Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா? அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...
வியர்வை சருமத்தில் உள்ள குறிப்பிட்ட வகையான பாக்டீரியாவுடன் தொடர்பு கொள்ளும் போது, அது ஒருவித துர்நாற்றத்தை உருவாக்குகிறது. அது தான் வியர்வை நாற்றம்.
கோடைக்காலம் என்றாலே கடுப்பேற்றும் ஒன்று என்றால் அது வியர்வையாகத் தான் இருக்கும். அதிலும் அந்த வியர்வை துர்நாற்றமின்றி இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே துர்நாற்றத்துடன் இருந்தால், அது நமக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கும். நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால், வியர்வை மணமற்றது. ஆனால், இது சருமத்தில் உள்ள குறிப்பிட்ட வகையான பாக்டீரியாவுடன் தொடர்பு கொள்ளும் போது, அது ஒருவித துர்நாற்றத்தை உருவாக்குகிறது. அது தான் வியர்வை நாற்றம்.

இந்த தர்மசங்கடமான சிக்கலைத் தவிர்க்க நம்மில் பெரும்பாலானோர் டியோடரண்டுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இது ஒரு தற்காலிக தீர்வை மட்டுமே வழங்குகிறது. அதிர்ஷ்டவசமாக, உடல் துர்நாற்றத்திற்கான அடிப்படை காரணத்தை அகற்றுவது சாத்தியமாகும்.
இக்கட்டுரையில், தமிழ் போல்ட் ஸ்கை வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும் ஒரு ரகசிய ஜூஸ் ரெசிபியைக் கொடுத்துள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை திறம்பட அழிக்கும்.

தேவையான பொருட்கள்:
* ஆப்பிள் - 1
* பார்ஸ்லி - 1
* நற்பதமான முட்டைக்கோஸ் இலைகள் - 3-4
* இஞ்சி - 1/2 இன்ச்
* எலுமிச்சை - 1

செய்முறை:
* முதலில் அனைத்து பொருட்களையும் நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த ஜூஸை ஒரு டம்ளரில் ஊற்றினால், ஜூஸ் தயார்.

எப்போது குடிப்பது நல்லது?
இந்த ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால் இதனை நாள் முழுவதும் அவ்வப்போது குடிக்கலாம். ஆனால் காலையில் குடிப்பது தான் மிகச்சிறந்த பலனைத் தரும்.

நன்மைகள்
இந்த ஜூஸ் தயாரிக்கப் பயன்படுத்தும் இந்த பொருட்கள் சருமத்தின் pH சமநிலையைப் பராமரிக்க சிறந்தவை. மேலும் இந்த ஜூஸில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் துர்நாற்ற எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இவை பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதைக் கடினமாக்குகின்றன.

குறிப்பு
* ஒருமுறை தயாரித்த ஜூஸை 48 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்து குடிக்கக்கூடாது. ஆனால் இந்த ஜூஸின் முழு நன்மைகளையும் பெற நினைத்தால், நற்பதமாக அவ்வப்போது தயாரித்துக் குடியுங்கள்.
* முதல் முறை இந்த ஜூஸைத் தயாரிக்கும் போது, முதலில் உங்கள் உடலுக்கு ஒப்புக் கொள்கிறதா என்பதை அறிய சிறிய அளவில் செய்து உட்கொண்டு பாருங்கள். எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருந்தால், தினமும் இந்த பானத்தைத் தயாரித்துக் குடியுங்கள். இதனால் உங்களுக்கு வியர்க்கும் போது, எந்த ஒரு துர்நாற்றமும் வீசாமல் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications