For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ஆபிஸில் இருக்கும் இந்த இடங்கள் மூலம்தான் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாம்...!

கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதுதான் ஒரே வழி.

|

இன்று உலகமே கொரோனா வைரஸை நினைத்து அச்சத்தில் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 46 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலும் அனைவரின் மனதிலும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் நம்முடைய பாதுகாப்பு என்பது நமது கைகளில்தான் உள்ளது.

Germiest Places in Your Office

கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதுதான் ஒரே வழி. இந்த நிலையில் நீங்கள் அடிக்கடி தொடக்கூடிய இடங்களில் இருந்துதான் உங்களுக்கு கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இடங்களை தொட்டவுடன் உடனுக்குடன் கைகளை சுத்தம் செய்வதே உங்களை பெரும்பாலான நோய்களில் இருந்து பாதுகாக்கும். இந்த பதிவில் உங்கள் அலுவலகத்தில் கிருமிகள் அதிகம் வசிக்கும் ஆபத்தான இடங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிப்ட் பட்டன்

லிப்ட் பட்டன்

அலுவலகம் செல்லும் அனைவரும் தினமும் உபயோகிக்கும் ஒரு விஷயம் லிப்ட் ஆகும். மேலே செல்வது, கீழே செல்வது என ஒருநாளைக்கு பலமுறை நாம் தொடும் இந்த லிப்ட் பட்டன்கள் கணக்கிலடங்கா கிருமிகளை கொண்டிருக்கும். மற்ற இடங்களைக் காட்டிலும் இந்த இடத்தில் அதிக கிருமிகள் வாழ வாய்ப்புள்ளது. இந்த பட்டன்களை விரலால் தொடுவதற்கு பதிலாக முழங்கையால் அழுத்தலாம் அல்லது கையுறைகளை அணிந்து கொண்டு அழுத்தலாம். ஒருவேளை இரண்டுமே இல்லையென்றால் லிப்டை விட்டு வெளியே வந்தவுடன் நேரடியாக சென்று கைகளை நன்கு கழுவவும்.

கதவு கைப்பிடிகள்

கதவு கைப்பிடிகள்

உங்கள் பணியிடத்தில் இருக்கும் அனைவரும் இதனை பயன்படுத்துவார்கள். இதனால் ஒருவருக்கொருவர் அதிகளவு கிருமிகளை பரப்பிக்கொள்ள வாய்ப்புள்ளது. கதவு கைப்பிடிகளை தொட்டதற்கு பின்னர் உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீரில் குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். துப்புரவு பணியாளர்களையும் கைப்பிடிகளை அடிக்கடி சுத்தம் செய்ய சொல்லுங்கள்.

டெஸ்க்டாப்

டெஸ்க்டாப்

நீங்கள் வேலை செய்யும் டெஸ்க்டாப்பில் கழிவறைகளை விட 400 மடங்கு கிருமிகள் அதிகமுள்ளது உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு சதுர அங்குலத்திற்கு சுமார் 21,000 பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் உள்ளது. அலுவலகப் பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் டெஸ்க்டாப்பை தொடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். டெஸ்க்டாப்பை தொட்டால் உடனடியாக கைகளைக் கழுவ வேண்டும்.

MOST READ: இந்த சாதாரண கிழங்கு "இயற்கை வயகரா" வாக செயல்பட்ட உங்கள் பாலியல் செயல்திறனை பலமடங்கு அதிகரிக்குமாம்..

கீ போர்டு

கீ போர்டு

தும்முவது, சாப்பிடுவது என அனைத்தையும் இதன் மீது வைத்து செய்கிறோம். பெரும்பாலானவர்கள் நாள் முழுவதும் இதனை தொட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதனை எப்போதும் நாம் சுத்தம் செய்வதில்லை. குறிப்பாக உங்கள் சகபணியாளர்களுடன் இதனை பகிர்ந்து கொண்டால் கிருமிகள் பரவும் விகிதம் பலமடங்கு அதிகரிக்கும்.

டெலிபோன்

டெலிபோன்

உங்கள் அலுவலக தொலைபேசி உங்கள் டெஸ்க்டாப்பை விட மோசமாக இருக்கலாம், ஒரு சதுர அங்குலத்திற்கு சராசரியாக 25,000 கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. தொலைபேசியை ஒரு நாளைக்கு சில முறை சானிட்டீசர் மூலம் துடைக்கவும், குறிப்பாக மற்றவர்களும் இதைப் பயன்படுத்தினால் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

அலுவலகப் பொருட்கள்

அலுவலகப் பொருட்கள்

நகலெடுக்கும் மிஷின்கள், பிரிண்டர்கள், பேக்ஸ் மிஷின் போன்றவற்றின் பட்டன்களில் அதிகளவு கிருமிகள் வசிக்கக்கூடும், சொல்லப்போனால் அவை இங்கு நன்றாக செழித்து வளர்க்கூடும். ஒவ்வொரு முறை இதை உபயோகிக்கும் முன்னரும் சானிடைசர் கொண்டு இதனை சுத்தம் செய்வது உங்களை கொரோனா போன்ற வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்கும்.

MOST READ: உங்க ராசிப்படி உங்களோட மரணம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? பயப்படாம படிங்க...!

வாட்டர் கூலர்

வாட்டர் கூலர்

உங்கள் டம்ளர்களை நிரப்ப, வழக்கமான அலுவலக நீர் விநியோகிப்பாளர்கள் வழக்கமான குழாய் நீரை விட பாதுகாப்பானவை அல்ல. கிருமிகள் உங்கள் வாட்டர் பாட்டில்களின் மூலம் எளிதில் பரவக்கூடும். குளிர் மற்றும் காய்ச்சல் காலங்களில் நோயைத் தவிர்க்க, நீங்கள் உங்கள் சொந்த தண்ணீரை வீட்டிலிருந்து கொண்டு வரலாம் அல்லது பாட்டில்களில் வாங்கலாம்.

காபி கப்

காபி கப்

காபி கப் உலர்ந்ததாக இருக்கும்போது அவை பாதுகாப்பானதாக நீங்கள் நினைக்காலம். ஆனால் ஒரு ஆய்வில் 90% குறிப்பிடத்தக்க கிருமிகளைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தது, சிலவற்றில் ஆபத்தான பல கிருமிகள் உள்ளது. கப்களை சரியாக சுத்தம் செய்யாத போதும் அல்லது உபயோகிப்பவரின் சுகாதாரத்தைப் பொறுத்தும் இதில் கிருமிகளின் அளவு இருக்கும். இவை வைக்கப்படும் இடங்களைப் பொறுத்தும் கிருமிகள் அதிகம் பரவும்.

கை கழுவும் இடம்

கை கழுவும் இடம்

உங்கள் வீட்டைப் போலவே, பலவிதமான கைகளும் உணவும் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் பரவ இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. நீங்கள் அதிகம் தொடுகின்ற இடமான குழாய் கைப்பிடியில் அதிகமான கிருமிகள் உள்ளது. ஏனெனில் அனைவரும் இதனை தொடுகிறார்கள்.

MOST READ: இராஜராஜ சோழனை மிஞ்சிய ஒரு சோழ அரசன்... அந்த சோழனின் பயணம் எப்படி இருந்தது தெரியுமா?

கழிவறை

கழிவறை

ஈ. கோலி போன்ற பாக்டீரியாக்கள் கழிவறையை அதிகம் ஆக்கிரமித்துள்ளது. நீங்கள் சுத்தம் செய்துவிட்டதாக நினைத்தால் கூட உண்மையில் உங்கள் கைகளில் அதிகளவு கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. கழிவறை குழாய்களில் அதிகளவு கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது, எனவே அவற்றை தொட்டவுடன் உடனடியாக கைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Germiest Places in Your Office

Here is the list of most germiest places in your office
Story first published: Tuesday, March 10, 2020, 17:47 [IST]
Desktop Bottom Promotion