பாதிப்பு

மூளை மற்றும் நரம்பு பாதிப்பு

கல்லீரல் இழைநார் வளர்ச்சி இருப்பவர்களது மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு காரணம் இரத்த நாளங்களில் உள்ள டாக்ஸின்களின் தேக்கம் தான்.

கல்லீரல் புற்றுநோய்

கல்லீரல் புற்றுநோய்

ஒருவரது கல்லீரல் இழைநார் வளர்ச்சி பிரச்சனை முற்றிய நிலையில், கல்லீரல் புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களது கல்லீரல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறையை காண்பிக்க வேண்டும். அதற்கு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

மூளை சிறப்பாக செயல்பட காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்!

என்ன தீர்வு?

என்ன தீர்வு?

இறுதி கட்ட கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கான ஒரு சிறப்பான சிகிச்சை என்றால், அது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான். நாள்பட்ட ஹெபடைடிஸ் சி வைரஸ் தாக்கத்திற்கு அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் ஒரு சிகிச்சை என்றால் அது இது தான். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால், இந்த சிகிச்சைக்கு பின் குறைந்தது 5 வருடங்களாவது உயிர் வாழலாம். ஆனால் மீண்டும் ஹெபடைடிஸ் சி வைரஸ் தாக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hepatitis C: What Happens In End-Stage Liver Disease?

What happens in end-stage liver disease? End-stage liver disease means the liver has been severely damaged by the hepatitis C virus. Read on to know more...
Desktop Bottom Promotion