For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்கள் அதிகம் அவஸ்தைப்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் எவை தெரியுமா?

உலகிலேயே இந்திய டயட் தான் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்தியர்களிடம் ஒருசில பொதுவான ஊட்டச்சத்துக் குறைபாடுகள் காணப்படுகின்றன.

|

உடல் சீராகவும், சிறப்பாகவும் செயல்படுவதற்கு மைக்ரோ மற்றும் மக்ரோ ஊட்டச்சத்துக்கள் அவசியம். இதில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை நம் உடல் உற்பத்தி செய்வதில்லை. இதனால் தான் நாம் உணவை சார்ந்துள்ளோம். இந்த நிலையில், சரிவிகித உணவு முறையை மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஊட்டச்சத்து அறிக்கையானது, அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 10 சதவீத மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதாகக் கூறுகிறது.

Common Nutritional Deficiencies In Indians

உண்ணும் உணவுமுறை என்று வரும் போது, அதில் காலநிலை, பிராந்தியம், நாடு போன்ற அனைத்தும் முக்கிய பங்கை வகிக்கின்றன. உலகிலேயே இந்திய டயட் தான் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்தியர்களிடம் ஒருசில பொதுவான ஊட்டச்சத்துக் குறைபாடுகள் காணப்படுகின்றன. இங்கு அந்த ஊட்டச்சத்துக்கள் எவையென்றும், அந்த ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரும்புச்சத்து

இரும்புச்சத்து

இந்தியர்கள் மட்டுமின்றி, உலகில் பலருக்கும் இருக்கும் ஒரு ஊட்டச்சத்துக் குறைபாடு என்றால் அது இரும்புச்சத்து குறைபாடு தான். உலகில் சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரும்புச்சத்து குறைபாட்டைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றில், இந்தியாவில் இளம் பருவ பெண்களிடம் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 200 இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 50 சதவீதத்தினருக்கு இரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குறைபாட்டை எதிர்கொள்ள இந்திய தேசிய சுகாதார போர்டல், இரும்புச்சத்து மருந்து மாத்திரைகள் அல்லது இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிட பரிந்துரைத்தது.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

* பச்சை இலைக் காய்கறிகள்

* முழு தானியங்கள்

* பீன்ஸ்

* நட்ஸ்

* பேரிச்சம்பழம்

* பீட்ரூட்

வைட்டமின் டி

வைட்டமின் டி

இந்திய மக்களிடையே காணப்படும் மற்றொரு பொதுவான ஊட்டச்சத்துக் குறைபாடு தான் வைட்டமின் டி குறைபாடு. உலகில் சுமார் 50-90 சதவீதத்தினருக்கு இந்த குறைபாடு உள்ளது. வைட்டமின் டி சூரியக் கதிர்களிடம் மட்டுமின்றி, குறிப்பிட்ட உணவுகளிலும் உள்ளது. வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால், தலையில் அதிகம் வியர்க்கும். அத்தகையவர்கள் வைட்டமின் டி நிறைந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும்.

தாக்கங்கள்

தாக்கங்கள்

ஒருவரது உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்து, அதை சரிசெய்ய முயற்சியை மேற்கொள்ளாமல் இருந்தால், அதன் விளைவாக உடலின் ஒருசில உறுப்புக்கள் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடும். அவையாவன:

* எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படும்

* இதய ஆரோக்கியம் பாதிக்கும்

யாருடைய நிலைமை மோசமாகும்?

யாருடைய நிலைமை மோசமாகும்?

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், அது நிலைமையை மேலும் மோசமாக்கும். எனவே இத்தகையவர்கள் உடனே வைட்டமின் டி குறைபாட்டை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

* மீன் அதிகம் சாப்பிட வேண்டும்.

* அதிகாலையில் எழுந்து சூரிய கதிர்கள் மேலே படும் படி சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* உணவுகளில் வைட்டமின் டி போதுமான அளவு நிறைந்திருக்காது. எனவே சப்ளிமெண்ட்டுகளையும் உடன் எடுக்க வேண்டும்.

அயோடின்

அயோடின்

தைராய்டு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு அயோடின் மிகவும் அவசியமானது. இது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கச் செய்வதோடு, வளர்ச்சி ஹார்மோன்களின் சுரப்பிற்கும் பொறுப்பாகும். உடலால் போதுமான அயோடினை உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவுகளில் இருந்து தான் இந்த சத்தை பெற முடியும்.

325 இந்திய மாவட்டங்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில், 263 மாவட்டங்களில் தீவிரமான அயோடின் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. எனவே அன்றாட டயட்டில் அயோடைஸ்டு உப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது மற்றும் ஆரோக்கியமானது.

அயோடின் நிறைந்த உணவுகள்

அயோடின் நிறைந்த உணவுகள்

அயோடின் குறிப்பிட்ட சில உணவுகள் அதிகம் நிறைந்துள்ளது. அவையாவன:

* சீஸ்

* மாட்டுப் பால்

* முட்டைகள்

* தயிர்

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ குறைபாட்டினால், கண்கள் பலவீனமாவதோடு, முற்றிய நிலையில் கண் பார்வையையும் இழக்கக்கூடும். குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுத்தால், அந்த குழந்தைக்கு வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படாது. மேலும் இந்த வைட்டமின் தான் எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது மற்றும் மன இறுக்கத்தையும் எதிர்த்துப் போராடுகிறது.

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள்

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள்

வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்ப்பதன் மூலம், இந்த குறைபாட்டைத் தடுக்கலாம். வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளாவன:

* கேரட்

* குடைமிளகாய்

* காட் லிவர் ஆயில்

* சர்க்கரை வள்ளிக்கிழங்கு

வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ளவும், ஆரோக்கியமான சருமத்திற்கும் முக்கியமானது. இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 73 சதவீத மக்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது. சிகரெட் பிடிப்பதாலும் வைட்டமின் சி குறைபாடு ஏற்படும்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

வைட்டமின் சி புளிப்புச் சுவையைக் கொண்ட உணவுகளில் அதிகம் இருக்கும். வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளாவன:

* ஆரஞ்சு

* கிவி

* எலுமிச்சை

* காலிஃப்ளவர்

* ப்ராக்கோலி

* குடைமிளகாய்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Nutritional Deficiencies In Indians

Here are some common nutritional deficiencies in indians. Read on to know more...
Story first published: Friday, September 20, 2019, 14:29 [IST]
Desktop Bottom Promotion