Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
காலிஃப்ளவர் மாவு உட்கொள்வதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரியுமா?
ஒரு காயாக, காலிஃப்ளவர் இயற்கையிலேயே நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு உணவுப்பொருள். மேலும் இந்த உணவில் வைட்டமின் பி சத்து மிக அதிகம் உள்ளது. காலிஃப்ளவர் கொண்டு தயாரிக்கப்படுவது காலிஃப்ளவர் மாவு.
மனித உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவின் பங்கு இன்றியமையாதது. அதிலும் நல்ல நிறமுள்ள காய்கறி மற்றும் பழங்கள் உட்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படுகிறது. காய்கறிகள் ஆன்டிஆக்சிடன்ட்டுகளின் ஆதாரமாக விளங்குகின்றன மற்றும் இவற்றைப் புறக்கணிப்பது இயலாத காரியமாகும்.

இது மட்டுமின்றி, நோய்களை எதிர்த்து போராட இவை உதவுகின்றன மற்றும் உடலுக்கு ஆற்றலைத் தருகின்றன. நமது இந்திய உணவில் பல்வேறு வகையான காய்கறிகள் உள்ளன. அவற்றுள் முக்கிய இடம் பிடிப்பது காலிஃப்ளவர் என பலராலும் அறியப்பட்ட பூக்கோசு.

காலிஃப்ளவரை உணவில் எதற்காக இணைத்துக் கொள்ள வேண்டும்?
காலிஃப்ளவரில் தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இவை உடலில் சக்திமிக்க ஆன்டிஆக்சிடன்ட்டுகளின் ஒருங்கிணைப்பாக கருதப்படுகின்றன. மேலும் இதில் சல்பர் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை நோய்கள் உண்டாக காரணமாக இருக்கும் வைரஸ் கிருமிகளை சமன் செய்ய உதவுகின்றன.
இந்த வகையில் காலிஃப்ளவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக கருதப்படுகிறது. மேலும் பல்வேறு விதங்களில் இந்த காலிஃப்ளவர் ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தொடர்ந்து காண்போம்.

காலிஃப்ளவர் மாவு எவ்வித நன்மையைத் தருகிறது ?
ஒரு காயாக, காலிஃப்ளவர் இயற்கையிலேயே நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு உணவுப்பொருள். மேலும் இந்த உணவில் வைட்டமின் பி சத்து மிக அதிகம் உள்ளது. காலிஃப்ளவர் கொண்டு தயாரிக்கப்படுவது காலிஃப்ளவர் மாவு.

நல்ல செரிமானம்
காலிஃப்ளவர் மாவில் தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் காணப்படுவதால் பல்வேறு நோய்களை எதிர்த்து உடலைப் பாதுகாக்கிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் கோலைன் உள்ளது, இது படிக்கும் திறன் மற்றும் கவனம் ஆகியவற்றை அதிகரிக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்
காலிஃப்ளவர் மாவில் உள்ள நார்ச்சத்து காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படுத்தப்பட்டு அழற்சி குறைவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இதன் விளைவாக அழற்சி நிலைகளால் உண்டாகும் இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும் அபாயம் குறைகிறது.

ஆரோக்கியமான எலும்புகள்
காலிஃப்ளவர் மாவில் வைட்டமின் சி சத்து இருப்பதால் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது . இதன் காரணமாக காலிஃப்ளவர் மாவு உட்கொள்வதால் எலும்புகள் ஆரோக்கியமாக மாறுகிறது. அதே நேரத்தில் காலிஃப்ளவர் மாவில் வைட்டமின் கே சத்து இருப்பதால் எலும்புகள் இழப்பும் தடுக்கப்படுகிறது.

நுரையீரலுக்கு நல்லது
உடலின் கழிவுகளை அகற்றும் அதே நேரத்தில் புற்றுநோய் காரணிகளால் உண்டாகும் சேதங்களைத் தடுக்கவும் உதவுகிறது இந்த மாவு. இந்த மாவில் ஒரு நவீன கூறு உள்ளது. அதன் பெயர் க்ளுகோசினோலேட். இவை நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கின்றன.

உடல் எடை குறையும்
உயர் நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது, இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது, உடல் பருமன் உள்ளவர்களின் உடல் எடை குறைகிறது.

காலிஃப்ளவர் மாவை வீட்டில் தயாரிப்பது எப்படி?
வழக்கமான மாவுகளுக்கு மாற்றாக இது ஒரு சிறப்பான மாவாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதில் கொழுப்பு அறவே இல்லை. காய்கறிகளின் சிறந்த ஆதாரமாக விளங்கும் இந்த மாவு, ஒரு குறைந்த கார்போ உணவாகவும், தண்ணீரில் கரையும் நார்ச்சத்தாகவும் விளங்குகிறது. சரியான முறையில் தயாரிப்பதால் மற்ற மாவுகளுக்கு மாற்றாக இதனைப் பயன்படுத்தி பல்வேறு வகையான உணவுகளைத் தயாரிக்க முடியும்.

தயாரிப்பு முறை:
* காலிஃப்ளவரை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவி விடவும்.
* பின்பு அடுத்த சில நாட்கள் சூரிய வெளிச்சத்தில் இதனை நன்கு உலர வைக்கவும்.
* காலிஃப்ளவர் நன்கு உலர்ந்தவுடன் அரைத்து பொடியாக்கவும்.

காலிஃப்ளவர் மாவை உங்கள் உணவில் இணைத்துக் கொள்வது எப்படி?
காலிஃப்ளவர் கொண்டு தயாரிக்கும் இந்த மாவு மிகவும் அடர்த்தியாக காணப்படும். ஆனால் மற்ற மாவுகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக இதனைப் பயன்படுத்தலாம். இதனை எளிதாக சூப்பர் மார்கெட் அல்லது மளிகை கடைகளில் வாங்கி கொள்ள முடியும். அல்லது மேலே கூறியது போல் வீட்டில் கூட இதனைத் தயாரிக்க முடியும்.

காலிஃப்ளவர் மாவு கொண்டு தயாரிக்கும் சிறந்த உணவுகள்:
கடலை மாவிற்கு மாற்றாக இந்த மாவை நீங்கள் பயன்படுத்த முடியும். இந்த மாவுடன் வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து சுடச் சுட பக்கோடா தயாரிக்கலாம். வீட்டில் பிட்சா தயாரிக்கும் போது இந்த மாவைப் பயன்படுத்தலாம். மேலும் ஓட்ஸ் போன்றவற்றுடன் இந்த மாவை கலந்து சுவையான பிரட், பிஸ்கட் போன்றவற்றைத் தயாரிக்க முடியும்.

முடிவுரை
எளிதாக கிடைக்கும் காலிஃப்ளவர் கொண்டு எளிமையான முறையில் தயாரிக்கப்படும் இந்த மாவில் வைட்டமின் பி, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் இருப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. இதில் உயர் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட் , தாவர ஊட்டச்சத்து மற்றும் கோலைன் போன்றவை உள்ளன. உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் ஒரு உணவுப்பொருளாக இது விளங்குகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமை படுத்தவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications