Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
இந்த பிரச்சனை இருந்தா காலிஃப்ளவரை சாப்பிடாதீங்க.. இல்லன்னா பிரச்சனை பெருசாயிடும்...
காலிஃப்ளவர் குளிர்கால காய்கறியாகும். எவ்வளவு சத்துக்களை காலிஃப்ளவர் கொண்டிருந்தாலும், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் காபிஃப்ளவரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்கறிகளில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் ஏராளமாக இருப்பதால், தினசரி உணவுகளில் காய்கறிகளை அதிகம் சாப்பிட உடல்நல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். காய்கறிகளை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். தற்போது குளிர்காலம் என்பதால், மார்கெட்டுகளில் காலிஃப்ளவரை அதிகம் காண முடியும். ஏனெனில் காலிஃப்ளவர் குளிர்கால காய்கறியாகும்.

காலிஃப்ளவரில் கரோட்டினாய்டுகள், ஃப்ளேவோனாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, அத்தியாவசிய கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இது தவிர காலிஃப்ளவர் குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸைக் கொண்டது என்பதால் இது சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற காய்கறி.
எவ்வளவு சத்துக்களை காலிஃப்ளவர் கொண்டிருந்தாலும், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் காபிஃப்ளவரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது நிலைமையை மோசமாக்கும். இப்போது எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அல்லது யாரெல்லாம் காலிஃப்ளவர் சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.

1. செரிமான பிரச்சனையைக் கொண்டவர்கள்
நீங்கள் ஏற்கனவே வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், காலிஃப்ளவரை சாப்பிடாதீர்கள். ஏனெனில் காலிஃப்ளவரில் இருக்கும் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானமாகாது மற்றும் அது செரிமான பிரச்சனையை இன்னும் தான் அதிகரிக்கும். ஆகவே தான் செரிமான பிரச்சனையை சந்திப்பவர்கள் காலிஃப்ளவரை தவிர்ப்பது நல்லது.

2. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்
தைராய்டு பிரச்சனையைக் கொண்டவர்களுக்கு காலிஃப்ளவர் தீங்கு விளைவிக்கும். எப்படியெனில் காலிஃப்ளவரை சாப்பிடும் போது, அது தைராய்டு சுரப்பியில் டி3 மற்றும் டி4 ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, பிரச்சனையை தீவிரமாக்கும். ஆகவே தான் தைராய்டு நோயாளிகள் காலிஃப்ளவரைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

3. மூட்டு வலி உள்ளவர்கள்
உங்களுக்கு மூட்டு வலி உள்ளதா? உங்கள் மூட்டுக்கள் வீங்கி இருக்கிறதா? அப்படியானால் உங்கள் உடலில் யூரிக் அதிகம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். உடலில் யூரிக் அமிலம் அதிகம் கொண்டவர்கள் காலிஃப்ளவரை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் காலிஃப்ளவர் நிலைமையை தீவிரமாக்கி, கடுமையான மூட்டு வலி மற்றும் வீக்கத்தை சந்திக்க வைக்கும்.

4. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள்
சிறுநீரக கல் பிரச்சனையைக் கொண்டவர்கள் தெரியாமல் கூட காலிஃப்ளவரை சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அது சிறுநீரக கல் பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கிவிடும். ஏனெனில் காலிஃப்ளவரில் கால்சியம் அதிகளவில் உள்ளது. எனவே இதை உட்கொண்டால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாக ஊக்குவிக்கும். எனவே சிறுநீரக நோயாளிகள் காலிஃப்ளவரைத் தவிர்ப்பது நல்லது.

5. இரத்த ஓட்ட பிரச்சனை மற்றும் உயர் இரத்த அழுத்தம் நோயாளிகள்
காலிஃப்ளவர் சாப்பிடும் போது இரத்தம் அதிகம் உறையும். எனவே ஏற்கனவே இரத்தம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், காலிஃப்ளவர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும், காலிஃப்ளவரை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

6. மலச்சிக்கல்
நீங்கள் ஏற்கனவே கடுமையான மலச்சிக்கல் பிரச்சனையை அனுபவித்து வருகிறீர்களா? மலச்சிக்கல் பிரச்சனைக்கு காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. ஆனால் காலிஃப்ளவரை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது மலச்சிக்கல் பிரச்சனையை இன்னமும் தான் அதிகரிக்கும்.

7. பாலூட்டும் பெண்கள்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காலிஃப்ளவரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காலிஃப்ளவர் சாப்பிட்டால், தாய்ப்பால் குடிக்கும் குழ்ந்தைகள் வயிற்று வலி, வாய்வுத் தொல்லையால் அவதிப்பட நேரிடும்.



Click it and Unblock the Notifications
