For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் உங்ககிட்ட இருந்தா? உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்...உடனே மருத்துவரை பாருங்க..!

சிறுநீரக கற்கள் பிரச்சனையுள்ள பெரும்பாலான மக்கள் தாங்கள் சிறுநீரகம் கழிக்கும்போது சிறுநீரில் இரத்தம் வெளியேறும் பிரச்சனையை சந்திக்கிறார்கள்.

|

இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரகம் நம் உடலில் உள்ள மிகவும் முக்கியமான செயல் உறுப்பு. இவை, பாதிக்கப்படும்போது, நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் மருத்துவ நிலைகள் காரணமாக உங்கள் உடலில் சிறுநீரக கற்கள் ஏற்படலாம். சிறுநீரகக் கற்கள் தொடர்பான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு அது மிகவும் சங்கடமானதாகவும் அசெளகரியமானதாகவும் இருக்கும். சிறுநீரக கற்கள் என்பது உங்கள் சிறுநீரகங்களுக்குள் உருவாகும் கனிமங்கள் மற்றும் உப்புகளிலிருந்து கட்டப்பட்ட கடினமான வைப்புகளாகும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

Common signs of kidney stones you should not overlook in tamil

உணவுப்பழக்கம், அதிக எடை, சில மருத்துவ நிலைமைகள் மற்றும் சில சப்ளிமெண்ட்ஸ் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல காரணிகள் சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும். பாதிப்பு நிலை எவ்வளவு மேம்பட்டது என்பதைப் பொறுத்து அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம். சிறுநீரக கற்களின் பொதுவான சில அறிகுறிகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுமையான வலி

கடுமையான வலி

ஆய்வின் கூற்றுப்படி, சிறுநீர்க்குழாய்களில் உருவாகும் சிறுநீரகக் கல் சிறுநீர் ஓட்டத்தைத் தடுக்கிறது மற்றும் சிறுநீரகம் வீங்கி சிறுநீர்க்குழாய் பிடிப்பை ஏற்படுத்துகிறது. இது மிகவும் வலி நிறைந்ததாக இருக்கும். விலா எலும்புகளுக்குக் கீழே பக்கத்திலும் பின்புறத்திலும் ஏற்படும் வலி கடுமையானது மற்றும் கூர்மையானது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதிக்கு பரவும் வலி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தீவிர நிலையை ஏற்படுத்தலாம். மேலும், சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு போன்றவையும் சிறுநீரகக் கற்கள் பிரச்சனையைக் குறிக்கலாம்.

சிறுநீர் பிரச்சினைகள்

சிறுநீர் பிரச்சினைகள்

சிறுநீரக கற்கள் சிறுநீர் கழிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பது, சிறுநீர் கழிக்கும் போது எரியும் வலி மற்றும் மேகமூட்டமான சிறுநீர் ஆகிய அறிகுறிகள் இதில் அடங்கும். இவை அனைத்தும் பெரும்பாலும் மற்ற சிறுநீர் நிலைகள் என தவறாக புரிந்து கொள்ளப்படலாம். இருப்பினும், அதைக் கண்டறிய உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்வதே சிறந்த வழி. இல்லையெனில், மருத்துவரிடம் செல்லுங்கள்.

சிறுநீரில் இரத்தம்

சிறுநீரில் இரத்தம்

சிறுநீரக கற்கள் பிரச்சனையுள்ள பெரும்பாலான மக்கள் தாங்கள் சிறுநீரகம் கழிக்கும்போது சிறுநீரில் இரத்தம் வெளியேறும் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதை 'ஹெமாட்டூரியா' என்றும் அழைப்பர். சிறுநீரின் தோற்றம் பொதுவாக இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில், சிறுநீர் மாதிரியை ஆய்வகத்தில் பரிசோதிக்கும் வரை இரத்தம் அரிதாகவே தெரியும். ஆதலால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

பொதுவான அறிகுறிகள்

பொதுவான அறிகுறிகள்

மிகவும் பொதுவான சில அறிகுறிகளில் குமட்டல் மற்றும் வாந்தியும் அடங்கும். சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு தொற்று இருந்தால் காய்ச்சல் மற்றும் குளிர்ச்சியையும் அனுபவிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்

சிறுநீரக கற்கள் இருப்பதைக் கண்டறிவதில் வழக்கமான பரிசோதனைகள் உதவக்கூடும் என்றாலும், அது எப்போது மிகவும் தீவிரமாக ஆகிறது என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். ஏனெனில், மருத்துவரை நீங்கள் எப்போது உடனே அணுக வேண்டும் என்று தெரிந்துகொள்ள முடியும். கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

கூர்மையான, கடுமையான வலியை அனுபவிக்கிறீர்கள்

வலி குமட்டல் வாந்தியுடன் சேர்ந்துள்ளது

வலி காய்ச்சல் மற்றும் குளிர்ச்சியுடன் சேர்ந்துள்ளது

உங்கள் சிறுநீரில் இரத்தம்

சிறுநீர் கழிப்பதில் சிரமம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common signs of kidney stones you should not overlook in tamil

Here we are talking about the Common signs of kidney stones you should not overlook in tamil.
Story first published: Monday, January 2, 2023, 13:20 [IST]
Desktop Bottom Promotion