உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்ன தெரியுமா?

உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளைச் சேமித்து வைத்திருங்கள்.

உன் நண்பனைப் பற்றி சொல், உன்னை பற்றி நான் சொல்கிறேன் என்பது மிகவும் பிரபலமான வசனம். அந்த வசனம் உங்களுக்கும் பொருந்தும். ஆம்! உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் என்ன இருக்கிறது என்பது உங்களைப் பற்றி கூறும். எந்த மாதிரியான உணவுகளை உங்கள் குளிர் சாதன பெட்டியில் நீங்கள் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்பது உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பற்றி அக்கறையைக் காட்டுகிறது. சரியான உணவுகளை நீங்கள் வைக்கவில்லை என்றால், உண்மையில் உடல்நலம் குறித்து நீங்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.

healthy-foods-you-should-have-in-your-fridge

ஊட்டச்சத்து நிபுணர்களிடமிருந்தும் மருத்துவர்களிடமிருந்தும் ஆலோசனை கேளுங்கள். உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் தேவையில்லா குப்பைகளை குவிப்பதற்குப் பதிலாக, உங்கள் விருப்பங்களை புதுப்பித்து, புதிய கீரைகள் மற்றும் காய்கறிகளை பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கட்டுரையில், உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் நீங்கள் வைத்திருக்க வேண்டிய சில ஆரோக்கியமான உணவு பட்டியலை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு நல்ல உடல் நலத்தைப் பாதுகாத்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆதலால், உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளைச் சேமித்து வைத்திருங்கள். நல்ல பசியூட்டும் உணவுகளைக் குளிர்சாதன பெட்டியில் நீங்கள் சேமித்து வைத்திருந்தால், ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான தின்பண்டங்களைச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.

காய்கறிகள்

காய்கறிகள்

சில வெள்ளரிகள், செலரி, சுரைக்காய் மற்றும் கேரட் ஆகிய காய்கறிகளை சேமித்து குளிர்சானத பெட்டியில் சேமித்து வைக்கலாம். இது போன்ற காய்கறிகள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொட்டாசியம், நார்ச்சத்து, ஃபோலேட் (ஃபோலிக் அமிலம்), வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரங்கள் காய்கறிகளாகும்.

ஃபுரூட் சாலட்

ஃபுரூட் சாலட்

ஆப்பிள், திராட்சை மற்றும் பெர்ரி போன்ற பழங்களை துண்டுதுண்டாக வெட்டி ஒரு கிண்ணத்தில் வைக்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், இரத்த அழுத்தம் குறையும், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறையும், சில வகையான புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. மேலும், கண் மற்றும் செரிமானப் பிரச்சினைகளை குறைக்கும். பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க ஃபுரூட் சாலட் பயன்படுகிறது.

காய்கறி சாலட்

காய்கறி சாலட்

அதிக ஊட்டச்சத்து கொண்ட கீரைகள், சில செர்ரி தக்காளி, பீன்ஸ், கேரட் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் காய்கறி சாலட் உடனடி ஆற்றலின் ஆதாரமாக மட்டுமல்லாமல், உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. காய்கறி சாலட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து உள்ளன. காய்கறி சாலட்டில் கொலஸ்ட்ரால் இல்லாததால் இயற்கையாகவே கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாக இருக்கின்றன. இது ஆரோக்கியமான உணவுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்

கொழுப்பு, புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஆரோக்கியமான ஆதாரமாகக் குறைந்த கொழுப்புள்ள பால் உணவு பொருட்கள் இருக்கின்றன. கொழுப்பு இல்லாத பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள தயிர் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவை புரதத்தின் சிறந்த ஆதாரங்கள். பல தாதுக்கள், வைட்டமின் பி 6 மற்றும் பி 12 ஆகியவை இதில் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்புள்ள உணவுகள் நெஞ்செரிச்சலைத் தடுக்கும். உங்கள் உடல் எடையை குறைக்க இந்த வகை உணவுகள் உதவும்.

பாதாம் பட்டர்

பாதாம் பட்டர்

பாதாம் மிகவும் நன்மை பயக்கும் நட்ஸ் வகைகளில் ஒன்றாகும், இது வெண்ணெய் தயாரிக்கவும் பயன்படுகிறது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பாதாம் பட்டரை உட்கொள்ளுங்கள். பாதம் பட்டரில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் புரம் நிறைந்துள்ளது. இது தசைகளுக்கு வலிமையைச் சேர்க்கின்றன. கொழுப்பை குறைக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கவும் இது உதவுகிறது.

ஜஸ் கீரின் டீ

ஜஸ் கீரின் டீ

ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது படி, கலோரிகளைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அவற்றில் உள்ள பானங்களைத் தவிர்ப்பது. ஃபிஸி பானத்திற்கு பதிலாக ஒரு கப் ஐஸ் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது. இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை வழங்குவதோடு நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. மேலும், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நாட்டு கோழி முட்டைகள்

நாட்டு கோழி முட்டைகள்

ஒரு முட்டையில் 7 கிராம் உயர்தர புரதம் உள்ளது. இது உங்கள் உடலுக்குத் தேவையான அளவு அமினோ அமிலங்களை வழங்குகிறது. நாட்டு கோழி முட்டைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும், இதில் இரும்புச்சத்து, கோலின், வைட்டமின் பி -12 மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் எப்போதும் முட்டையை வைத்திருங்கள்.

தாவர அடிப்படையிலான பால்

தாவர அடிப்படையிலான பால்

பாதாம், சோயா, அரிசி, முந்திரி, அல்லது பாலுக்குப் பதிலாக அரிசி பால் ஆகியவற்றில் நீங்கள் விரும்பும் தாவர அடிப்படையிலான பாலை உட்கொள்ளலாம். தாவர அடிப்படையிலான பால் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் உடலுக்கும் வலிமை சேர்க்கிறது.

கண்களில் படக்கூடிய இடம்

கண்களில் படக்கூடிய இடம்

இந்த உணவுப் பொருட்களை நீங்கள் குளிர்சாதனப் பெட்டியில் எளிதாகக் கண்டுபிடிக்கக்கூடிய இடத்தில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான காய்கறிகளையும் பழங்களையும் குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் மிருதுவான இழுப்பறைகளில் சேமித்து வைத்திருப்பது நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு. உங்கள் குளிர்சாதனப் பெட்டியை திறந்தவுடன் உங்கள் கண்களில் எளிதாக படக்கூடிய இடத்தில், இந்த உணவுகளை வைத்துக்கொள்ளுங்கள். இதனால் ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் பார்க்கவும், சாப்பிடவும், ரசிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, January 6, 2020, 11:27 [IST]
Desktop Bottom Promotion