Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
7 நாட்களில் உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றணுமா? இத குடிங்க...
உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்கி தொப்பையைக் குறைக்க க்ரீன் டீயை மட்டும் குடிக்கக்கூடாது. அந்த க்ரீன் டீயைத் தயாரிக்கும் போது, அத்துடன் ஒருசில மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களையும் சேர்க்கவும்.
பண்டிகை காலங்களில் வீட்டில் செய்யும் பலகாரங்களைப் பார்த்ததும், டயட்டில் இருப்பதையே மறந்துவிடுவோம். சொல்லப்போனால், பண்டிகை நாளில் மட்டும் டயட்டிற்கு விடுமுறை அளித்து, விரும்பிய உணவை திருப்திகரமாக சாப்பிடுவோம். இருப்பினும், அப்படி வயிறு நிறைய சாப்பிட்டால், அது வயிற்று உப்புசம், சோர்வு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். அளவுக்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும், அது உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, உடல் எடையைக் குறைக்கும் திறனையும் பாதிக்கும்.

அதிலும் நீங்கள் கலோரி அதிகமான உணவுகளை அதிகமாக சாப்பிட்டவராயின், உங்கள் டயட்டில் உடலை சுத்தம் செய்யும் பானங்களை சேர்த்துக் கொள்வது நன்மை அளிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் அவற்றில் உடல் எடையைக் குறைக்க உதவும் பிரபலமான பானமாக கருதப்படும் க்ரீன் டீ, எடையைக் குறைப்பதோடு, உடலில் ஆச்சரியப்படும் வகையிலான மாயங்களையும் ஏற்படுத்தும்.
இக்கட்டுரையில் பண்டிகை கால உணவுகளால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி, அதிகரித்த உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பானம் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

எடை இழக்க உதவும் க்ரீன் டீ
உலகளவில் ஆரோக்கியமான பானமாக ஏராளமான மக்கள் குடித்து வரும் ஒரு பானம் தான் க்ரீன் டீ. இதில் கேட்டசின்கள் என்று அழைக்கப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது தான் எடை இழப்பை மேம்படுத்துகிறது. க்ரீன் டீயில் உள்ள கெமிக்கல்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை வேகமாக எரிக்க ஊக்குவித்து, எடை இழப்பிற்கு உதவுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன.

2008 ஆம் ஆண்டு ஆய்வு
2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உடல் பருமன் உள்ளவர்கள் 12 வாரங்களுக்கு க்ரீன் டீ அருந்தியதில், க்ரீன் டீ அருந்தாதவர்களை விட 3.3 கிலோ-விற்கும் அதிகமான எடையை இழந்திருப்பது கண்டறியப்பட்டது. க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்களில் குறிப்பாக எபிகல்லோகாடெசின் -3-கேலேட் (EGCG) என்னும் பொருள் எடை இழப்பை அதிகரிப்பதுடன், உட்காயங்களைக் குறைப்பது, ஆரோக்கியமான இதயம், ஆரோக்கியமான மூளை போன்ற பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

நச்சுக்களை நீக்கும் க்ரீன் டீ
உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புதமான பானங்களுள் ஒன்றாக க்ரீன் டீ கருதப்படுகிறது. ஏனெனில் க்ரீன் டீயில் உள்ள செயலில் உள்ள உட்பொருட்கள் உடலின் இயற்கையான நச்சுநீக்கும் திறனை ஆதரிக்கின்றன. மேலும் க்ரீன் டீ குடிப்பதால் நொதிகளின் செயல்பாடு அதிகரித்து, நச்சுக்களை நீக்க கல்லீரலுக்கு ஆதரவளிக்கிறது.

நச்சுக்களை நீக்கி தொப்பையைக் குறைக்க உதவும் பானம்
உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்கி தொப்பையைக் குறைக்க க்ரீன் டீயை மட்டும் குடிக்கக்கூடாது. அந்த க்ரீன் டீயைத் தயாரிக்கும் போது, அத்துடன் ஒருசில மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அந்த க்ரீன் டீயின் சக்தியானது இருமடங்கு அதிகரித்து, இன்னும் சிறப்பான பலனைப் பெற உதவியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
* க்ரீன் டீ இலைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* புதினா இலைகள் - 6-7
* எலுமிச்சை - பாதி
* தண்ணீர் - 2-3 கப்
* தேன் - சுவைக்கேற்ப

தயாரிக்கும் முறை:
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதை இறக்கி, அதில் க்ரீன் டீ இலைகள் மற்றும் புதினா இலைகளைப் போட்டு 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* பின்பு அதை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்தால், பானம் தயார்.

குறிப்பு:
க்ரீன் டீ வெறும் ஆரோக்கியமான பானம் மட்டுமின்றி, சுவையானதும் கூட. நீங்கள் இதை சோடா பானங்கள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட அதிக கலோரி பானங்களை குடிப்பதற்கு பதிலாக, க்ரீன் டீயை குடித்தால், அது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். தினமும் தினசரி வழக்கத்தில் 2-3 கப் க்ரீன் டீ குடித்தால், நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் வெறும் க்ரீன் டீயை மட்டும் குடித்தால் அனைத்து நன்மைகளும் கிடைத்து விடாது. அத்துடன் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் தீங்கு விளைவிக்கும் தொப்பையைக் குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications