Latest Updates
-
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க...
தினமும் இளநீர் குடிப்பீங்களா? அப்ப இந்த அளவுக்கு மேல குடிக்காதீங்க.. இல்லன்னா பல பிரச்சனைகளை சந்திப்பீங்க...
என்ன தான் இளநீர் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், அந்த இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் அதுவும் உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு இளநீருக்கு மேல் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
Coconut Water Side Effects: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கை பானங்கள் என்றதும் நம் அனைவரது நினைவிலும் முதலில் வருவது இளநீராகத் தான் இருக்கும். முக்கியமாக இயற்கை பானங்களிலேயே இளநீரில் தான் கலப்படம் செய்யவே முடியாது. இளநீர் ஒருவரது தாகத்தை தணிப்பதோடு, உடல் சூட்டைக் குறைக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது.

என்ன தான் இளநீர் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், அந்த இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் அதுவும் உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு இளநீருக்கு மேல் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

கலோரிகள் அதிகம்
இளநீரில் கலோரிகள் அதிகளவில் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. என்ன தான் இளநீரில் மற்ற பழச்சாறுகள் மற்றும் பிற பானங்களை விட சர்க்கரை குறைவாக இருந்தாலும், இவற்றில் கலோரிகள் அதிகளவில் உள்ளன. எனவே நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், அதிகமாக இளநீரைக் குடிக்காதீர்கள்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்
இளநீரில் டையூரிக் பண்புகள் அதிகளவில் உள்ளன. எனவே இளநீரை அதிகம் குடித்தால், அதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். அதுவே அளவாக குடித்து வந்தால், அது உடலுக்கு நீரேற்றத்தையும், ஆற்றலையும் மட்டுமே வழங்கும். எனவே கவனமாக இருங்கள்.

உடற்பயிற்சி பின் குடிக்கக்கூடாது
கடுமையான உடற்பயிற்சி செய்து முடித்த பின் உடலானது வறட்சியடைந்து இருக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே இளநீரைக் குடிக்கக் கூடாது. எப்போதுமே உடற்பயிற்சிக்கு பின் நீரைக் குடிப்பது தான் நல்லது. மேலும் அளவுக்கு அதிகமான தாகத்தில் இருக்கும் போது, இளநீரைக் குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் அதிகமான தாகத்தில் ஒன்றிற்கு இரண்டு இளநீரைக் குடிக்க நேரிடும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

சில வகையான அழற்சி இருப்பவர்கள் குடிக்கக்கூடாது
உங்களுக்கு பழம் அல்லது நட்ஸ் அழற்சி இருந்தால், இளநீரைக் குடிப்பதன் மூலம் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் இளநீரும் இந்த வகையை சேர்ந்தது என்பதால், இது அழற்சியை மோசமாக்கி, சில சமயங்களில் கடுமையானதாக மாற வாய்ப்புள்ளது.

இரத்த சர்க்கரை அதிகரிக்கலாம்
இளநீரில் சர்க்கரை குறைவாக இருக்கலாம். ஆனால் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இவை இரண்டும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. அதற்காக சர்க்கரை நோயாளிகள் இளநீரைக் குடிக்கக்கூடாது என்பதில்லை, அளவாக அதுவும் எப்போதாவது குடிக்கலாம்.

இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்கலாம்
உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் ஆபத்தானது. அதுவும் இரத்த அழுத்தத்திற்கு மாத்திரைகளை எடுத்து வருபவராயின், இளநீரைக் குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது இரத்த அழுத்தத்தை அளவுக்கு அதிகமாக குறைத்துவிடும். எனவே பிபி நோயாளிகள் இளநீரைக் குடிப்பதாக இருந்தால், மருத்துவரிடம் அனுமதி பெற்ற பின்னரே குடிக்க வேண்டும்.

எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை ஏற்படுத்தும்
இளநீரில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளன. எனவே ஒருவர் இளநீரை அதிகம் குடிக்கும் போது, அந்நபரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து, எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை ஏற்படுத்தி, கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை வரவழைத்துவிடும். மேலும் வெயிலில் அதிகமாக சுற்றுபவர்கள், இளநீரை குடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஹைபர்கேமியா என்னும் நிலையால் மயக்கமடைய வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications











