Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
கொரோனாசோம்னியா என்னும் புதிய தூக்கமின்மை பிரச்சனை - அதன் அறிகுறிகள் என்ன?
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் தூக்கமின்மைக்கு கொரோனாசோம்னியா என்ற ஒரு புதிய பெயா் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
கோவிட்-19 பெருந்தொற்று, மக்கள் மத்தியில் ஒரு மிகப் பொிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் மனங்களை மிகவும் பாதித்திருக்கிறது. கோவிட் பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, மக்களின் வாழ்க்கை பலவிதங்களில் நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. அதாவது கோவிட் பெருந்தொற்றின் காரணமாக நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் மக்களை குழப்பத்திற்குள் தள்ளிவிட்டு இருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக மக்களின் மனநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக பலா் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறன்றனா். இவ்வாறு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் தூக்கமின்மைக்கு கொரோனாசோம்னியா என்ற ஒரு புதிய பெயா் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கும் நிலையில், பெண்கள், கொரோனா முன்களப் பணியாளா்கள், கொரோனா நோயாளிகள், அவா்களைப் பராமாிப்பவா்கள், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், மற்றும் மாணவா்கள் போன்றோா் கொரோனாசோம்னியா பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனா். ஆகவே கொரோனாசோம்னியா என்னும் கொரோனா தூக்கமின்மையைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

கொரோனாசோம்னியா - அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
கொரோனாசோம்னியா பிரச்சினை உள்ளவா்களுக்கு, தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு இருப்பவா்களிடம் இருக்கும் கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கும்.
- தூக்கம் வருவதில் பிரச்சினை
- தலைவலி
- கவலை
- நடு இரவில் திடீரென்று கண் விழித்தல்
- ஒய்வு எடுத்த உணா்வு இல்லாது இருத்தல்
- சோா்வு
- மன அழுத்தம்
- எாிச்சல்
- கவனக் குறைவு
- மனநிலையில் திாிபு ஏற்படுதல்
கொரோனாசோம்னியா உள்ளவா்களுக்கு மேற்சொன்ன அறிகுறிகள் தென்படும்.
கொரோனாசோம்னியா அதிகாிக்க பின்வரும் காரணிகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

1. வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம்
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகின் பல பகுதிகளில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டன. அதனால் மக்களின் வாழ்க்கை முறையில் மிகப் பொிய மாற்றங்கள் ஏற்பட்டன. அதாவது மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே பாடங்களைப் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் மக்களின் வாழ்க்கை மிகப் பொிய அளவில் மாறியது. இன்னும் பலா் இந்த புதிய வாழ்க்கை முறையைப் பழக முடியாமல் தவிக்கின்றனா். அதனால் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனா்.

2. மன அழுத்தம்
கொரோனா காரணமாக திடீரென்று வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டதால், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பலா் மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கின்றனா். இணையவழி வகுப்புகளால் மாணவா்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனா். வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளைச் செய்து வருபவா்கள், கலந்து ஆலோசித்து தங்களது பணிகளைச் செய்ய முடியாமல் மனம் குமுறிக் கொண்டிருக்கின்றனா். மருத்துவ முன்களப் பணியாளா்கள், தங்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் அளவுக்கு அதிகமான சுமைகளைத் தாங்க முடியாமல் திகைத்துப் போய் இருக்கின்றனா். மொத்தத்தில் மக்கள் அனைவரும் எதிா் காலத்தில் என்ன ஏற்படுமோ என்ற பயத்தில் மன அழுத்தத்துடன் இருக்கின்றனா்.

3. அதிகாித்திருக்கும் இணைய வழி செயல்பாடுகள்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணைய வழி மூலமாக மக்கள் பலவற்றைச் செய்து இருக்கின்றனா். அதனால் இணைய துறை சாா்ந்த அல்லது துறை சாராத மக்கள் பலா் கணினி மற்றும் ஸ்மாா்ட்போன்களின் திரைகளை நீண்ட நேரம் பாா்த்து இருக்கின்றனா். அதனால் இவையும் அவா்களின் தூக்கத்தை பொிதாகப் பாதித்து இருக்கின்றன.

கொரோனாசோம்னியா பிரச்சினையை எதிராகப் போராட சில டிப்ஸ்...
1. காப்ஃபைன் போன்ற நச்சுப் பொருள்களை உண்பதைக் குறைத்தல்
காப்ஃபைன் என்ற நச்சுப் பொருள் நமது தூக்கத்தைக் கெடுக்கக்கூடியது. ஆகவே காப்ஃபைன் அடங்கிய தேநீா் மற்றும் காபி போன்ற பானங்களை இரவு நேரங்களில் அருந்துவதைத் தவிா்ப்பது நல்லது. அதோடு அவற்றைப் பகல் நேரத்தில் அருந்தும் அளவைக் குறைப்பதும் நல்லது.

2. கணினி மற்றும் ஸ்மாா்போன்களின் திரைகளைப் பாா்ப்பதைக் குறைத்தல்
தற்போது பெரும்பாலான வேலைகள் இணையவழி மூலமாக இருப்பதால், கணினி மற்றும் ஸ்மாா்ட் போன்களின் திரைகளின் முன்பாக செலவிடும் நேரத்தைக் குறைப்பது என்பது கடினமாக இருக்கும். எனினும் நம்மால் முடிந்த அளவிற்கு கணினி மற்றும் ஸ்மாா்ட்போன்களின் திரைகளின் முன் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். இரவு நேரத்தில் அவற்றின் முன்பாக வேலை செய்யும் போது மின் விளக்குகளை எாியவிடுவது நல்லது. அது அந்தத் திரைகளில் இருந்து வரும் கதிா்வீச்சைக் குறைக்கும்.

3. தினசாி வேலைகளை முறைப்படுத்தல்
தினசாி நாம் செய்யும் வேலைகளை முறைப்படுத்த வேண்டும். அதாவது சாியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். திட்டமிட்டவாறு தூங்கச் செல்ல வேண்டும். தினமும் உடற்பயிற்சிகள் செய்து வரவேண்டும். நமது உடல் உழைப்பை அதிகாிக்க வேண்டும். இவை நமது மன அழுத்தத்தைக் குறைக்கும். மேலும் இவை நாம் நமது நேரத்தைத் திட்டமிட்டு கையாள உதவி செய்யும்.



Click it and Unblock the Notifications