Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...!
இந்த 4 பழங்களை பாலுடன் சாப்பிட்டால் இருமடங்கு நன்மை கிடைக்குமாம்... முக்கியமா இதய நோய் வராதாம்...
தவறான பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இப்போது எந்தெந்த பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் காண்போம்.
தினமும் பால் குடிப்பது மிகவும் முக்கியம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. அதோடு இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. மேலும் பால் எளிதில் ஜீரணமாகக்கூடியது மற்றும் அதில் உள்ள சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சக்கூடியது. ஆயுர்வேதத்தில் பால் நன்மை அளிக்கக்கூடியதாக கூறப்பட்டாலும், அந்த பாலை சூடான நிலையில் குடித்தால் மட்டுமே எளிதில் ஜீரணமாகும். குளிர்ந்த நிலையில் குடித்தால், அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது.

தற்போது பாலை பலருக்கும் வெறுமனே குடிக்க பிடிப்பதில்லை. சிலர் பாலுடன் சில பழங்களை சேர்த்து சுவையான வடிவில் உட்கொள்கிறார்கள். பாலை பழங்களுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, நன்கு கனிந்த மற்றும் இனிப்பான பழங்களையே பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் தவறான பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இப்போது எந்தெந்த பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் காண்போம்.

மாம்பழம்
மாம்பழத்தில் இரும்புச்சத்து, புரோட்டீன், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே மாம்பழம் தசைப் பிடிப்பு, பதட்டம், மன அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவற்றைத் தடுக்கிறது. அதே வேளையில் பாலில் கால்சியம், வைட்டமின் டி போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன. எனவே நன்கு கனிந்த இனிப்பான மாம்பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, அது இதயம், கண்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து சீராக்குகிறது.

வாழைப்பழம்
வாழைப்பழத்தை பாலுடன் கலந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். வாழைப்பழத்தில் நார்ச்சத்து, மற்றும் கால்சியத்துடன், வைட்டமின் பி6, வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் பி3 போன்றவையும் உள்ளது. இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து, சுவைக்கு தேனையும் கலந்து உட்கொண்டால் பலவீனமானவர்களின் உடல் வலுவாகும் மற்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நல்லது.

அவகேடோ
அவகேடோ பழம் சுவையானது மட்டுமின்றி, மிகவும் குளிர்ச்சியானதும் கூட. கோடைக்காலத்தில் அவகேடோ பழத்தை சாப்பிட்டால் உடல் சூட்டைத் தணிக்கலாம். அதுவும் அவகேடோவை பாலுடன் சேர்த்து உட்கொண்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக இது கொழுப்புத் திசுக்களுக்கு ஊட்டமளிக்கிறது.

உலர் பழங்கள்
உலர் பழங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலில் இரத்தத்தின் அளவு மேம்படுகிறது மற்றும் இது ஒரு நல்ல மளமிளக்கியாகவும் விளங்குகிறது. அதுவும் உலர்ந்த அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொண்டால், உடலில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்தின் அளவு அதிகரிப்பதோடு, குடலும் சுத்தமாகிறது. பேரிச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடல் எடை அதிகரிக்கிறது மற்றும் இது உடலை வலுவாக்குகிறது.



Click it and Unblock the Notifications











