Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
நம்ம ஊரு ஸ்டைல 'வணக்கம்' சொன்னா கொரோனா வைரஸ் தாக்காதா என்ன?
நமஸ்காரம் ஒருவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கை குலுக்குவதால் கொரோனா போன்ற வைரஸ்கள் சீக்கிரம் நம்மை அண்டாமல் இருக்கவும் உதவுகிறது.
கொரோனா வைரஸின் பிடி இன்னும் கொஞ்சமும் தளரவில்லை என்பது மக்களுக்கு பெரும் கவலையாக இருந்து வருகிறது. இது ஒரு தொற்று நோய் என்பதால் மக்கள் ஒருவருக்கொருவர் நெறுங்கிப் பழகவே பயந்து வருகின்றனர். இந்த பயத்தை வேடிக்கையாக வைத்து ஏராளமான ம்மீஸ்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

கல்யாண வீட்டுக்கு சென்றால் கூட மணமக்களுக்கு கைகளை குலுக்காமல் 'வணக்கம்' செய்கிறார்கள் போன்ற வேடிக்கை விஷயங்களை சீரியஸாக அணுகுவதா என்ற மனப்போக்கை கொரோனா எல்லோர் மத்தியிலும் இட்டுச் சென்றுள்ளது. ஆனால் இந்த கோவிட்-19 வரும் போது தான் மக்களுக்கு நமஸ்தே யின் நன்மைகளே புரிகிறது. நம்ம ஊரு ஸ்டைலில் எல்லாருக்கும் நமஸ்தே வைப்பதால் என்ன நன்மைகள், இதனால் கோவிட்-19 பரவுவதை தடுக்க முடியுமா, வாங்க தெரிஞ்சுக்கலாம்.

இஸ்ரேல் பிரதம மந்திரியின் வணக்கம்
இஸ்ரேல் பிரதம மந்திரி கூட தற்போது எல்லாம் கைகுலுக்கலுக்கு பதிலாக வணக்கத்தைத் தான் பயன்படுத்தி வருகிறாராம். இந்திய பாரம்பரிய வணக்கத்தை எல்லாரும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் பறைசாற்றியுள்ளார். இப்படி ஏராளமான தலைவர்கள் கூட கைகுலுக்கலை தவிர்த்து வருகிறார்கள். ஏனென்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து தொற்று நோய்க் கிருமிகள் கைகளின் வழியாக பரவும் வாய்ப்பு வணக்கத்தில் குறைவு. எனவே கைகுலுக்கலை தவிர்த்து மக்கள் வணக்கம், சலாம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி வரவேற்கலாம் என்கிறார் அவர்.

அப்படி வணக்கத்தில் என்ன பாதுகாப்பு தான் இருக்கிறது?
கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து தொற்று நோயாக பரவுவதால் இதன் பரவும் வேகம் அதிகமாகி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போது, இருமலின் போது வெளியேறும் சளியில் வைரஸ் இருப்பதால் அது அப்படியே அவரைத் தொடும் நபருக்கும் பரவி விடுகிறது. எனவே தும்மும் போது, இருமலின் போது கைக்குட்டையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நமஸ்காரம் என்பது ஒரு முத்திரை
பொதுவாக நம் இந்திய பராம்பரியத்தின் படி இரு கைகளையும் சேர்த்து குவித்து நமஸ்காரம் என்று சொல்வது அஞ்சலி முத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த தோரணை பார்ப்பதற்கு எளிமையான ஒன்றாக இருந்தால் கூட மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவக் கூடியது. அதனால் தான் இந்த அஞ்சலி முத்திரையை யோகிகளும், தியானிப்பவர்களும் பயன்படுத்துகின்றனர். இது நமது மனதை ஒருமுகப்படுத்தி, செறிவை அதிகரிக்கிறது. கவனச் சிதறலை குறைக்கிறது. அமைதியை மேம்படுத்துகிறது.

வணக்கம் முறை
இந்த வணக்கத்தை மார்போடு சேர்த்து வைக்கும் போது இதய சுழற்சி இணைக்கப்படுகிறது. இதனால் மனதில் நேர்மறையான ஆற்றல் உருவாக்கப்பட்டு உங்களால் சமநிலைத் தன்மையை கொண்டு வர முடியும். எனவே உங்களுக்கு கோபம் ஏற்பட்டால் ஒரு வணக்கம் போடுங்கள் கோபமானது கட்டுக்குள் அடங்கும், பதட்டமாக இருக்கும் போது கூட நமஸ்தே பதட்டத்தை போக்கி மன அமைதியை தருகிறது. அறிவாற்றலையும் கவனச் செறிவையும் அதிகரிக்கிறது.

கொரோனா பரவல்
நமஸ்காரம் ஒருவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கை குலுக்குவதால் பரவும் கொரோனா போன்ற வைரஸ் நோய்கள் சீக்கிரம் நம்மை அண்டாமல் இருக்கவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications