For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது

|

மக்களிடையே கிரீன் டீ மிகவும் பிரபலமைந்து வருகிறது. தங்கள் உடல் எடையை குறைக்கவும் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை பெறவும் கிரீன் டீயை அருந்துகிறார்கள். கிரீன் டீ இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. பல ஆய்வுகளின் படி, கிரீன் டீ உயர் இரத்த அழுத்தம் முதல் இதய செயலிழப்பு வரை இதயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறதாக கூறப்படுகிறது. இது இதயத்திற்கு நல்லது பொதுவாக மூளைக்கு நல்லது; உங்கள் மூளைக்கும் ஆரோக்கியமான இரத்த நாளங்கள் தேவை.

Health Benefits Of Drinking Green Tea Before Bed in Tamil

நீங்கள் ஒரு சூடான கப் கிரீன் டீயுடன் நாள் முழுவதையும் விரும்புவீர்களா? தூங்குவதற்கு முன் ஒரு கப் லேசான, நறுமணமுள்ள கிரீன் டீ அருந்துவது நரம்புகளைத் தளர்த்தவும் தூக்கத்தை தூண்டவும் உதவுகிறது, ஆனால் தூங்குவதற்கு முன் தினமும் கிரீன் டீ குடிப்பது பாதுகாப்பானதா, அது உண்மையில் உதவுமா? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் ஏன் கிரீன் டீ குடிக்க வேண்டும்?

நீங்கள் ஏன் கிரீன் டீ குடிக்க வேண்டும்?

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் இருப்பதால் ஏற்படும் உயிரணு சேதத்தை குறைக்கிறது.

MOST READ: நிபுணர்கள் சொல்லும் இந்த வழியில் முட்டை சாப்பிடுவதுதான் உங்களுக்கு நல்லதாம்...!

மன அழுத்தத்தை குறைக்கிறது

மன அழுத்தத்தை குறைக்கிறது

கிரீன் டீயில் கேடசின்ஸ் என்ற கலவை இருப்பதால், எபிகல்லோகாடெசின் கேலேட் (EGCGC) மற்றும் எபிகல்லோகாடெச்சின் (EGC) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும், தியானைன், அமினோ அமிலம், நரம்பு தளர்த்தியாக செயல்படுகிறது. இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இது மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் நிம்மதியான தூக்கத்தை உங்களுக்கு வழங்கும்.

படுக்கை நேரத்தில் கிரீன் டீ குடிப்பது பாதுகாப்பானதா?

படுக்கை நேரத்தில் கிரீன் டீ குடிப்பது பாதுகாப்பானதா?

கிரீன் டீ குடிக்க சரியான நேரம் எது என்பது ஒரு பெரிய கேள்வி. ஆனால் கிரீன் டீ குடிக்கும் சரியான நேரத்தை ஆதரிக்க அதிக ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், கிரீன் டீயில் உள்ள காஃபின் சிறிதளவு தூக்கத்தை பாதிக்கும் மற்றும் மூளையின் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

MOST READ: 'இந்த' சத்து உணவுகள அதிகமா சாப்பிடுவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

எப்போது குடிக்கலாம்?

எப்போது குடிக்கலாம்?

தவிர, தூங்குவதற்கு முன் அதிக திரவத்தை குடிப்பதால் அசெளகரியம் மற்றும் கழிவறைக்கு அடிக்கடி செல்லும் தொந்தரவு அதிகரிக்கும். எனவே, அதை மிதமாக உட்கொள்வது மற்றும் படுக்கைக்கு முன் கிரீன் டீ குடிக்கும் அளவைக் குறைப்பது அல்லது படுக்கைக்கு 2-3 மணி நேரத்திற்கு முன் குடிப்பது அவசியம்.

நீங்கள் எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும்?

நீங்கள் எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, 2-3 கப் கிரீன் டீ குடித்தால் போதுமான பலன் கிடைக்கும். ஆனால் அதை அதிகமாக குடிப்பது குமட்டல், தூக்கமின்மை மற்றும் இரத்த சோகை போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, தூங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கிரீன் டீ குடிப்பது, உங்கள் மன அழுத்தத்தை போக்கி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Drinking Green Tea Before Bed in Tamil

Here we talking about the Health Benefits Of Drinking Green Tea Before Bed in Tamil.
Story first published: Friday, October 22, 2021, 16:33 [IST]
Desktop Bottom Promotion