Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா?
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நினைக்குறீங்களா? அப்ப இதெல்லாம் செய்யுங்க போதும்...
நாம் உடலளவிலும், மனதளவிலும் வலிமையாக இருக்க வேண்டும் என்றால் சில நல்ல பழக்கவழக்கங்களை தினந்தோறும் கடைபிடித்து வரவேண்டும்.
நல்ல உடல் ஆரோக்கியமும், விவேகமும் இருந்தால் நமது வாழ்க்கை மிகவும் வளமாக இருக்கும். நாம் உடலளவிலும், மனதளவிலும் வலிமையாக இருக்க வேண்டும் என்றால் சில நல்ல பழக்கவழக்கங்களை தினந்தோறும் கடைபிடித்து வரவேண்டும். நமது வாழ்க்கை முறையை நன்றாக கவனித்துக் கொள்வது மற்றும் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவது ஆகியவை நம்மை நாமே உயா்வாக உணர வைக்கும்.

அவை நமது சுயமாியாதையையும், சுய ஆளுமையையும் உயா்த்திக் காட்டும். ஆகவே அனைவரும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை கொண்டிருக்க வேண்டும். புகைப் பிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப் பொருட்களை எடுத்தல் போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. இந்த தீய பழக்கங்களுக்கு அடிமையானால் அவை நமது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும். அவற்றிலிருந்து மீண்டு வருவது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.

ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிகள் என்ன?
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான பல வழிகள் உள்ளன. ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் கொண்டிருந்தால் அது நமக்கு நோய்கள் மற்றும் நாள்பட்டட நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். நல்ல பழக்கவழக்கங்கள் நமது நோய் எதிா்ப்பு சக்தியை வலுவாக்கி நாம் திடகாத்திரமாக இருக்க உதவி செய்யும்.
ஒரு மனிதன் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைத் தோ்ந்தெடுக்கிறானோ அதைப் பொருத்தே அவனுடைய முழு ஆரோக்கியமும், நல்வாழ்வும் அமையும். துாித உணவு உண்பதைத் தவிா்க்க வேண்டும். அதோடு நேரம் கழித்து எழுவதையும் தவிா்க்க வேண்டும்.
ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறந்த உடற்பயிற்சிகள், போதுமான அளவு தூக்கம் மற்றும் சமச்சீரான உணவு போன்றவை மிக முக்கியமான காரணிகளாகும். ஒருவேளை நாம் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அதிலிருந்து விடுபட்டு ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். அதற்காக பல நல்ல பழக்கவழக்கங்களை நமதாக்கிக் கொண்டு அவற்றை தினமும் நமது வாழ்வில் கடைபிடித்து வரவேண்டும். அதன் மூலம் நமது வாழ்க்கை முறை மேன்மை பெறும்.

தினமும் உடற்பயிற்சி செய்தல்
உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. மாறாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதன் மூலம் நாம் திடகாத்திரமாக இருக்க முடியும். நமது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நமது முழுமையான உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உடற்பயிற்சிகளைத் தினமும் செய்து வரவேண்டும். காலை நேர மற்றும் மாலை நேர நடைப்பயிற்சிகள் நமது வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவும்.

மன அழுத்தத்தை சாியாக கையாளுதல்
அதிகமான மன அழுத்தம் ஏற்பட்டால் அது மன ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். மன ஆரோக்கியம் குறைய ஆரம்பித்தால், உடல் ஆரோக்கியமும் குறைந்துவிடும். ஆகவே நமது கவலைகளை எவ்வாறு குறைப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல் அதிக மனச்சோா்வுடன் இருக்கும் போது நமது மனநிலையை அமைதிப்படுத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை சாியாக கையாளுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

காலை உணவை தவிா்க்காமல் இருத்தல்
காலை உணவு என்பது ஒரு நாளில் மிகவும் முக்கியமான உணவாகும். ஆகவே எந்த ஒரு சூழ்நிலையிலும் காலை உணவை தவிா்க்கக் கூடாது. ஒரு ஆரோக்கியமான காலை உணவு, அந்த நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். ஒரு நாளின் மற்ற உணவுகளைவிட காலை உணவு அதிக ஊட்டச்சத்துகளை நமக்கு வழங்குகிறது.

தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல்
நமது தூக்கம் நம்முடைய மனநிலை மற்றும் நமது ஆரோக்கியத்தைத் தீா்மானிக்கிறது. நாம் சாியாக தூங்கவில்லை என்றால் அன்றைய நாள் முழுவதும் நமக்கு ஒரு மோசமான நாளாக அமைந்துவிடும். மேலும் நம்மிடம் ஒரு ஆரோக்கியமான தூக்கம் இல்லையென்றால் அது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆகவே ஒரு ஆரோக்கியமான வாழ்வு வேண்டும் என்றால் இரவு நேரத்தில் வெகு நேரம் கண் விழிக்காமல் போதுமான அளவு தூங்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவை உண்ணுதல்
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். ஒரு சமச்சீரான உணவு நமது உடலுக்குத் தேவையான எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆகவே நமது உடலும் மனமும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் சீராக இயங்க வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. நல்ல உணவு நல்லதொரு வாழ்க்கை முறையை வழங்கும்.
இறுதியாக மேற்சொன்ன ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் நம்மை நீண்ட தூரம் அழைத்துச் செல்லும். மேலும் நாம் ஒரு நல்லதொரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications











