Latest Updates
-
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
அளவுக்கு அதிகமா குளிருதா? அப்ப உடம்புல இந்த சத்து குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கு...
உங்களுக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு உடல் நடுக்கம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
தற்போது குளிர்காலம் என்பதால் அனைவருமே குளிர்ச்சியான காலநிலையால் நடுக்கத்தை அனுபவிப்போம். எப்போது காலநிலையானது அளவுக்கு அதிகமாக குளிர்ச்சியாக இருக்கிறதோ, அப்போது தான் ஒருவருக்கு அதிகம் குளிரும். ஆனால் சிலருக்கு லேசாக ஃபேன் ஓடினாலும், குளிரால் நடுங்க ஆரம்பிப்பார்கள். இப்படி மற்றவர்களை விட நீங்கள் அதிகமான குளிர்ச்சியை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

ஆம், ஒருவரது உடலில் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களின் குறைபாடு இருக்கும் போது, அதன் விளைவாக குளிர்ச்சியை அல்லது நடுக்கத்தை சந்திக்க நேரிடும். உங்களுக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு உடல் நடுக்கம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எந்த சத்து குறைபாடு உடலில் இருந்தால் அதிகமான குளிர்ச்சியை சந்திக்க நேரிடும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இரும்புச்சத்து குறைபாடு
நீங்கள் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சியை உணர்கிறீர்களா? அப்படியானால் உடலில் இரத்த சோகைக்கு வழிவகுக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. இரத்த சோகை என்பது உடலில் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல போதுமான சிவப்பணுக்கள் இல்லாத போது ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அது உடல் சோர்வு, பலவீனம் மற்றும் அதிகப்படியான குளிர்ச்சி போன்ற அறிகுறிகள் தென்படும்.

வைட்டமின் பி12 குறைபாடு
சில வைட்டமின் குறைபாடுகள் அதிக குளிர்ச்சியை உணர வைக்கும். அதுவும் வைட்டமின் பி12 அல்லது ஃபோலிக் அமிலம் உடலில் குறைவாக இருந்தால், அது இரத்த சோகையை உண்டாக்குவதோடு, அதிகளவில் குளிர்ச்சியை உணர வைக்கும். ஏனெனில் இரத்த செல்களின் உற்பத்திக்கு வைட்டமின் பி12 மிகவும் முக்கியமானது. அதே சமயம் டிஎன்ஏ மற்றும் பிற மரபணு பொருட்களின் உற்பத்திக்கு ஃபோலிக் அமிலம் அவசியமாகும்.

மோசமான இரத்த ஓட்டம்
உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக இருந்தால், அது அதிகப்படியான குளிர்ச்சியை உணர வைப்பதாக கூறப்படுகிறத. உடலில் உள்ள இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, உடலின் உறுப்புக்கள் மற்றும் திசுக்களுக்கு இரத்த ஓட்டம் சரியாக இல்லாமல், அது அதிகளவில் குளிர்ச்சியை உண்டாக்கும்.

நீர்ச்சத்து குறைவு
ஒருவரது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது அதிகப்படியான குளிர்ச்சியை உணர வைப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டுமானால், நீர்ச்சத்து சீரான அளவில் இருக்க வேண்டும். அந்த நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், அது இரத்த சோகையை உண்டாக்குவதோடு, மோசமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும்.

தைராய்டு பிரச்சனைகள்
ஹைப்போ தைராய்டு பிரச்சனை இருந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை மெதுவாக்கி, அதிகப்படியான குளிர்ச்சியை உணர வைக்கும். அதேப் போல் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை இருந்தாலும் அதிகப்படியான குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஏனெனில் இது மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, உடலில் வெப்ப உற்பத்தியை அதிகரிக்கும். எனவே நீங்கள் திடீரென்று அதிகப்படியான குளிர்ச்சியை உணர்ந்தால், உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட நாள்பட்ட நோய்கள்
சர்க்கரை நோய் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற சில நாள்பட்ட நோய்களானது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறனை பாதித்து, அதிகப்படியான குளிர்ச்சியை உணர வைக்கும்.



Click it and Unblock the Notifications