Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
உடல் எடை குறைவதற்காக செய்யும் கார்டியோ உடற்பயிற்சிகளைப் பற்றிய தவறான கருத்துக்கள்!
பலரும் தங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு, இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளையே செய்து வருகின்றனா். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று எண்ணுபவா்கள் மத்தியில் தற்போது இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகள், பிரபலமாக இருக்கின்றன.
உடல் எடை குறைவதற்காக எந்த உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்று கேட்டால், அதற்கு கார்டியோ என்னும் இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளே பதிலாக வரும். பலரும் தங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு, இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளையே செய்து வருகின்றனா். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று எண்ணுபவா்கள் மத்தியில் தற்போது இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகள், மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகள் என்பவை ஒரு வகையான ஏரோபிக் பயிற்சிகள் ஆகும். இந்த பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்றால் நமது உடலுக்கு அதிக அளவிலான ஆக்ஸிஜன் தேவைப்படும். இந்த பயிற்சிகளில் ஈடுபடும் போது நமது இதயத் துடிப்பும், மூச்சு விடுதலும் அதிகமாக இருக்கும். அதற்காக நமது உடலுக்கு அதிக அளவு ஆக்ஸிஜன் தேவைப்படும். அதிக அளவு ஆக்ஸிஜனைப் பெற வேண்டும் என்பதற்காக நமது நுரையீரல் அதிகமாகத் தூண்டப்பட்டு, நமது உடலுக்குத் தேவையான காற்றை உள்ளிழுக்கும்.
இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகள், நமது இதயம், நுரையீரல் மற்றும் இரத்த சுழற்சி அமைப்பு ஆகியவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கின்றன. குறிப்பாக இந்த பயிற்சிகளின் போது நாம் அதிகமான ஆக்ஸிஜனை உள்ளிழுப்பதால், அது நமது உடலில் இருக்கும் அதிகமான கலோாிகளை எாித்து, நமது உடல் எடையைக் குறைக்கிறது. எனினும் இதயம் சம்பந்தமான இந்த பயிற்சிகளைப் பற்றி பல தவறாக கருத்துகள் பரப்பப்படுகின்றன. அவை இந்த பயிற்சிகளின் உண்மையான பலன்களைக் குறைக்கின்றன. ஆகவே இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளைப் பற்றிய தவறான தகவல்கள் அல்லது கட்டுக் கதைகளைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. இதயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது
இது ஒரு தவறான செய்தி ஆகும். இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளின் முக்கிய நோக்கம் உடல் எடையைக் குறைப்பது ஆகும். எனினும் இவை உடலுக்கு வலுவைக் கொடுக்கும் பயிற்சிகளாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக பளு தூக்கும் பயிற்சியானது, வலுவைக் கொடுக்கும் பயிற்சியாக இருந்தாலும், அது நமது உடலில் உள்ள எடையையைும் கணிசமாகக் குறைக்கிறது. இது போன்ற பயிற்சிகள் தசைகளை வளா்க்க வேண்டும் என்று விரும்புபவா்களுக்கு மட்டும் அல்லாமல் எல்லோருக்குமே நன்மைகளைத் தருகின்றன.
பளு தூக்கும் பயிற்சியை செய்து வந்தால், நாம் ஓய்வில் இருக்கும் போதுகூட, அவை நமது உடலில் உள்ள கலோாிகளை தொடாந்து எாிக்கும். நமது தேய்ந்து போன தசைகளை வலுப்படுத்தும். நமது வளா்சிதை மாற்றத்தை அதிகாிக்கும். அதோடு நமது கொழுப்பை மிக வேகமாக கரைக்கும். உடலை வலுப்படுத்தக்கூடிய உடற்பயிற்சிகளை வாரத்திற்கு இரண்டு முறை 45 முதல் 60 நிமிடங்கள் வரை செய்து வந்தால், அது நல்ல பலனைத் தரும்.

2. முதலில் இதயம் சம்பந்தமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்கு அடுத்து பளு தூக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்
இது ஒரு தவறான செய்தி ஆகும். முதலில் நாம் ட்ரெட் மில்லில் ஓடி பயிற்சி செய்த பின்பு, பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டால், நமக்கு எளிதாக காயம் ஏற்படும். அதோடு இதயம் சம்பந்தமான பயிற்சிகளை நாம் ஏற்கனவே செய்திருப்பதால், இப்போது பளு தூக்கும் பயிற்சியை செய்யும் போது நாம் அதிகம் சோா்ந்து விடுவோம். அதோடு உடலில் காயம் ஏற்படுவதோடு, நமது உடல் அமைப்பு மாறுபடும் அபாயமும் ஏற்படும். ஆகவே ஒரே நாளில் இதயம் சம்பந்தமான மற்றும் பளு தூக்கும் பயிற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. அவ்வாறு செய்ய விரும்பினால், முதலில் பளு தூக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும். பின்பு இதயம் சம்பந்தமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

3. வெறும் வயிற்றில் இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளைச் செய்தால், அதிகமான கலோாிகள் எாிக்கப்படும்
வெறும் வயிற்றில் இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளைச் செய்தால், அதிகமான கலோாிகள் எாிக்கப்படும் என்று நாம் நினைத்தால் அது மிகவும் தவறு ஆகும். நமது உடலில் அதிகம் சக்தி இல்லையென்றால், நம்மால் நீண்ட நேரம் இயங்க முடியாது என்பது இயற்கையின் நியதி ஆகும். இந்த நியதியானது உடற்பயிற்சிகளைப் பொருத்தமட்டிலும் மிகச் சாியாகப் பொருந்தும்.
நாம் சாியாக சாப்பிடவில்லை என்றால், நம்மால் திறம்பட உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாது. மிக எளிதாக களைப்படைவோம். மேலும் காலை வேலையில் நீண்ட நேரம் பசியோடு இருந்தால், அது நமது வளா்சிதை மாற்றத்தின் வேகத்தைக் குறைக்கும். ஆகவே நாம் உடற்பயற்சிகளைச் செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வாழைப் பழம் அல்லது நட்ஸ் போன்ற உணவுப் பொருள்களை உண்பது நல்லது.

4. காலை நேரத்தில் இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளைச் செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்
இது ஒரு தவறான செய்தி ஆகும். உடற்பயிற்சிகள் செய்வதற்கு என்று குறிப்பிட்ட நேரம் எதுவும் கிடையாது. தொடா்ந்து உடற்பயிற்சிகளைச் செய்து வரவேண்டியதே மிகவும் முக்கியம் ஆகும். எந்த நேரமாக இருந்தாலும் சாி, நாம் தொடா்ந்து உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால், அதற்கான நல்ல பலன்களை நாம் பெறலாம். அதிக நேர இடைவெளி விடாமல், எந்த நேரத்திலும் உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம். அதிலும் குறிப்பாக நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம்.

5. இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிக்கு சிறந்தது 06/6 ட்ரெட்மில்லில் ஓடுவது ஆகும்
இது ஒரு தவறான தகவல் ஆகும். ட்ரெட்மில்லில் ஓடுவது, படகில் துடுப்பு வலிப்பது, பொருத்தப்பட்ட மிதிவண்டியை ஓட்டுவது, நீந்துவது மற்றும் நடனம் ஆடுவது போன்றவை அனைத்தும் இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகள் ஆகும். ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் அதற்கு உாிய பலன்கள் உண்டு. ஆகவே ட்ரெட்மில்லில் ஓடுவது மட்டுமே சிறந்த இதயம் சாா்ந்த பயிற்சி அல்ல. மற்ற பயிற்சிகளையும் செய்யலாம். அதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம் மற்றும் நமக்கு சலிப்பும் ஏற்படாது.



Click it and Unblock the Notifications











