Just In
- 6 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 7 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 18 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 20 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- News
பிரதமர் மோடியுடன் ஜன.19-ல் சந்திப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
- Sports
விக்கெட் எடுக்க முடியவில்லை.. கடும் விரக்தி.. பதற்றத்தில் ஆஸி. மூத்த வீரர் செய்த காரியம்.. போச்சு
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- Automobiles
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இரவு முழுவதும் ஊற வைத்த ஓட்ஸை தினமும் சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா?
இன்றைய நவீன காலகட்டத்தில் நமது காலை உணவு இட்லி , தோசையைக் கடந்து பெருமளவில் மாறிவிட்டது. கார்ன் பிளேக்ஸ், பிரெட் டோஸ்ட் , ஓட்ஸ் என்று சில உணவுகள் இன்றைய காலை உணவில் இடம் பெற்றுவிட்டன. இவற்றில் மிகப் பிரபலமானது ஓட்ஸ்.
ஓட்ஸ் மற்றும் நட்ஸ் கலவை மற்றும் மசாலா ஓட்ஸ் போன்றவை மக்கள் மத்தியில் அதிகமாக உட்கொள்ளப்படும் உணவாக உள்ளது . ஆனால் அதிக ஊட்டச்சத்து கொண்ட ஒரு ஓட்ஸ் வகையானது இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட ஓட்ஸ் என்பதை பலரும் அறிவதில்லை. வேக வைத்து உட்கொள்ளும் ஓட்ஸை விட அதிக ஊட்டச்சத்து கொண்டது ஊற வைத்த ஓட்ஸ்.
6-7 மணி நேரம் ஊற வைக்கப்பட்ட ஓட்ஸ், வேக வைத்த ஓட்ஸைவிட அதிக ஊட்டச்சத்து கொண்டது. இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

ஊற வைத்த ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமானது - எப்படி?
பால், தயிர் அல்லது தண்ணீரில் ஊற வைத்த ஓட்ஸ் , வேக வைத்த ஓட்ஸை விட அதிக ஆரோக்கியமானது. ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட ஓட்ஸ் மென்மையாக இருப்பதால் காலையில் உட்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், பல உணவுகளை நெருப்பில் வைத்து சமைப்பதால் அவற்றில் உள்ள பல ஊட்டச்சத்துகள் அழிக்கப்படுகின்றன. இரவு முழுவதும் ஊற வைக்கப்படுவதனால் ஓட்ஸ் மற்றும் அது ஊற வைக்கப்படும் திரவம் ஆகிய இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்துகள் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. நீண்ட நேரம் ஈரமாக இருப்பதால் ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச் உடைக்கப்பட்டு ஓட்ஸில் உள்ள அசிட்டிக் அமிலம் குறைக்கப்படுகிறது. இதனால் ஓட்ஸ் எளிதில் ஜீரணமாகிறது.

ஊற வைத்த ஓட்ஸ் கொண்டு வேகமாக எடையைக் குறைக்கலாம்
இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட ஓட்ஸ் சாப்பிடுவதனால் உங்கள் எடை வேகமாகக் குறையும். நெருப்பில் வேக வைத்து சமைக்கப்படும் ஓட்ஸை விட ஊற வைத்த ஓட்ஸ் எளிதில் ஜீரணமாகும் தன்மையைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நார்ச்சத்தும் அதிகம் கொண்டுள்ளது. அதிக நார்ச்சத்து காரணமாக நீண்ட நேரம் உங்களுக்கு பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். உங்கள் குடலில் உள்ள அழுக்குகள் சுத்தம் செய்யப்பட்டு அதிக கொழுப்புகள் குறையும். ஊற வைத்த ஓட்ஸில் ஸ்டார்ச் குறைக்கப்படுவதால், உடலில் உள்ள இன்சுலின் அளவு அதிகரிக்கிறது.

கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோயைத் தடுக்கிறது
காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொள்வது உங்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது. ஓட்ஸ் சாப்பிடுவதனால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கப்பட்டு நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும். நீரிழிவு போன்றவற்றிற்கு மிகுந்த நன்மை அளிக்கிறது ஓட்ஸ். இதனால் இதய நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஊற வைத்த ஓட்ஸ் ரெசிபி
ஊற வைத்த ஓட்ஸ் தயாரிப்பது மிகவும் எளிது. உங்களுக்கு பிடித்தமான பால், தண்ணீர், பாதாம் பால், தேங்காய் பால், தயிர் போன்ற ஏதாவது ஒன்றில் ஓட்ஸை ஊறவைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை இதனை அப்படியே உட்கொள்ளலாம் அல்லது வாழைப்பழம், திராட்சை, மாதுளை, அன்னாசி, கிவி, ஆரஞ்சு, ஸ்டராபெர்ரி போன்ற பழங்களை சேர்த்தும் உட்கொள்ளலாம். மேலும் இதன் சுவையை அதிகரிக்க பிஸ்தா, உலர்ந்த திராட்சை, வால்நட், முந்திரி, பாதாம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனை எப்படி உட்கொண்டாலும் சுவையும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

ஊற வைத்த ஓட்ஸை மேலும் சுவையாக்க சில குறிப்புகள்:
குறிப்பு #1
உங்களுக்கு இனிப்பு பிடிக்காது என்றால் உப்பு மற்றும் மசாலாப்பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு #2
நெய்யை சூடாக்கி அதில் கடுகு மற்றும் சீரகம் தாளித்து, ஊற வைத்த ஓட்ஸில் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பப்பட்ட மசாலாக்களை சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு #3
ஊற வைத்த ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ்,போன்றவை ஒரு சிறந்த காலை உணவாகும். நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ள இந்த உணவு நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும்.

குறிப்பு #4
ஊற வைத்த ஓட்ஸ் கொண்டு மதிய உணவையும் தயாரிக்க முடியும். ஓட்ஸ் கிச்சடி தயாரிக்க அரிசி, பருப்பு, ஊற வைத்த ஓட்ஸ், காய்கறிகள் ஆகியவற்றை வேக வைத்து தாளித்து சாப்பிடலாம் . இதன் சுவை அலாதியாக இருக்கும்.