For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க இதுல ஒரு பொருளையாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...!

|

இந்தியாவில் காற்றின் தரம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு மக்கள் சுவாசிக்க முடியாத அளவிற்கு காற்றின் தரம் குறைந்து விட்டது. நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக அளவு மாசுபாடுகள் இருப்பதால், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் எம்பிஸிமா போன்ற சுவாச நோய்களில் இருந்து இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் வரையிலான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

இந்த சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து நமது நுரையீரலைப் பாதுகாப்பது முக்கியம். உணவுகள் முதன்மைக் கவசமாகச் செயல்படுவதோடு, அனைத்து வகையான நோய்களிலிருந்தும் உடலைப் பாதுகாக்கும் என்பதால், நன்கு சமநிலையான உணவை உண்ணுவதே தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையான படியாகும். காற்று மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெல்லம்

வெல்லம்

வெல்லம் மூச்சுக்குழாய் தசைகளை தளர்த்த உதவுகிறது மற்றும் சுவாசத்தை எளிதாக்குகிறது மற்றும் நுரையீரலுக்கு காற்றோட்டத்தை அதிகரிக்கிறது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துவது பல வழிகளில் உங்களுக்கு உதவும்.

கொழுப்பு நிறைந்த மீன்

கொழுப்பு நிறைந்த மீன்

இவை கொழுப்பு நிறைந்தவை மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இவை பாலி-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, அவை அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தவை. இந்த பண்புகள் அனைத்தும் நுரையீரலை அனைத்து வகையான நுரையீரல் நோய்கள் மற்றும் காற்று மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்கின்றன.

ஆப்பிள்

ஆப்பிள்

லண்டனில் மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வின்படி, 45-49 வயதுடைய 2,500க்கும் மேற்பட்ட ஆண்களிடம் ஆய்வு செய்ததில், நல்ல நுரையீரல் செயல்பாடு வைட்டமின்கள் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின், சிட்ரஸ் பழங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது. வ=இவையனைத்தும் ஆப்பிளில் நிறைந்துள்ளது.

MOST READ: உடலின் இந்த பாகங்களில் வலி ஏற்படுவது மாரடைப்பு வரப்போவதன் அறிகுறியாம்... எந்தெந்த பாகங்கள் தெரியுமா?

வால்நட்

வால்நட்

இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் மற்றொரு வளமான ஆதாரமாகும் மற்றும் வால்நட்டின் வழக்கமான நுகர்வு ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நிலைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

பீட்ரூட்

பீட்ரூட்

நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் நைட்ரேட் கலவைகள் இதில் உள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களைத் தளர்த்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் பீட்ரூட்டில் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு தேவையான மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

பூண்டு

பூண்டு

இதில் அல்லிசின் நிறைந்துள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது. பூண்டின் வழக்கமான நுகர்வு நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சியின் அபாயத்தையும் குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, இது ஆஸ்துமா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப பழைய ஸ்டைலில் காதலிப்பாங்களாம்... இவங்கள காதலிக்கிறது ரொம்ப போரான விஷயம்!

மிளகாய்

மிளகாய்

மிளகாயில் கேப்சைசின் என்ற சேர்மம் நிறைந்துள்ளது, இது சளியை சுரக்க உதவுகிறது, இதனால் சுவாசக் குழாயில் இருந்து அதை அகற்றி, சளி சவ்வைப் பாதுகாத்து சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது பீட்டா கரோட்டின் நிறைந்த ஆதாரமாகவும் உள்ளது, இது ஆஸ்துமாவிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

பூசணிக்காய்

பூசணிக்காய்

நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பல்வேறு தாவர கலவைகள் இதில் உள்ளன. இது பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் உள்ளிட்ட கரோட்டினாய்டுகளில் நிறைந்துள்ளது, அவை ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

மஞ்சள்

மஞ்சள்

இதில் குர்குமின் என்ற சேர்மம் நிறைந்துள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது ஆஸ்துமாவுக்கு எதிரான இயற்கையான கவசமாகவும் செயல்படுகிறது. அதிகபட்ச நன்மைகளுக்கு மஞ்சளை பாலில் கலந்து குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

MOST READ: ஆயுர்வேதத்தின் படி இந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடுவதால் உங்ககு நன்மைகளை விட தீமைகளே அதிகமாம்...!

இஞ்சி

இஞ்சி

இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் அட்ரீனல் அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இயற்கையான அடாப்டோஜென் ஆகும். இது நுரையீரலுக்கு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods to Improve Lung Health in Tamil

Read to know how foods help combat air pollution.
Story first published: Friday, November 19, 2021, 11:31 [IST]
Desktop Bottom Promotion