Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
ஆண்கள் அடிக்கடி இத சாப்பிட்டா புரோஸ்டேட் புற்றுநோய் வராதாம்!
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில், காளானை ஆண்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது.
சைவ உணவுகளிலேயே அசைவ உணவின் சுவையைத் தரக்கூடிய ஓர் உணவுப் பொருள் தான் காளான். மேலும் இது பலருக்கு விருப்பமான உணவுப் பொருளும் கூட. காளானில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இதில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் வளமான அளவில் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் முக்கிய ஊட்டச்சத்துக்களான பி வைட்டமின்கள், செலினியம், பொட்டாசியம், காப்பர் மற்றும் வைட்டமின் டி போன்றவையும் ஏராளமாக உள்ளது.

காளானில் பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போன்று ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிரம்பியுள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கியதாலோ என்னவோ, காளான் எண்ணிடலங்கா ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில், காளானை ஆண்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது.

புரோஸ்டேட் சுரப்பி
ஆண் இனப்பெருக்க உறுப்பான புரோஸ்டேட் சுரப்பியானது வால்நட்ஸ் அளவில் சிறுநீர்ப்பைக்கும், ஆண்குறிக்கும் இடையே அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பியாகும். இந்த சுரப்பியானது ஆண்களின் விந்தணுக்களை உற்பத்தி செய்து சேகரித்து பாதுகாக்கும் பணியைச் செய்யக்கூடியது. ஆண்கள் 50 வயதிற்கு மேல் புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனையை சந்திப்பார்கள். அது தான் புரோஸ்டேட் வீக்கம்.

புரோஸ்டேட் புற்றுநோய்
தற்போது புற்றுநோயின் தாக்கம் அதிகம் உள்ளது. அதில் ஆண்களை மட்டும் தாக்கும் முக்கிய புற்றுநோயாக புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளது. இந்த புற்றுநோய் எப்போது ஒருவரைத் தாக்கும் என்று கூற முடியாது. ஆனால் இந்த வகை புற்றுநோயின் தாக்கத்தை தடுக்க முடியும். அதற்கு உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும். அந்த வகையில் சமீபத்திய புதிய ஆய்வில் காளான் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

காளான் சிறந்த தீர்வு
புதிய ஆய்வில் ஆண்கள் வாரத்திற்கு மூன்று முறை காளானை உணவில் சேர்த்து வந்தால், புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

புதிய ஆய்வு...
ஜப்பானில் தான் காளான் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் 40 முதல் 79 வயது வரை கொண்ட சுமார் 36,499 ஆண்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் உள்ள ஆண்கள் தொடர்ச்சியாக 13.2 வருடங்களாக பரிசோதிக்கப்பட்டு வந்தனர். இந்த ஆய்வானது டொஹொகு பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களுள் 3.3 சதவீத ஆண்களுக்கு புற்றுநோயின் தாக்கம் இருப்பது தெரிய வந்தது.
மேலும் வாரத்தில் 1-2 முறை காளானை சாப்பிட்டு வந்த ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் இல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது. இந்த ஆய்வின் முடிவாக வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் காளான் சாப்பிட்டு வந்த ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் 17 சதவீதம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்
மற்றொரு ஆய்வு ஒன்றில் காளானை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, நோய்களின் தாக்குதலைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முக்கிய காரணமாம். இதனால் காளானை தினமும் சாப்பிட்டு வந்தால், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாமாம்.

எடை இழப்புக்கு உதவும்
காளானில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் சற்று இருக்கிறது. அதே சமயம் இதில் இரண்டு வகையான டயட்டரி நார்ச்சத்துக்கள், பீட்டா-க்ளுக்கன்கள் மற்றும் சிடின் போன்ற பசியைக் குறைக்கும் மற்றும் வயிற்றை நிரப்பும் பொருட்களும் உள்ளன.
எடை இழப்பு மற்றும் காளான் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்களுக்கு இறைச்சி உணவு குறைவாகவும், காளான் அதிகமாகவும் சாப்பிட பரிந்துரைக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து அவர்களை பரிசோதிக்கும் போது, ஆய்வில் கலந்து கொண்டவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உணர்வதுடன், உடல் எடை குறைந்திருப்பதோடு, இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவையும் குறைந்திருந்தது தெரிய வந்தது.
எனவே காளானை சாதாரணமாக நினைக்காமல், இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதமாக நினைத்து, அடிக்கடி காளானை உணவில் சேர்த்து பயன் பெறுங்கள். உங்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக தெரிந்தால், உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்வதுடன், நண்பர்களுக்கும் இக்கட்டுரையைப் பகிருங்கள்.



Click it and Unblock the Notifications