Latest Updates
-
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும்
இந்த உடற்பயிற்சியை தினமும் செய்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை சீக்கிரம் சரியாகும் தெரியுமா?
ஆய்வு ஒன்றில் விறைப்புத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 40 சதவீதம் ஆண்கள் உடற்பயிற்சியை செய்ததால் பலன் பெற்றதோடு,விறைப்பு செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆண்கள் வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கும் ஓர் பிரச்சனை தான் விறைப்புத்தன்மை பிரச்சனை. இப்பிரச்சனை ஆண்களை அதிகமாக எரிச்சலுக்கு உள்ளாக்குவதோடு, பெரும் சங்கடத்திற்கும் உள்ளாக்கும். ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனையானது பல காரணங்களால் ஏற்படலாம். அதில் இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பல ஆண்கள் இப்பிரச்சனையை எதிர்த்து போராட மருத்துவ உதவிகளை நாடுகின்றனர். ஆனால் வெறும் மருந்து மாத்திரைகள் மட்டும் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கிவிடாது. ஆய்வு ஒன்றில் விறைப்புத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 40 சதவீதம் ஆண்கள் உடற்பயிற்சியை செய்ததால் பலன் பெற்றதோடு, சாதாரண விறைப்பு செயல்பாட்டை மீட்டெடுத்ததுடன், கூடுதலாக 33.5 சதவீத ஆண்களுக்கு விறைப்பு செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எந்த வகையான உடற்பயிற்சி சிறந்தது?
இடுப்பு தசைகளை வலுவாக்க என்று வரும் போது, கெகல் உடற்பயிற்சிகள் மிகவும் சிறந்தவை. இந்த கெகல் பயிற்சிகள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறப்பானவை. கெகல் பயிற்சிகளால் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த உடற்பயிற்சி புல்போகெவர்னோசஸ் தசையை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் விறைப்புத்தன்மையின் போது உந்துவதற்கும், சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப்பையை காலியாக்குவதற்கும் உதவுகிறது.

அடிப்படை கெகல் பயிற்சி
உங்கள் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுவாக்கும் ஓர் எளிய பயிற்சி என்றால், அது சிறுநீர் கழிக்கும் போது பல முறை நிறுத்துவதாகும். இப்படி செய்வது ஒரு அற்புதமான பயிற்சி. இந்த செயலை செய்ய உதவும் தசைகளுக்கு ஒருவர் இம்மாதிரியான பயிற்சியை அடிக்கடி செய்தால், விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கலாம். அதுவும் இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று வரை செய்வது நல்லது.

மன அழுத்தம் வேண்டாம்
கெகல் பயிற்சியை செய்ய ஆரம்பிக்கும் போது, ஆரம்ப காலத்தில் தொடர்ந்து 10 முறை செய்து முடிப்பது என்பது முடியாத ஒன்றாக இருக்கலாம். இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். மன அழுத்தம் அதிகரித்தால், உடலில் இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, விறைப்புத்தன்மை பிரச்சனை மேலும் தீவிரமாகலாம். எனவே மன அழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்.

ஏரோபிக் உடற்பயிற்சிகள்
இடுப்புத் தசைகளைச் சுற்றியுள்ள தசைகளுக்கான உடற்பயிற்சியை செய்வதன் மூலமும் விறைப்புத்தன்மை பிரச்சனையை எதிர்த்துப் போராடி ஜெயிக்கலாம். ஏரோபிக்ஸ் பயிற்சி விறைப்புத்தன்மை செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதிலும் ஒருவர் தினமும் 30 நிமிடம் சுறுசுறுப்பான மற்றும் வேகமான நடைப்பயிற்சியை மேற்கொண்டு வந்தாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.

ஏமாறாதீர்கள்
மூலிகை சப்ளிமெண்ட்டுகள் மூலம் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்யலாம் என்று கூறும் பல வலைத்தளங்களைக் காண்பீர்கள். ஆனால் இந்த பொறிகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்கும் போது, எப்போதும் சிக்கலின்றி பாதுகாப்புடன் இருக்கும் முறையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது.

இதர வழிகள்
விறைப்புத்தன்மை பிரச்சனையை எதிர்க்கும் சிறப்பான இயற்கை வழி என்றால் அது கெகல் உடற்பயிற்சிகள் மற்றும் ஏரோபிக் பயிற்சிகள் தான். ஒருவேளை இந்த பயிற்சிகளை மேற்கொண்டும் எவ்வித முன்னேற்றமும் தெரியாவிட்டால், மருத்துவரை அணுக தயக்கம் கொள்ளாமல், உடனே சந்திக்கவும்.

விரக்தி அடையாதீர்கள்
விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்ய பல சிகிச்சைகள் தற்போது உள்ளன. இருந்தாலும் கெகல் மற்றும் ஏரோபிக்ஸ் போன்றவற்றால் நல்ல பலன் கிடைப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். ஆகவே விறைப்புத்தன்மை பிரச்சனை இருந்தால், வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல், தொடர்ந்து அதை எதிர்த்துப் போராடும் வழிகளைத் தேடி போராடுங்கள். இதனால் நிச்சயம் பிரச்சனையை சரிசெய்ய முடியும்.



Click it and Unblock the Notifications
