Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
World Mosquito Day 2020: மரணம் வரை கொண்டு செல்லும் கொடிய நோய்கள் - ஓர் பார்வை!
வருடத்திற்கு சுமார் 1 மில்லியன் மக்கள் கொசுக் கடியால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் இவை பல கொடிய நோய்களை பரப்புகின்றன.
தற்போது ஆங்காங்கு மழைப் பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மழை நீரின் தேக்கத்தினால் கொசுக்களும் தங்கள் இனத்தை பெருக்கி, பலரது இரத்தத்தை சுவைக்க ஆரம்பித்திருக்கும். உலகிலேயே கொசுக்கள் மிகவும் ஆபத்தான கொடிய உயிரினமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த சிறிய உயிரினத்தின் மூலம், உயிரையே பறிக்கக்கூடிய பல கொடிய நோய்களின் தாக்கத்திற்கு நம்மை அறியாமலேயே வீழ்ந்துவிடுகிறோம்.

வருடத்திற்கு சுமார் 1 மில்லியன் மக்கள் கொசுக் கடியால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை எளிதில் மக்களிடையே பரப்பி, நோய்களை உண்டாக்குகின்றன. இந்த கட்டுரையில் கொடிய கொசுக்களின் மூலம் பரவும் ஐந்து கொடிய நோய்கள் குறித்தும், அவற்றின் அறிகுறிகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

மலேரியா
மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இந்த கொடிய மலேரியா நோயானது அனாஃபிலிஸ் வகை கொசுக்களால் மக்களிடையே பரப்பப்படுகிறது. இந்த நோயின் பொதுவான அறிகுறிகளாவன காய்ச்சல் மற்றும் உடல் வலி. மலேரியாவை உண்டாக்கும் கிருமிகள் மெதுவாக உடலின் உள்ளே பரவ ஆரம்பித்து, இரத்த சிவப்பணுக்களைத் தாக்கும்.

மலேரியாவின் அறிகுறிகள்:
* தலைவலி
* தசை வலி
* குறைந்த இரத்த அழுத்தம்
* குழப்பமான மனநிலை
* குளிர் நடுக்கம்
* மிகுந்த பலவீனம்
* மூட்டுக்களில் கடுமையான வலி

டெங்கு
டெங்கு என்பது ஏடிஸ் வகை கொசுக் கடியால் பரவும் நோயாகும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தை உறிஞ்சிய கொசு, மற்றவர்களைக் கடிக்கும் போது, டெங்கு மற்றவர்களுக்கு பரவுகிறது. டெங்கு நோயை எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் கூறுவர். ஏனெனில் இந்த வகை காய்ச்சலால் கடுமையான மூட்டு மற்றும் தசை வலி ஏற்படும். டெங்கு காய்ச்சல் மிதமானது முதல் தீவிரமானது வரை வேறுபடும். பெரும்பாலானோருக்கு டெங்கு காய்ச்சலின் அறிகுறி கொசு கடித்த 4-7 நாட்கள் கழித்து தான் தெரியும்.

டெங்குவின் அறிகுறிகள்:
* தீவிரமான தலைவலி
* கண்களுக்கு பின் வலி
* குமட்டல் மற்றும் வாந்தி
* தசை மற்றும் மூட்டு வலி
* மார்பு, கை, கால் மற்றும் முகத்தில் அரிப்புக்கள் பரவும்
* திடீரென்று அதிக காய்ச்சல் தொடங்கும்

சிக்குன்குனியா
ஏடிஸ் ஈஜிப்டி வகை கொசுவின் கடியால் சிக்குன்குனியா பரவுகிறது. இது தீவிரமான, தொடர்ச்சியான மூட்டு வலியுடன், அரிப்பு மற்றும் காய்ச்சலையும் உண்டாக்கும். இந்த வகை காய்ச்சல் ஆபத்தானது அல்ல, ஆனால் கணிசமான நோயுற்ற தன்மையை ஏற்படுத்தும். இந்த வகை காய்ச்சலின் அறிகுறிகளாவன டெங்கு காய்ச்சலைப் போன்றே இருக்கும். ஆனால் சிக்குன்குனியாவில் பாதிக்கப்பட்ட கொசு கடித்து 2-4 நாட்களில் இருந்து அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

சிக்குன்குனியா அறிகுறிகள்:
* குமட்டல்
* வாந்தி
* மலச்சிக்கல்
* தலைச்சுற்றல்
* கைகள் மற்றும் பாதங்கள் குளிர்ச்சியுடன் இருப்பது
* தசை மற்றும் மூட்டுத் தசைகளில் தீவிர வலி
* தொண்டை புண்
* கடுமையான தலைவலி
* தீவிரமான அடிவயிற்று பிடிப்புகள்

ஜிக்கா வைரஸ்
ஜிக்கா வைரஸ் என்னும் நோயானது கொசுக்களால் பரவக்கூடியது. இது வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும். மஞ்சள் காமாலை, சிக்குன்குனியா மற்றும் டெங்குவிற்கு காரணமான கொசு தான், இந்த வகை நோய்க்கும் காரணம். இதன் அடைகாக்கும் காலம் ஓரிரு நாட்கள் என்று நம்பப்படுகிறது.

ஜிக்கா வைரஸ் அறிகுறிகள்:
* மூட்டு வலி
* காய்ச்சல்
* அரிப்பு
* தலைவலி
* களைப்பு
* தசை வலி
* விழி வெண்படல அழற்சி

ஜப்பானிய என்செபாலிடிஸ்
இது கொசுக்களால் பரவும் ஒரு வகையான வைரஸ் நோயாகும். இது மூளையைச் சுற்றியுள்ள சவ்வுகளில் அழற்சியை ஏற்படுத்தும். இந்த வகை நோயை ஜப்பானிய மூளையழற்சி என்றும் அழைப்பர். இந்த தொற்றுக்களின் அறிகுறிகள் பெரும்பாலும் வெளிப்படையாக தெரியாது, மிதமானதாகவே இருக்கும். ஆனால் போகப் போக தீவிரமாகும்.

ஜப்பானிய என்செபாலிடிஸ் அறிகுறிகள்:
* அதிகளவு காய்ச்சல்
* கழுத்து விறைப்பு
* கோமா
* வலிப்பு
* ஸ்பாஸ்டிக் முடக்கம்
* தன்னிலையிழத்தல்
எனவே இம்மாதிரியான நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு, கொசுக்களை அழிக்கும் மற்றும் விரட்டும் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
