Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
இந்து மதத்தில் கடவுளாக வழிபடப்படும் துளசி, பல நோய்களுக்கு ஒரு சிரஞ்சீவி என்பதை நிரூபிக்கிறது. துளசியை உட்கொள்வது சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், செரிமான பிரச்சனைகளை போக்கும்.
நமது நாட்டில் துளசி மிகவும் புனிதமாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதுமட்டுமின்றி, துளசியில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக, இது மக்களால் உட்கொள்ளப்பட்டும் வருகிறது. இந்து மதத்தில் கடவுளாக வழிபடப்படும் துளசி, பல நோய்களுக்கு ஒரு சிரஞ்சீவி என்பதை நிரூபிக்கிறது. துளசியை உட்கொள்வது சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், செரிமான பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது.

இப்படிப்பட்ட துளசியின் நீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதை இப்போது நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் காலையில் எழுந்ததும் துளசி நீரைக் குடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

ஏன் துளசி சிறப்பானது?
துளசி இலைகளை தினமும் சாப்பிடுவதால், உடல் சுத்தமாகிறது. அதோடு, துளசி உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதே சமயம் துளசி இலைகள் உடல் எடையைக் குறைக்கிறது. மேலும் இது உடலில் உள்ள கொழுப்புக்கள் அதிகரிப்பதை தடுக்கிறது. மழைக்காலத்தில் நீரில் துளசி இலைகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் தயாரித்து குடித்தால், அது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் சளி மற்றும் தொண்டை புண் பிரச்சனையை சமாளிக்கவும் உதவுகிறது. தினமும் ஒருவர் துளசியை வெறும் வயிற்றில் உட்கொள்வது, அடிவயிற்று வலி மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

வயிற்று பிரச்சனைகளுக்கு துளசியை எப்படி பயன்படுத்துவது?
* அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2-3 துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.
* வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், இளநீரில் துளசி இலைச் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* பருவகால தொற்றுகளில் இருந்து நிவாரணம் பெறவும், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், டீ தயாரிக்கும் போது அத்துடன் சிறிது துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
* முக்கியமாக தினமும் துளசி சாறு மற்றும் துளசி இலைகளை உட்கொண்டு வந்தால், நோய்களில் இருந்து விலகி இருக்கலாம்.

துளசி நீரைத் தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டு 2-3 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். குளிர்ந்ததும், அந்த நீரை வடிகட்டி வெதுவெதுப்பான நிலையிலோ அல்லது குளிர்ந்த நிலையிலோ குடிக்கலாம்.
இப்போது துளசி நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.

சளி மற்றும் தொண்டை புண்
மழைக்காலத்தில் பலரும் சளி மற்றும் தொண்டை புண்ணால் அவதிப்படுவார்கள். நீங்கள் அப்படி அடிக்கடி அவதிப்படுபவரானால், துளசி நீரை காலையில் எழுந்ததும் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, உங்களுக்கு சூடாக ஏதேனும் குடிக்க வேண்டுமென்று தோன்றினால், துளசி நீரை தயாரித்துக் குடியுங்கள்.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோயாளிகளுக்கு துளசி நீர் மிகவும் நல்லது. ஏனெனில் துளசி நீரைக் குடிப்பதால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். ஆகவே நீங்கள் இயற்கை வழியில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க நினைத்தால், துளசி நீரைக் குடியுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும்
தினமும் துளசி நீரைக் குடித்து வருவது, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்யும். உங்கள் உடல் சுத்தமாக இருக்க நினைத்தால், துளசி நீர் அதற்கு பெரிதும் உதவி புரியும்.

வயிற்று பிரச்சனைகள்
துளசி நீரைக் குடித்து வருவது, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க வைக்கும். முக்கியமாக துளசி நீரைக் குடித்தால், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர, வயிறு ஆரோக்கியமாக செயல்படும்.

காய்ச்சல்
உடலில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், முதலில் உடலில் தென்படும் அறிகுறி காய்ச்சல். காலையில் எழுந்ததும் துளசி நீரைக் குடிப்பது, வைரல் தொற்றுக்களால் ஏற்படும் காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். மேலும் துளசியில் உள்ள மருத்துவ பண்புகளால் வைரல் தொற்றுக்கள் விரைவில் நீங்கும்.



Click it and Unblock the Notifications











