For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குட்-நியூஸ்: கொரோனாவுக்கு சீனாவே தடுப்பூசி கண்டுபிடிச்சுடுச்சாம்.. எப்போது வரும்? எவ்வளவு ஆகும்?

தி வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் தயாரிப்புகள் உருவாக்கிய இன்ஆக்டிவேட்டட் தடுப்பூசி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் வணிக ரீதியாக கிடைக்கப்பெறும் என்று சினோபார்மின் தலைவர் தெரிவித்துள்ளார்.

|

நாவல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அழித்துக் கொண்டு வருவதால், விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் அல்லும் பகலும் இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தற்போது வரை உலகெங்கிலும் சுமார் 160 தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட சோதனைகளில் உள்ளன. மேலும் 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ஏற்கனவே முக்கியமான மனித சோதனை கட்டத்தில் நுழைந்துள்ளன.

Recommended Video

Corona vaccine மக்களுக்கு இலவசமாக வழங்க திட்டம் - Australia PM அறிவிப்பு

Chinese Coronavirus Vaccine Will Be Available By December 2020

மனித பயன்பாட்டிற்கான ஒரு தடுப்பூசியை உருவாக்குவது என்பது ஒரு சிக்கலான மற்றும் நேரத்தை எடுத்துக் கொள்ளும் செயல்முறையாக இருக்கும் போது, விஞ்ஞானிகள் குறைந்த காலத்தில் ஒரு சிறப்பான கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

MOST READ: சமீப காலமாக கொரோனாவால் நிறைய பேர் இறப்பதற்கு இதுதான் காரணமாம்! - உஷாரா இருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிசம்பர் இறுதிக்குள் தடுப்பூசி

டிசம்பர் இறுதிக்குள் தடுப்பூசி

சமீபத்திய ஊடக அறிக்கையின் படி, தி வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் தயாரிப்புகள் உருவாக்கிய இன்ஆக்டிவேட்டட் தடுப்பூசி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் வணிக ரீதியாக கிடைக்கப்பெறும் என்று சீன அரசுக்கு சொந்தமான நிறுவனமான சினோபார்மின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, சீன தடுப்பூசி அதன் மூன்றாட கட்ட மனித சோதனைகளில் இருக்கிறது.

MOST READ: கொரோனா வைரஸின் பலவீனத்தை கண்டுபிடித்ததாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - அது என்னன்னு தெரியுமா?

சீன தடுப்பூசியின் விலை என்னவாக இருக்கும்?

சீன தடுப்பூசியின் விலை என்னவாக இருக்கும்?

சீனா தயாரித்த செயலற்ற தடுப்பூசி 2020 டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் சந்தைக்கு வரும் என்று அரசுக்கு சொந்தமான சீன நிறுவனமான சினோபார்மின் தலைவரான லியு ஜிங்ஜென் கூறினார். மேலும் சீனா தயாரித்துள்ள தடுப்பூசியின் விலை வரம்பைப் பற்றி பேசுகையில், இது 1000 யுவானுக்கும் குறைவானதாக இருக்கும் என்றும் கூறினார். இது இந்திய ரூபாய் மதிப்பின் படி 10,794.94 ஆகும்.

MOST READ: இன்னும் ஏன் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியலை-ன்னு தெரியுமா? இதோ சில உண்மை காரணங்கள்!

சீன தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

சீன தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ்ஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் படி, சீனா தயாரித்துள்ள தடுப்பூசியின் 1 டோஸ் கொரோனா வைரஸிற்கு எதிராக சுமார் 97 சதவீதம் பாதுகாப்பை வழங்கும் என்றும், 2 டோஸ் 100 சதவீத பாதுகாப்பை வழங்கும் என்றும் லியு ஜிங்ஜென் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, "நீங்கள் ஒரு ஷாட் போட்டால், 97 சதவீதம் பாதுகாப்பு, அதாவது ஆன்டிபாடிகள் உடலில் மெதுவாக உருவாகும். வழக்கமாக கோவிட்-19 ஐ எதிர்கொள்வதற்கு போதுமான அளவை நீங்கள் அடைய சுமார் அரை மாதம் தேவைப்படும். அதுவே நீங்கள் 2 ஷோட் போட்டால், 100 சதவீத பாதுகாப்பை எட்டக்கூடும்."

MOST READ: அறிகுறியைப் பொறுத்து 6 வகையான கொரோனா வைரஸ் இருக்குதாம் - புதிய ஆய்வில் தகவல்

சினோஃபார்ம் தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

சினோஃபார்ம் தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

சீனா தயாரித்துள்ள தடுப்பூசியானது வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிக்கல் புராடக்ட்டின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. இது ஒரு செயலற்ற கோவிட்-19 தடுப்பூசி ஆகும். சீன தடுப்பூசி உற்பத்தியாளர் சினோஃபார்ம் CNBG ஏற்கனவே மூன்றாம் கட்ட மனித சோதனைகளை நடத்து வருகிறது. அதன் முதல் மற்றும் இரண்டாம் மருத்துவ பரிசோதனைகளின் கட்டத்தில் வலுவான ஆன்டிபாடிகள் தூண்டப்பட்டது.

MOST READ: அறிகுறி எதுவுமே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் காமிக்குதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

28 நாள் இடைவெளி

28 நாள் இடைவெளி

இப்போதைக்கு சீன தடுப்பூசியானது 2 டோஸ் மட்டும் தன்னார்வலர்களுக்கு போடப்படுகின்றன மற்றும் இரண்டு டோஸ்களுக்கு இடையே 28 நாட்கள் இடைவெளி விடப்படுகின்றன. இதனால் போடப்பட்ட டோஸ் சிறப்பாக செயல்படுவதாக தெரிகிறது மற்றும் ஒவ்வொரு முறையும் தடுப்பூசியில் 4 மைக்ரோகிராம் மருந்து மட்டுமே உட்செலுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chinese Coronavirus Vaccine Will Be Available By December 2020

As per the latest media reports, the inactivated vaccine developed by The Wuhan Institute of Biological Products can be made commercially available by the end of December 2020, as per the head of the state-owned Chinese company Sinopharm.
Desktop Bottom Promotion