Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா?
கொரோனா வைரஸை தடுக்க உலக சுகாதார அமைப்பும் தன்னால் முயன்றவரை போராடி வருகிறது. ஆனால் இதற்கிடையில் மக்கள் தங்கள் உடல் நலனை பராமரிப்பதை விட்டு விட்டு மதுபானங்களை அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கொரோனா வைரஸை தடுக்க உலக சுகாதார அமைப்பும் தன்னால் முயன்றவரை போராடி வருகிறது. ஆனால் இதற்கிடையில் மக்கள் தங்கள் உடல் நலனை பராமரிப்பதை விட்டு விட்டு மதுபானங்களை அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆல்கஹால் கண்டிப்பாக உங்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றாது. அது உங்க உடல் நிலையை மேலும் மோசமாக்கி விடும்.

உங்கள் உடல் ஏற்கனவே கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உடலில் ஆல்கஹால் இருந்தால், அது கொரோனா வைரஸை சமாளிக்க உதவாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே தான் WHO தனது அறிக்கையில் எந்தவொரு நபரும் கலந்தாலோசிக்காமல் மது அருந்தக்கூடாது என்று கூறியுள்ளது.
இதைத்தவிர மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து ஏராளமான கட்டுக்கதைகளும் நிலவி வருகிறது. நிறைய பேர் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியும் என்று நம்பி வருகிறார்கள். இதுவும் முற்றிலும் தவறானது என்கிறது உலக சுகாதார நிறுவனம். சீனாவில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக 3000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், அதே நேரத்தில் 80,000 க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்படியே இந்த வைரஸ் இந்தியா, அமெரிக்கா என்று உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கி விட்டது. அப்போதிலிருந்து எல்லா மக்களும் அச்சம் கொள்ளத் தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் இந்த தொற்றுநோயை தடுக்க இந்திய அரசால் பல அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி இந்த 5 சந்தர்ப்பங்களில் இருந்தால் ஒரு போதும் மது அருந்தாதீர்கள்
* கோவிட் 19 தொற்று உங்களுக்கு இருந்தால் மது அருந்தாதீர்கள்
* ஆன்டி பயாடிக் எடுக்கும் போது மதுப்பழக்கம் வேண்டாம்
* உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மது அருந்த கூடாது.
* கர்ப்ப காலத்தில் மது அருந்த கூடாது
* உடம்பில் பெரிய காயங்கள் ஏற்பட்ட சமயங்களில் மது அருந்தக் கூடாது.

டெல்லியின் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவின் தகவல்,
கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே ஏராளமான தவறான புரிதலும் நிலவி வருகிறது. வெப்பம் அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் அகற்றப்பட்டு விடும் என்பதை அவர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, "சிங்கப்பூர் போன்ற சூடான நாடுகளுக்கும் ஸ்வீடன் மற்றும் ஐரோப்பாவின் குளிர் நாடுகளுக்கும் கூட கொரோனா வைரஸ் தாக்கம் பரவியுள்ளன " என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே மாதிரி கொரோனா வைரஸ் தொற்று காற்று வழியாக பரவாது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து தொற்று மற்றொரு நபரை பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளும் போது தொற்று எளிதாக பரவுகிறது.

ஆல்கஹால் குடிப்பதால் என்ன பிரச்சினை உண்டாகிறது?
மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு அவர்களின் கல்லீரல் சீக்கிரமே பாதிப்படைந்து விடும். இது மனித உடலின் பல பகுதிகளையும் பாதிக்கிறது. ஆனால் மக்கள் எப்போதாவது குடிப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படாது என்று நம்புகின்றனர். ஆனால் சிறிய அளவு மது கூட ஆபத்தானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது முதலில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மதுவால் ஏற்படும் பாதிப்புகள்:
* ஆல்கஹால் மூளையை வேலை செய்ய விடாமல் தடுக்கிறது.
* உடலின் மற்ற செயல்பாடுகளிலும் குறுக்கிடுகிறது.
* அதிகப்படியான ஆல்கஹால் காரணமாக கல்லீரல் பாதிப்பு மற்றும் மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படும்.
* புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது.

பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்:
* ஆல்கஹால் அருந்துவது உங்களை கொரோனாவில் இருந்து காக்கும் என நினைப்பது தவறானது என்றும் அவர் கூறியுள்ளார் .
* எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில், நீங்கள் கைகளை சரியாகக் கழுவினால் கொரோனா வைரஸைத் தவிர்க்கலாம். "கைகளை வெளியில் இருந்து வந்தவுடன் சோப்புடன் நன்கு சுத்தம் செய்யப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
* அதே மாதிரி நீங்கள் வெளியில் பயணம் செய்யும் சமயங்களில் கைகளில் சானிடைசர் பயன்படுத்துங்கள். இது உங்க கைகளை சுத்தமாக வைக்க உதவும்.

பரவும் விதம்
கொரோனா வைரஸ் என்பது ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு உடல் வழியாக தொற்றிப் பரவுகிறது. கோழி மற்றும் மட்டன் போன்ற அசைவ உணவை உட்கொள்வதன் மூலம் வைரஸ் ஒரு நபருக்குள் நுழையாது என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளுங்கள். எனவே கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய தொற்று என்றும் அவர் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications