Just In
- 7 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 9 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 12 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
- 16 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்த்திட வேண்டாம்...
Don't Miss
- News
சொந்த ஊரில் இருந்து சென்னை வருகிறீர்களா? ஸ்பெஷல் பஸ் இருக்கு..போக்குவரத்துத்துறை
- Movies
வெளியானது விருமன் படத்தோட வானம் கிடுகிடுங்க பாடல்.. யுவனின் மேஜிக்!
- Finance
ரூ.9 டூ ரூ.3721.. கடனில்லா பார்மா நிறுவனத்தின் சூப்பர் ஏற்றம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Automobiles
ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர்... முழுசார்ஜில் 500 கி.மீ பயணிக்கும் கார்... ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
முன்னாள் பாக். அதிபர் முஷாரஃப்பை மெதுவாக கொல்லும் அமிலாய்டோசிஸ்.. அப்படின்னா என்ன? இதன் அறிகுறி என்ன?
பாகிஸ்தானில் கடந்த 2001 முதல் 2008 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் தான் பர்வேஸ் முஷாரஃப். இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவரது உடலுறுப்புக்கள் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக செயலிழக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மறுபுறம் முஷாரஃப் இறந்துவிட்டதாகவும் வதந்தி பரவியது. ஆனால் இவர் இன்னும் இறக்கவில்லை, அது பொய் என்று இவரது குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பாக். அதிபர் முஷாரஃப்பிற்கு 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உயிருக்கு ஆபத்தான அமிலாய்டோசிஸ் என்னும் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சரி, முன்னாள் பாக். அதிபர் முஷாரஃப் பாதிக்கப்பட்டுள்ள அமிலாய்டோசிஸ் என்றால் என்ன, இது எதனால் வருகிறது, இதன் அறிகுறிகள் என்ன என்பன போன்ற தகவல்களை விரிவாக காண்போம்.

அமிலாய்டோசிஸ் என்றால் என்ன?
அமிலாய்டோசிஸ் என்பது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களில் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படும் அமிலாய்டு என்னும் ஒரு அசாதாரண புரோட்டீன் தேக்கத்தால் ஏற்படும் ஒரு அரிய மற்றும் தீவிரமான நிலையாகும். இந்த அமிலாய்டு இதயம், மூளை, சிறுநீரகம், மண்ணீரல் மற்றும் உடலின் வேறு எந்த பகுதிகளிலும் உருவாகலாம். இந்த புரோட்டீன் தேக்கத்தால் உறுப்புகள் மற்றும் திசுக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். இந்த பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், அது உறுப்புகளின் செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.

அமிலாய்டோசிஸின் காரணம் என்ன?
அமிலாய்டோசிஸ் வேறுபட்ட சுகாதார நிலைக்கு இரண்டாம் நிலையாக இருக்கலாம் அல்லது முதன்மை நிலையாக உருவாகலாம். சில நேரங்களில் இது ஒரு மரபணுவில் ஏற்படும் பிறழ்வு காரணமாக ஏற்படலாம். ஆனால் இதைத் தவிர, அமிலாய்டோசிஸின் பிற காரணம் எதுவும் தெரியவில்லை.

அமிலாய்டோசிஸின் அறிகுறிகள்
இந்த பிரச்சனைக்கு சில பொதுவான அறிகுறிகள் இருந்தாலும், அமிலாய்டு புரோட்டீன் உடலில் எங்கு தேங்கியுள்ளதோ, அதைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுபாடும். சில பொதுவான அமிலாய்டோசிஸின் அறிகுறிகள் பின்வருமாறு:
* மிகவும் பலவீனமாக அல்லது சோர்வாக இருப்பது
* எவ்வித முயற்சியும் இல்லாமல் எடை குறைவது
* வயிறு, கால், கணுக்கால் அல்லது பாதங்களில் வீக்கம்
* கைகல் அல்லது கால்களில் உணர்வின்மை, வலி அல்லது கூச்ச உணர்வு
* எளிதில் சருமத்தில் காயம் ஏற்படுவது
* காயங்களில் வழக்கத்தை விட அதிகமாக இரத்தப் போக்கு
* நாக்கின் அளவு அதிகரிப்பது
* மூச்சுத்திணறல்
அமிலாய்டோசிஸ் முன்னேறும் போது, அமிலாய்டின் படிகங்கள் இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், செரிமான பாதை, மூளை அல்லது நரம்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

நோய் கண்டறிதல்
அமிலாய்டோசிஸ் பிரச்சனையை கண்டறிவது என்பது மிகவும் கடினம். ஏனெனில் இதன் அறிகுறிகள் பிற பிரச்சனைகளின் அறிகுறிகளையும் ஒத்துள்ளது. எந்த வகையான அமிலாய்டோசிஸ் உள்ளது என்பதை அறிய, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திசுக்களின் மாதிரியை எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்ப்பார்கள். அதைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்.

சிகிச்சைகள்
அமிலாய்டோசிஸுக்கு தற்போது சிகிச்சை எதுவும் இல்லை. மேலும் அமிலாய்டு படிவுகளை நேரடியாக அகற்ற முடியாது. எனவே மருத்துவர்கள் பின்வரும் சிகிச்சைகளை செய்ய பரிந்துரைக்கலாம்.
கீமோதெரபி: இது புற்றுநோய் செல்களை கொல்ல அல்லது வளர விடாமல் தடுக்க பயன்படுகிறது. எனவே அசாதாரண புரோட்டீன் படிவுகளின் வளர்ச்சியைத் தடுக்க கீமோதெரபியைப் பின்பற்றலாம்.
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: இந்த முறையில் நோயாளியில் உடலில் இருந்து ஆரோக்கியமான ஸ்டெம் செல்கள் எடுக்கப்படுகின்றன. கீமோதெரபியில் அழிக்கப்பட்ட ஆரோக்கியமற்ற செல்களுக்கு பதிலாக, இந்த செல்கள் மீண்டும் உடலில் செலுத்தப்படுகின்றன.
அமிலாய்டோசிஸ் பிரச்சனைக்கு சில மருந்துகளும் உள்ளன. இந்த மருந்துகள் அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.