காலை 10 மணிக்கு முன் சாப்பிடக்கூடாத மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகள்!

தற்போது நம்மில் பலர் ஆரோக்கியமானது என்று கருதி, காலை வேளையில் ஒருசில தவறான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுகின்றனர்.

ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக காலை உணவாக விளங்குகிறது. ஒருவர் சரியான காலை உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம், நாள் முழுவதும் மனநிலை சிறப்பாக இருப்பதோடு, மனச்சோர்வும் தடுக்கப்படும். முக்கியமாக நாம் காலையில் சாப்பிடும் உணவு நமது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரிகிறது. எனவே ஆரோக்கியமான காலை உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

Foods That Are Better Avoid Before 10 AM

ஆனால் தற்போது நம்மில் பலர் ஆரோக்கியமானது என்று கருதி, காலை வேளையில் ஒருசில தவறான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுகின்றனர். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க காலை 10 மணிக்கு முன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய உணவுகளையும், அதற்கான காரணங்களையும் கீழே உங்களுக்காக கொடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்ணெய் தடவிய டோஸ்ட்

வெண்ணெய் தடவிய டோஸ்ட்

பெரும்பாலான மக்கள் காலை உணவின் போது கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது என்று நினைக்கின்றனர். ஆனால் காலை உணவு என்பது கொழுப்பு இல்லாத உணவாக இருக்கக்கூடாது. காலையில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். வெண்ணெயில் வைட்டமின்களை பதப்படுத்த உதவும் கொழுப்புக்கள் உள்ளது. ஆனால் இதில் ஆரோக்கியமற்ற சாச்சுரேட்டட் கொழுப்புக்களும் உள்ளது. இது உங்கள் இதயத்திற்கு சேதத்தை விளைவிக்கும் மற்றும் உடல் எடையை அதிகரிக்கும்.

சிறந்த மாற்று

சிறந்த மாற்று

காலையில் சாப்பிடும் டோஸ்ட்டின் மீது வேர்க்கடலை வெண்ணெய் தடவலாம். ஆய்வு ஒன்றில், வேர்க்கடலை மற்றும் சுத்தமான வேர்க்கடலை வெண்ணெய் பகல் நேரத்தில் பசியுணர்வைக் குறைக்க உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இது பசியுணர்வை சீராக்கும் ஹார்மோனான பெப்டைடு YY உற்பத்தியை அதிகரிக்கிறது. ஆகவே இது ஒரு சிறப்பான காலை உணவாக இருக்கும்.

செரில்கள்

செரில்கள்

செரில்கள் ஏராளமான மக்கள் சாப்பிடும் ஒரு காலை உணவாகும். அதில் பெரும்பாலான செரில்களில் சர்க்கரை அதிகம் உள்ளது. இது அடிவயிற்றில் கொழுப்புத் தேக்கத்தை அதிகரிக்கும். ஆய்வு ஒன்றிலும், சிறிய ப்ளேக்ஸ்கள் உயர் கலோரி உணவு உட்கொள்ளலுடன் இணைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏனெனில், செரில்கள் பெரிதாக இருக்கும் போது, மக்கள் அதை குறைவான அளவிலேயே சாப்பிடுவர்.

சிறந்த மாற்று

சிறந்த மாற்று

சுகர்-ப்ரீ ஓட்ஸை சாப்பிடலாம். இதில் ஆரோக்கியமான அளவில் நார்ச்சத்து உள்ளது மற்றும் இதில் சர்க்கரையும் இருக்காது. காலையிலேயே சர்க்கரையை குறைவான அளவில் எடுத்தால், அது மதியத்திற்கு முன்பே சோர்வடைவதைத் தடுக்க உதவும். நீங்கள் சர்க்கரை கொண்ட ப்ளேக்ஸ் சாப்பிட வேண்டுமானால், பெரிய அளவிலான ப்ளேக்ஸை வாங்குங்கள்.

பேன் கேக் மற்றும் வாஃபிள்ஸ்

பேன் கேக் மற்றும் வாஃபிள்ஸ்

அவசரமாக காலையில் எழுந்து அலுவலகத்திற்கு செல்லும் போது, பெரும்பாலானோர் சாப்பிடுவது உறைய வைக்கப்பட்ட பேன் கேக்குகள், வாஃபிள்ஸ் மற்றும் குக்கீஸ் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளைத் தான். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுக்கள் கொண்ட உணவுகளை காலை உணவாக எடுக்கும் போது அது விரைவிலேயே பசியை ஏற்படுத்திவிடும். அதோடு இவற்றில் நார்ச்சத்துக்கள் சிறிதும் இல்லை மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன.

சிறந்த மாற்று

சிறந்த மாற்று

வீட்டிலேயே முழு தானிய மாவால் தயாரிக்கப்பட்ட பேன் கேக்குகளை செய்து சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இல்லாவிட்டால், முழு தானிய பிரட்டுகளை டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம்.

கொழுப்பு குறைவான யோகர்ட்

கொழுப்பு குறைவான யோகர்ட்

காலை உணவின் போது சாப்பிட கொழுப்பு குறைவான யோகர்ட்டுகள் அதிகம் விற்கப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இவற்றில் ப்ளேவருக்காக சர்க்கரை அதிகமாகவும், புரோட்டீன் குறைவாகவும் உள்ளது. ஆய்வுகளில் கொழுப்பு அதிகம் நிறைந்த யோகர்ட்டுகள் உடல் எடையைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது. காலையில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்ணுட் போது, அது பகல் நேரத்தில் பசி அதிகம் எடுப்பதைக் குறைக்கும்.

சிறந்த மாற்று

சிறந்த மாற்று

கொழுப்பு குறைவான யோகர்ட்டுக்கு பதிலாக கொழுப்பு நிறைந்த யோகர்ட் நல்லது. எனவே ஃபிட்டாக இருக்க சர்க்கரை இல்லாத கொழுப்பு நிறைந்த யோகர்ட்டுகளை வாங்கி சாப்பிடுங்கள்.

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

பெரும்பாலான பழச்சாறுகளில் சோடாவைப் போன்றே சர்க்கரையும் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே காலை உணவின் போது பழச்சாறுகளை சேர்ப்பது ஒரு மோசமான தேர்வாகும். பழச்சாறுகளில் நார்ச்சத்து இருப்பதில்லை. மேலும் வாயை நன்கு அசைத்து உணவை மென்று சாப்பிடுவது மனநிறைவை அளிக்கும். அதுவே மெல்லாமல் இருப்பது குறைவான மனநிறைவை அளிக்கும். அதனால் தான் ஒரு நாள் சிறப்பாக இருக்க காலை உணவில் பழச்சாறுகளை சேர்ப்பது நல்லதல்ல.

சிறந்த மாற்று

சிறந்த மாற்று

பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடுங்கள். இது காலையில் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை தூண்டுவதற்கான சிறந்த வழி மற்றும் மதிய வேளையில் உயர் கலோரி உணவுகளை உண்பதற்கும் தயார் செய்கிறது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள்கள், பூண்டு, பேரிக்காய், பீன்ஸ் மற்றும் பீச் என அனைத்தும் புளிக்கக்கூடிய ஒலிகோசாக்கரைடுகள், டிசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள் மற்றும் பாலியோல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவற்றில் கார்போஹைட்ரேட்டுக்கள் அதிகம் இருக்கின்றன. இது செரிமானமாவது சற்று கடினமாக இருக்கும். இதனால் இது வயிறு மற்றும் குடலில் நொதித்தலுக்கு வழிவகுத்து, வயிற்று உப்புசத்தை உண்டாக்குகிறது. அதற்காக இவற்றை தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால் செரிமான அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தவுடன் சாப்பிடலாம்.

சிறந்த மாற்று

சிறந்த மாற்று

ஆப்பிள்கள், பூண்டு, பேரிக்காய், பீன்ஸ் மற்றும் பீச் போன்றவற்றை குறைவான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரோட்டீனுடன் எடுத்தால், அது எளிதில் செரிமானமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion