Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா?
பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. உங்கள் வாழ்க்கைமுறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் உங்களை பெருங்குடல் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
இந்த உலகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு வகையான புற்றுநோய்கள் இந்த உலகத்தில் உள்ளது. இதில் இளைஞர்கள் அதிகமாக பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இளைஞர்களாக இருக்கிறார்கள். பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. உங்கள் வாழ்க்கைமுறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் உங்களை பெருங்குடல் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும். இந்த மாற்றங்கள் உணவு, வாழ்க்கைமுறை, மருந்துகள் என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். இந்த பதிவில் உங்களை பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பழக்கங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

குறைவாக உட்காரவும்
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது முதுகுவலி, உடல்பருமன், இதய நோய், நரம்பியல் கோளாறுகள் என பல பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. மேலும் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது சில புற்றுநோய்களுடன் நேரடி தொடர்புடையது. அதில் முதல் இடத்தில் இருப்பது பெருங்குடல் புற்றுநோயாகும். நீங்கள் மேஜை பணிகளில் இருப்பவராக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சூரிய ஒளி
போதுமான அளவு சூரிய ஒளியில் தினமும் இருப்பது உங்களை பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். நமது உடலுக்கு வைட்டமின் டி மிகவும் அவசியமானதாகும். உங்கள் சருமம் சூரிய ஒளியில் இருக்கும்போது அதற்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கும். உங்கள் உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருப்பது உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 31 சதவீதம் குறைக்கிறது. வைட்டமின் டி-யை உணவின் மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

பழுப்பு அரிசிக்கு மாறவும்
அதிக நார்ச்சத்து இருக்கும் உணவுகள் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்குமா என்பது நீண்ட காலமாக இருக்கும் விவாதம் ஆகும். இறுதியாக பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளான ஓட்ஸ் மற்றும் அரிசி போன்றவை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பழுப்பு அரிசிக்கு மாறுவது உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.

பச்சைக் காய்கறிகள்
முட்டைக்கோசு போன்ற பச்சை காய்கறிகளை நறுக்கி, சமைத்து, மென்று, ஜீரணிக்கும்போது உற்பத்தி செய்யப்படும் ஒரு வேதிப்பொருள் புற்றுநோய் செல்களை பலவீனப்படுத்தி, அவை பெருக்கப்படுவதைத் தடுக்கிறது. சினிகிரின் எனப்படும் இந்த முக்கிய வேதிப்பொருள் உடலில் ஆன்டிகான்சர் பொருளான அல்லில்-ஐசோதியோசயனேட்டாக மாற்றப்படுகிறது. வேகவைத்த பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவது புற்றுநோய் செல்களை தடுக்கும்.

மீன் சாப்பிடவும்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நல்ல செரிமானத்திற்கு அவசியம். மத்தி, கெளுத்தி, சால்மன் போன்ற மீன்களில் புற்றுநோய்களை தடுக்கும் கொழுப்பு அதிகம் உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 0.3 கிராம் ஒமேகா 3 அமிலம் எடுத்துக் கொள்பவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 41 சதவீதம் குறையும்.

புகைபிடிப்பது
புகைபிடிப்பது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை பலமடங்கு அதிகரிக்கிறது. மேலும் பெண்களுக்கு இந்த வாய்ப்பு மிகவும் அதிகமாகும். புகைபிடிக்காத பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். புகைபிடிப்பவர்களைக் காட்டிலும் புகைபிடிக்காதவர்கள் 10 ஆண்டுகள் அதிகம் வாழ வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

காபி
பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு காபி குடிப்பவர்களுக்கு குறைவாகும். ஆய்வுகளின் படி காபி குடிப்பவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 21 சதவீதம் குறைவாகும். தினமும் 2.5 கப் குடிப்பது உங்களை பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.

எடையை பராமரிக்கவும்
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும். உங்கள் உடலின் பிஎம்ஐ அளவு 25க்கு மேல் இருந்தால் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகும். பாலிப்கள் பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் அவை இறுதியில் புற்றுநோயாக உருவாகலாம்.



Click it and Unblock the Notifications