For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா?

ஆண்களை விட பெண்களே ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிப்படைகின்றனர் என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

|

புள்ளிவிவரங்களின்படி உலக மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒற்றைத் தலைவலி தான் 3 வது நோயாக இருக்கிறது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது. மேலும் இந்த ஒற்றைத் தலைவலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. 7 பேர்களில் 1 வரை இது பாதிக்கிறது. பெண்களை ஆண்களை விட மூன்று மடங்கு இது தாக்குகிறது.

Exclusive

நான்கு பெண்களில் ஒருவர் தொடர்ந்து ஒற்றைத் தலைவலியால் பாதிப்படைந்து வருகிறார். ஆனால் இது பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஏற்படுவதில்லை. இதற்கு பிற காரணங்களை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி

சுகினோ ஹெல்த்கேர் சொல்யூஷன்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்யா கிருஷ்ணன் மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் சினேகா அஜய் ஆகியோர் தமிழ் போல்டு ஸ்கையில் ஒரு நேர்காணல் கொடுத்தனர். அதில் பெண்களுக்கு ஏன் ஆண்களை விட ஒற்றைத் தலைவலி அதிகமாக வருகிறது என்பது குறித்து அவர்கள் பேசினர். பெண்களுக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலி அதிக வலி மிகுந்ததாக இருக்கிறது என்றும், 85 % பேர் நீண்ட கால ஒற்றைத் தலைவலியுடனும், 92 % பேர் ஒற்றைத் தலைவியின் போது ஏதும் செய்ய முடியாத நிலையிலும் இருக்கின்றனர் என்று மருத்துவர்கள் கூறினர்.

MOST READ: இந்த பொண்ணோட காதுக்குள்ள எவ்ளோ பெரிய உண்ணி போயிருக்கு பாருங்க... பார்க்கவே ஒருமாதிரி இருக்கா?...

ஹார்மோன் மற்றும் ஒற்றைத் தலைவலி

ஹார்மோன் மற்றும் ஒற்றைத் தலைவலி

இது குறித்து அவர்கள் கூறியதாவது பெண்களின் ஒற்றைத் தலைவலிக்கு அவர்களின் ஹார்மோன்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

பெரும்பாலான பெண்களின் ஒற்றைத் தலைவிக்கு காரணம் மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன், கருத்தடை, கர்ப்பம் மற்றும் மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து டாக்டர் ஆர்யா கிருஷ்ணன் கூறியதாவது "சிறிய வயதில் பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே ஒற்றைத் தலைவலி அதிகம் ஏற்படுகிறது." ஆனால் ஒரு பெண் பூப்படைந்த உடன் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாக அதிக தலைவலியை பெண்கள் சந்திக்கின்றனர்.

பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் இதற்கு காரணம்.கருவுற்ற காலம், மெனோபாஸ் சமயங்களில், பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள், மெனோபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இயற்கையாகவே மெனோபாஸ் நின்றவர்களை விட அதிகமாக ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

மூளையும் ஒற்றைத் தலைவலியும்

மூளையும் ஒற்றைத் தலைவலியும்

டாக்டர் சினேகா அஜய் "சில தூண்டுதல்களால் உங்கள் மூளையில் உள்ள இரத்த குழாய்கள் விரிவடையும் போது (அல்லது மூளை வாஸ்குலேச்சர்) ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. இந்த இரத்த குழாய்களின் விரிவாக்கம் மற்ற பகுதிகளை சுருக்குவதால் இந்த வலி ஏற்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் தான் இந்த குழாய்களின் விரிவாக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் பெரும்பாலும் பெண் பாலியல் ஹார்மோன்கள், மூளை நாளங்களில் இந்த மாற்றங்களை ஏற்படுத்துவதால் ஆண்களை விட பெண்களுக்கே ஒற்றைத் தலைவலி ஏற்படுகின்றன.

MOST READ: புற்றுநோய்க்கட்டி எப்படி உருவாகுதுனு தெரியுமா?... இத பார்த்து தெரிஞ்சிக்கங்க...

ஹார்மோன் முழுக் காரணம்

ஹார்மோன் முழுக் காரணம்

ஒற்றைத் தலைவலி குறித்து ஆய்வகையில் ஹார்மோன் தான் முக்கிய காரணமாக தெரிகிறது என்று இந்த இரண்டு மருத்துவர்களும் கூறியுள்ளனர். இது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வந்த வண்ணம் உள்ளது என்று டாக்டர் சினேகா அஜய் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் பெண்கள் சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்யும் போது இதை குறைக்கலாம் என்றும் டாக்டர் ஆர்யா கிருஷ்ணன் கூறுகிறார். "தினசரி உணவுப் பழக்கம், மொபைல் திரை பார்த்தல், டீவி பார்த்தல், கணினி பார்த்தல் போன்ற காரணிகளால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படும். எனவே இந்த மாதிரியான செயற்கை தூண்டல்களை குறைத்தாலே ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Exclusive: Experts Explain Why Women Are More Vulnerable To Migraine Than Men

According to statistics, close to 30 per cent of the global population suffers from migraine. Being the third most common disease in the world, it affects women more than men. More prevalent than diabetes and asthma (combined), the condition affects 1 in 7 people
Story first published: Thursday, August 8, 2019, 17:50 [IST]
Desktop Bottom Promotion