For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயர் இரத்த அழுத்தம் ஒருவரது உயிரை எப்படியெல்லாம் பறிக்கும் எனத் தெரியுமா?

ஒருவர் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிட்டால், அது இரத்த நாளங்களை சேதப்படுத்துவதோடு, மூளை, இதயம், கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புக்களையும் பாதிக்கும்.

|

தற்போது பலருக்கு இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. எப்போது ஒருவரது உடலில் ஆரோக்கியமற்ற அளவிற்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறதோ, அப்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால் நம்மில் பலருக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருப்பது தெரிவதில்லை. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அதற்கான அறிகுறிகளை வழக்கமாக நாம் கவனிக்கமாட்டோம். பெரும்பாலும் இதன் அறிகுறிகள் அன்றாடம் நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளாகத் தான் இருக்கும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையை பரிசோனையின் மூலமே அறிய முடியும்.

Health Threats From High Blood Pressure

ஒருவர் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிட்டால், அது இரத்த நாளங்களை சேதப்படுத்துவதோடு, மூளை, இதயம், கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புக்களையும் பாதிக்கும். எனவே அவ்வப்போது மருத்துவரை சந்தித்து, இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டியது அவசியம். அதிலும் 30 வயதிற்கு மேலாகிவிட்டால் கட்டாயம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

MOST READ: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இப்போது உயர் இரத்த அழுத்தம் உடலின் எந்த உறுப்புக்களைப் பாதித்து, எம்மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாரடைப்பு

மாரடைப்பு

உயர் இரத்த அழுத்தம் தமனிகளை சேதப்படுத்தி, அடைப்பை உண்டாக்குவதோடு, இதய தசைகளுக்கு இரத்த ஓட்டத்தைத் தடுத்து, இதன் விளைவாக மாரடைப்பை உண்டாக்கும்.

பக்கவாதம்

பக்கவாதம்

உயர் இரத்த அழுத்தம் தீவிரமானால், அது மூளையில் உள்ள இரத்த நாளங்களில் எளிதில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதத்தை உண்டாக்கும். சில சமயங்களில் அந்த அடைப்பினால் மூளையில் உள்ள இரத்தக் குழாய்கள் வெடிக்கவும் வாய்ப்புள்ளது.

இதய செயலிழப்பு

இதய செயலிழப்பு

உயர் இரத்த அழுத்தத்தினால் அதிகரிக்கும் பணிச்சுமையால் இதயம் பெரிதாகி, உடலின் மற்ற உறுப்புக்களுக்கு இரத்தத்தை வழங்கத் தவறிவிடும். இதன் விளைவாக ஏற்படுவது தான் இதய செயலிழப்பு.

சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களைச் சுற்றியுள்ள தமனிக் குழாய்களை சேதப்படுத்துவதோடு, சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டும் செயல்திறனில் இடையூறை ஏற்படுத்தும்.

பார்வை இழப்பு

பார்வை இழப்பு

உயர் இரத்த அழுத்தம் கண்களில் உள்ள இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து சேதப்படுத்துவதோடு, கண்களுக்கு கஷ்டத்தை கொடுத்து, அதன் விளைவாக பார்வை இழப்பை உண்டாக்கும்.

பாலியல் செயலிழப்பு

பாலியல் செயலிழப்பு

உயர் இரத்த அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால், அது தீவிரமாகி, அதன் விளைவாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாட்டையும், பெண்களுக்கு பாலுணர்ச்சி குறைபாட்டையும் உண்டாக்கும்.

ஆஞ்சினா

ஆஞ்சினா

உயர் இரத்த அழுத்தம் பல காலமாக நீடித்திருந்தால், அது இதய நோய் அல்லது மைக்ரோவாஸ்குலர் நோய்க்கு வழிவகுக்கும். இதன் பொதுவான அறிகுறி ஆஞ்சினா அல்லது மார்பு வலி ஆகும்.

புற தமனி நோய்

புற தமனி நோய்

உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படுவது தான் பெருந்தமனி தடிப்பு. இந்நிலையால் கால்கள், கைகள், வயிறு மற்றும் தலைப் பகுதியில் உள்ள தமனிக் குழாய்கள் குறுகலாகி, வலி அல்லது மிகுந்த களைப்பை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Threats From High Blood Pressure

The American Heart Association explains how uncontrolled hypertension or high blood pressure can lead to damage to the coronary arteries, heart attack, heart disease, congestive heart failure, aortic dissection, atherosclerosis, Stroke, Kidney damage, Vision loss, Erectile dysfunction, Memory loss, Fluid in the lungs and Angina.
Story first published: Thursday, January 30, 2020, 15:25 [IST]
Desktop Bottom Promotion