Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றணுமா? அப்ப அடிக்கடி உங்க உணவுல இத சேத்துக்கோங்க...
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், இரத்தத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம். இரத்தம் நச்சுத்தன்மையற்றதாக இருந்தால் தான், உடலுறுப்புக்கள் சிறப்பாக செயல்பட முடியும்.
மனித உடலில் இரத்தம் மிகவும் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றை இரத்தம் கையாளுகிறது. ஊட்டச்சத்துக்கள் முதல் ஆக்ஸிஜன், ஹார்மோன்கள் வரை அனைத்திற்கும் கேரியர் என்றால் அது இரத்தம் தான். சிறப்பான உடல் ஆரோக்கியத்திற்கு, நமது இரத்தம் நச்சுக்களின்றி சுத்தமாக இருக்க வேண்டும். உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் செல்லும் இரத்தம் நச்சுத்தன்மையற்றதாக இருந்தால் தான், அந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

ஆகவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், இரத்தத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம். நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் உடலில் சுத்திகரிப்பு செயல்முறையை நடத்துகின்றன. ஆனால் சில சமயங்களில் அவற்றால் சரியாக சுத்திகரிப்பு செய்ய முடியாமல் போகலாம். எனவே அவ்வப்போது நாம் நமது இரத்தத்தை சுத்திகரித்து வந்தால், நமது உடலில் உள்ள இரத்தம் எப்போதுமே சுத்தமாக இருக்கும்.
இந்த கட்டுரையில் ஒருவரது இரத்தத்தை எப்படி இயற்கையாக சுத்திகரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஏன் இரத்தத்தை சுத்திகரிப்பது என்பது முக்கியம் என்பது குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

இரத்த சுத்திகரிப்பு ஏன் மிகவும் முக்கியம்?
முதலில் இரத்தத்தை சுத்திகரிக்கும் வழிகளை தெரிந்து கொள்ளும் முன், ஏன் இரத்தத்தை சுத்திகரிப்பது முக்கியம் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
* இரத்த சுத்திகரிப்பு சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. இரத்தத்தில் நச்சுக்கள் இருப்பதால் தான் பருக்கள் மற்றும் பிற சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
* அசுத்தமான இரத்தம் அலர்ஜி, குமட்டல் மற்றும் தலைவலி போன்றவற்றை உண்டாக்கும்.
* உடலில் சுத்தமான இரத்த ஓட்டம் இருந்தால், அது முக்கிய உறுப்புக்களின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
* உடலின் ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் தடையில்லாத மற்றும் மென்மையான ஆக்ஸிஜன் பரிமாற்றத்திற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது.
* உடலில் ஆரோக்கியமான இரத்த வெள்ளையணுக்கள் தான், ஆரோக்கியமான பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை நிர்வகிக்கின்றன.
இப்போது இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் சில உணவுகளைக் காண்போம். இந்த உணவுகளில் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி, உடலினுள் மாயங்களை உண்டாக்கும். சரி, வாருங்கள் அந்த உணவுகளை எவையென்று காண்போம்.

எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் உள்ள அசிட்டிக் பண்புகள், pH அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் நச்சுக்களை அகற்றும். இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நச்சுக்களை கார சூழலில் இறக்க செய்கிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை பேக்கிங் சோடாவுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, அது இரத்தத்தை சுத்திகரிக்கின்றன. முக்கியமாக இந்த கலவை pH அளவை சமநிலைப்படுத்தி, நச்சுத்தன்மைக்கு காரணமான யூரிக் அமிலத்தை இரத்தத்தில் இருந்து வெளியேற்றுகின்றன. அதற்கு ஒரு டம்ளரில், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, உடனடியாக குடிக்க வேண்டும்.

பீட்ரூட்
பீட்ரூட் சாப்பிட்டால், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் உள்ளன. இவை இரத்தத்தை சுத்திகரிக்கும் நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. அதோடு கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க, ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் வீக்கத்தை பீட்ரூட் குறைக்கும்.

வெல்லம்
வெல்லம் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு பொருள் என்பது தெரியுமா? வெல்லத்தில் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் இது சுத்திகரிக்கும் போது இரத்த கட்டிகளையும் நீக்குகிறது. கூடுதலாக, வெல்லம் ஹீமோகுளோபின் அளவை மீட்டெடுக்கிறது மற்றும் செரிமானத்திற்கும் நல்லது.

துளசி
துளசியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த புனிதமான செடிக்கு இரத்தம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் என ஒட்டுமொத்த உடலையும் சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளது. அனைத்து நச்சுக்களும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. துளசியின் முழு பலனையும் பெற, தினமும் துளசி டீ அல்லது 7-8 துளசி இலைகளை சாப்பிடுங்கள்.

மஞ்சள்
மஞ்சள் மருத்துவ குணம் வாய்ந்த மிகச் சிறப்பான மசாலா பொருள் என்பது தெரியும். இத்தகைய மஞ்சளை இரவு தூங்கும் முன் பாலுடன் சேர்த்து குடிக்கலாம் அல்லது அன்றாட உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இது இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவி புரியும். மஞ்சளில் உள்ள குர்குமின், உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த சிவப்பணுக்களின் மீளுருவாக்கத்தை அனுமதிக்கிறது.



Click it and Unblock the Notifications