For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறட்டை விடாம தூங்கணுமா? அப்ப நைட் தூங்குறதுக்கு முன்னாடி இத குடிங்க...

நாம் சுவாசிக்கும் போது காற்றானது மூக்கு, வாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. அப்படி செல்லும் போது அந்த பாதையில் ஏதேனும் தடை ஏற்படும் போது வரும் சப்தம் தான் குறட்டை.

|

குறட்டை ஒரு பொதுவான பிரச்சனை. சிலர் படுத்ததுமே குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கிவிடுவார்கள். குறட்டை விடுபவர்களுக்கு அந்த சப்தத்தால் ஏற்படும் தொந்தரவு தெரியாது, அவர்கள் அருகில் தூங்குபவர்களுக்கு தான் தெரியும். சரி, குறட்டை எதனால் வருகிறது என்று தெரியுமா?

Drinking This Homemade Juice Before Bed Will Help You Stop Snoring

நாம் சுவாசிக்கும் போது காற்றானது மூக்கு, வாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. அப்படி செல்லும் போது அந்த பாதையில் ஏதேனும் தடை ஏற்படும் போது வரும் சப்தம் தான் குறட்டை. பொதுவாக தூங்கும் போது தொண்டை சதைகள் தளர்ந்து ஓய்வெடுக்கும். அந்நேரம் மூச்சுப் பாதையின் அளவு குறுகி இருக்கும். இந்த குறுகலான பாதையில் சுவாசிக்கும் காற்று செல்லும் போது சப்தம் வரும்.

MOST READ: கொரோனாவின் வேறு புதிய 3 அபாய அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறட்டை வருவதற்கான காரணங்கள் என்ன?

குறட்டை வருவதற்கான காரணங்கள் என்ன?

ஒருவருக்கு குறட்டை பல காரணங்களால் வரலாம். அதில் சளியுடனான மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனை, தொண்டை சதை வளர்ச்சி, மூக்கு சுவர் வளைந்து இருப்பது, உடல் பருமன், தைராய்டு பிரச்சனை போன்றவை அடங்கும். அதோடு புகைப்பழக்கம் மற்றும் மது பழக்கம் உள்ளவர்களுக்கும் குறட்டை வரக்கூடும்.

குறட்டையைத் தடுப்பது எப்படி?

குறட்டையைத் தடுப்பது எப்படி?

குறட்டை பிரச்சனையைத் தடுக்க பல வழிகள் உள்ளன. அதில் சளியை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் உண்பதைத் தவிர்ப்பதுடன், ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம். மேலும் ஒருசில பானங்களும் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். கீழே குறட்டை பிரச்சனையைத் தடுக்க உதவும் ஒரு அற்புதமான பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* ஆப்பிள் - 2

* கேரட் - 2

* எலுமிச்சை - 1/2

* இஞ்சி - 1 துண்டு

செய்முறை:

செய்முறை:

* முதலில் ஆப்பிள், கேரட், இஞ்சி ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து, ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் எலுமிச்சையைப் பிழிய வேண்டும்.

* இந்த பானத்தை தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.

குறட்டையைத் தடுக்க இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்:

குறட்டையைத் தடுக்க இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்:

* பால் பொருட்கள்

* சாக்லேட்

* வறுத்த உணவுகள்

* பதப்படுத்தப்பட்ட உணவுகள்

* மாவு மற்றும் சர்க்கரை பொருட்கள்

* அதிகப்படியான ஆல்கஹால்

குறட்டையைத் தடுக்க வேறு என்ன செய்யலாம்?

குறட்டையைத் தடுக்க வேறு என்ன செய்யலாம்?

* சற்று உயரமான தலையணையைப் பயன்படுத்தி தூங்க வேண்டும்.

* மல்லாக்க படுத்து தலையை நேராக வைத்து தூங்க வேண்டாம். வேண்டுமெனில் தலையை ஒரு பக்கமாக சாய்த்து தூங்கலாம்.

* முக்கியமாக இரவு தூங்கும் முன் வயிறு நிறைய உணவை உட்கொள்ளக்கூடாது.

* தைராய்டு பிரச்சனையை சோதித்து பார்க்கவும். ஒருவேளை தைராய்டு இருந்தால், அதற்கான மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

* உடல் பருமனைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.

* முக்கியமாக கெட்ட பழக்கங்களான சிகரெட் மற்றும் ஆல்கஹால் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drinking This Homemade Juice Before Bed Will Help You Stop Snoring

Read to know how to prepare this homemade remedy to prevent snoring.
Desktop Bottom Promotion