Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இரவு நேரத்தில் இருமல் வாட்டி எடுக்குதா? இருமலைப் போக்கி ஆழ்ந்த உறக்கம் பெறுவதற்கான வழிகள் இதோ!
பனிக்காலம் என்பதால் ஜலதோஷம், மூக்கடைப்பு போன்றவை தவிர்க்க முடியாததாகும். ஜலதோஷம் என்றாலே இருமலும் சேர்ந்து இருக்கும். அதுவும் குறிப்பாக இரவில் படுக்கும் போது இருமல் அதிகமாகலாம்.
பனிக்காலம் என்பதால் ஜலதோஷம், மூக்கடைப்பு போன்றவை தவிர்க்க முடியாததாகும். ஜலதோஷம் என்றாலே இருமலும் சேர்ந்து இருக்கும். அதுவும் குறிப்பாக இரவில் படுக்கும் போது இருமல் அதிகமாகலாம். ஓரளவிற்கு சளி குறையும் போதும் வறட்டு இருமல் நம்மை வாட்டி எடுக்கும். இரவு நேரத்து இருமல் நம்மையும் நமக்கு அருகில் இருப்பவர்களையும் தூங்க விடாமல் செய்துவிடும்.

ஆனால் சில சக்திமிக்க தீர்வுகள் மூலம் இயற்கையான வழியில் இருமலைப் போக்க முடியும். நீங்கள் தொடர்ந்து இரவு நேரத்தில் இருமல் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்தால் கீழ்காணும் தீர்வுகளை முயற்சித்து நிவாரணம் பெறலாம். இதனால் உங்கள் தூக்க பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

தேநீர் அருந்துங்கள்
தேநீர் தொண்டைக்கு இதமளிக்கும். சிறந்த நிவாரணத்திற்கு இஞ்சி தேநீர் பருகலாம். மற்றொரு சிறந்த தேர்வு மஞ்சள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர். இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு கப் தேநீர் பருகலாம். இருமல் மற்றும் சளிக்கான அறிகுறிகளிலிருந்து இயற்கையான முறையில் நிவாரணம் பெற தேநீர் உங்களுக்கு உதவும். துளசி தேநீர் மற்றும் இதர மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர் கூட இருமலை எதிர்த்து போராட உதவும்.

தேன்
உடலுக்கு பல வழிகளில் நன்மை புரிவது தேன். குளிர்காலத்தில் தேனை உங்கள் உணவில் கட்டாயம் இணைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக இரவு நேரத்தில் இருமலைத் தடுக்க தேன் சிறந்த முறையில் உதவுகிறது. வெதுவெதுப்பான பால் அல்லது ஒரு கப் தேநீருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம். இன்னும் மற்ற வழிகளிலும் தேனை உங்கள் உடலில் சேர்த்துக் கொள்ள முடியும்.

இஞ்சி
இருமலை எதிர்த்து போராடும் சக்திமிக்க தன்மை இஞ்சியில் உண்டு. புதிய இஞ்சி துண்டுகள் கொண்டு இஞ்சி தேநீர் தயாரித்து பருகலாம். சிறிதளவு இஞ்சியை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம். இதனை உறங்கச் செல்வதற்கு முன் பருகுவதனால் இருமல் தடுக்கப்படும். இரண்டு மூன்று நாட்களில் உங்கள் உடலில் நல்ல முன்னேற்றமும் தெரியும்.

வெந்நீர் ஆவி பிடிப்பது
சளி மற்றும் இருமல் பாதிப்பு ஏற்படும் போது பலரும் பயன்படுத்தும் ஒரு எளிய வீட்டுத் தீர்வு ஆவி பிடிப்பது. உடனடி மற்றும் விரைவான நிவாரணம் பெற இந்த முறை உங்களுக்கு கைகொடுக்கும். மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறவும் இது உதவும்.

சூடான திரவங்கள்
இருமல் மற்றும் சளியில் இருந்து வெளிவருவதற்கு முக்கிய தேவை திரவங்கள். இரவு நேரத்தில் இருமல் ஏற்படுவதைத் தவிர்க்க, நிறைய சூடான திரவங்களை பருகலாம். வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து பருகுவதால் நல்ல தீர்வு கிடைக்கும். இருமலை எதிர்த்து போராட சூப் பருகுவதும் ஒரு சிறந்த தீர்வாகும்.



Click it and Unblock the Notifications