Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
இந்த 3 பொருளை ஒன்னா சாப்பிடுங்க... அப்புறம் உடம்புல ஏற்படும் அற்புதங்களை பாருங்க... அசந்து போவீங்க...
சீரகம், ஓமம், ப்ளாக் சால்ட் ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து தினமும் சாப்பிடுவது நல்லது என்பது தெரியுமா? கீழே சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட்டை ஒன்றாக கலந்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தின் மீது மக்களுக்கு அக்கறை அதிகரித்துள்ளது. இதனால் பலரும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல இயற்கை வழிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இயற்கை வழியில் தீர்வு காணவும் முயற்சிக்கிறார்கள். நமது உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு நம் வீட்டில் உள்ள சில பொருட்கள் நல்ல தீர்வை வழங்குவதோடு, உடலின் ஆரோக்கியத்தை பன்மடங்கு மேம்படுத்தவும் உதவுகின்றன.

அதில் சீரகம், ஓமம் போன்ற விதைகள் முக்கியமானவை. இந்த இரண்டு விதைகளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீசு, ஜிங்க், மக்னீசியம் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. ப்ளாக் சால்ட்டில் சோடியம் மிகவும் குறைவு. இது தவிர, பல தாதுக்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களும் இதில் உள்ளன. ஆகவே இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து தினமும் சாப்பிடுவது நல்லது என்பது தெரியுமா? கீழே சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட்டை ஒன்றாக கலந்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அஜீரண கோளாறு சரியாகும்
இன்று பலர் வீட்டிலிருந்தே வேலை செய்வதால், உடல் செயல்பாடுகள் அதிகம் குறைந்துவிட்டது. அதனால் அஜீரண கோளாறு அல்லது வாயு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலந்து உட்கொண்டு வந்தால், அஜீரண கோளாறுகளால் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்பைக் குறைக்க உதவும்.

பல் பிரச்சனை நீங்கும்
சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவை பல் வலியில் இருந்து சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது. இக்கலவையில் கால்சியம் இருப்பதால், இது பற்களை வலுவாக்குகிறது. அதோடு, இது வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. அதற்கு சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவையைக் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்துவிடுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுபடுத்த பல வழிகளில் உதவுகிறது. இக்கலவையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள், உடலை நோய்களை எதிர்த்துப் போராடவும், பல வகையான நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

இரத்த அழுத்தம் குறையும்
சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்கலவையை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படுத்தப்படும். அதோடு இதில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன் செய்யும்.

உடல் எடை குறையும்
சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவை உடலில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புக்களை ஜீரணிக்க உதவுகிறது. அதோடு இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சரிசெய்கிறது. ப்ளாக் சால்ட்டில் உள்ள உடல் பருமனைத் தடுக்கும் பண்புகள், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications
