Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
முழு முட்டை அல்லது முட்டை வெள்ளைக்கரு - இவ்விரண்டில் எது சிறந்தது?
முட்டையை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் - முழு முட்டையாகவா அல்லது முட்டையின் வெள்ளைக் கருவை மட்டுமா?
முட்டையில் புரத சத்து மிக அதிகமாக உள்ளது. அதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, உங்களை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. முட்டை உடலின் ஆற்றலைத் தக்க வைக்க உதவுகிறது. ஆனால் முட்டையை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் - முழு முட்டையாகவா அல்லது முட்டையின் வெள்ளைக் கருவை மட்டுமா? முட்டையை சுற்றி பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகள் உள்ளன.

தினமும் முழு முட்டை உட்கொள்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது, அதனால் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, வெள்ளை கருவை மட்டும் உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவு குறையும் என்று சிலர் நம்பும் போது , முழு முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என்று ஒரு சிலர் நம்புகின்றனர். ஆகவே இந்த குழப்பத்திற்கு தீர்வு காண்பதற்கு இந்த பதிவு உங்களுக்கு உதவலாம்.

ஊட்டச்சத்து அடிப்படையில் முழு முட்டை எப்படி சிறந்து விளங்குகிறது?
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் உட்கொள்வதை விட, முழு முட்டை அதிக ஊட்டச்சத்துகள் கொண்டது. இவற்றில் வைட்டமின் ஏ, பி6, பி12, டி, ஈ, கே, கோலைன், ஃபோலேட் போன்ற சத்துகள் உள்ளன. கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் செலீனியம் போன்ற கனிமங்களின் ஆதாரமாக விளங்குவது முட்டை. இது தவிர, முட்டையின் மஞ்சள் கரு ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படுகிறது.

முழு முட்டையில் உள்ள சத்துக்கள்
முட்டையின் வெள்ளை கருவில் இல்லாத பல்வேறு ஊட்டச்சத்துகள் முழு முட்டையில் உள்ளன என்பதை நாம் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். ஒரு முழு முட்டையில் 5 கிராம் அளவு புரதம் மற்றும் 60 கலோரிகள் உள்ளன. முட்டையின் வெள்ளைக் கருவில் அதே அளவு புரதம் இருந்தாலும் 20 கலோரிகள் மட்டுமே உள்ளன மற்றும் கொழுப்பு முற்றிலும் இல்லை என்பதால் எடை இழப்பு திட்டம் மேற்கொள்பவர்கள் மற்றும் கலோரி குறைவான உணவு உட்கொள்பவர்கள் முழு முட்டையைக் காட்டிலும் வெள்ளை கரு மட்டும் உண்பதை தேர்வு செய்கின்றனர்.

மார்பக புற்றுநோய் அபாயம் குறையும்
வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் , முழு முட்டை உட்கொள்வதால் மார்பக புற்று நோய்க்கான அபாயம் குறைவதாக கூறப்படுகிறது. முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கோலைன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாவதை சிறந்த முறையில் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கரோட்டினாய்டு கண்களுக்கு நன்மை அளிக்கிறது. மஞ்சள் கருவில் திட்டுக்கள் காணப்பட்டால் அல்லது சாம்பல் நிறம் தென்பட்டால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

வெள்ளைக் கருவின் ஊட்டச்சத்து
எடை இழப்பிற்கான திட்டத்தை செயல்படுத்தி வருபவர்கள் குறைவான கலோரி உட்கொள்ள வேண்டும் என்பதற்காக முழு முட்டை உட்கொள்வதைத் தவிர்க்கலாம். முட்டையின் வெள்ளைக் கருவில் புரதம், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. வெள்ளைக் கருவில் கொழுப்புகள் முற்றிலும் இல்லை என்பதால் எடை இழப்பிற்கு நன்மை அளிக்கிறது. ஒரு நாளில் எத்தனை வெள்ளைக் கரு வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். இதய பாதிப்புகள் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கூட வெள்ளைக் கரு உட்கொள்ள முடியும்.

ஒரு நாளில் எத்தனை முட்டை உட்கொள்ள வேண்டும்?
முட்டை உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது மற்றும் இதய ஆரோக்கியம் பாதிக்கிறது என்ற கட்டுக்கதையை பலரும் நம்பி வருகின்றனர். முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது மற்றும் மிதமான அளவு உட்கொள்வதனால் எந்த தீங்கும் இல்லை என்று பல்வேறு மருத்துவர்கள் இன்றும் கூறி வருகின்றனர். முக்கியமாக முட்டையை சமைக்காமல் வெள்ளைக் கருவை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஒரு வாரத்தில் 8 முழு முட்டைகள் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று ஆஸ்திரேலியாவின் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகிறது. முட்டையின் வெள்ளைக் கரு உட்கொள்வதில் எந்த ஒரு அளவுகோலும் இல்லை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றதுபோல் எத்தனை வெள்ளைக் கரு வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

ஆர்கானிக் முட்டைகள் நல்லது
இருப்பினும் முட்டையில் பல்வேறு வகைகள் உள்ளன. ஆர்கானிக் முட்டைகள் அல்லது கூண்டில் அடைக்காத கோழி முட்டைகள் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன. கூண்டிற்குள் வைத்து வளர்க்கப்படும் கோழிகளிலிருந்து கிடைக்கப்படும் முட்டைகளைக் காட்டிலும் சுதந்திரமாக, தாவரங்களைத் தானாக கொத்தித் தின்னும் கோழிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகள் தரத்தில் உயர்வானதாக கருதப்படுகின்றன. முட்டை உட்கொள்வதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் தைரியமாக ஆர்கானிக் முட்டைகள் வாங்கி உட்கொள்ளலாம். கூண்டில் வளர்க்கப்பட்ட கோழியில் இருந்து கிடைக்கும் முட்டைகளை விட இவ்வித ஆர்கானிக் முட்டைகள் சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக உள்ளன.

முடிவுரை
முழு முட்டை மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு ஆகிய இரண்டும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன. இவற்றின் ஊட்டச்சத்து மதிப்பில் மட்டுமே வேறுபாடு அமைந்துள்ளது. முழு முட்டையில் அதிக அளவு வைட்டமின், கனிமச்சத்து போன்றவை உள்ளன. வெள்ளைக் கருவில் குறைவான கலோரிகள் உள்ளன. உடல் எடை குறைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள், தசை வலிமை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், பல்வேறு மருத்துவ பாதிப்புகள் கொண்டவர்கள் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் உட்கொள்ளலாம் . மற்றவர்கள் ஒரு நாளில் ஒரு முழு முட்டை எடுத்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications