For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீல்வாதம் தொடர்பான சிகிச்சையைத் தாமதிப்பது நீரிழிவு மற்றும் பிபி-க்கு வழிவகுக்குமா?

|

மனித உடல் என்பது இறைவன் உருவாக்கிய ஒரு கூட்டு இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தில் பல்வேறு அசையும் பகுதிகள் , மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற இயந்திரங்கள் போலவே இந்த மூட்டுகளிலும் காலப்போக்கில் சில பாதிப்புகள் ஏற்படலாம். மேலும் வயது தொடர்பான கீல்வாதம் போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கலாம். மூட்டுகளை உருவாக்கும் எலும்புகள் பெரும்பாலும் உராய்வு இல்லாத மூட்டு குருத்தெலும்புகளால் மூடப்பட்டிருக்கும். பல ஆண்டுகளுக்கு வலியற்ற மற்றும் எண்ணற்ற இயக்கத்தை இவை அனுமதிக்கின்றன.

காலப்போக்கில் இந்த மூட்டுகள் தேய்ந்து, எலும்புகள் வெளிப்படுகின்றன. இதனால் மூட்டுகளில் அழற்சி எதிர்வினைகள் உண்டாகின்றன. வயது தொடர்பான கீல்வாதம் மிக தாமதமாக வளர்ச்சியுறுகிறது. வேகமாகக் பெருகக்கூடிய மற்றொரு வகை கீல்வாதம் உள்ளது. அது அழற்சி வகை கீல்வாதம் ஆகும். அதற்கு உதாரணம் 'ரூமட்டாய்டு ஆர்த்ரிடிஸ்' எனப்படும் முடக்குவாதம். இதனை 'சிவப்பு கொடி கீல்வாதம்' என்றும் கூறுவர். இதற்கான நோய்கண்டறிதல் மற்றும் அதற்கான மருந்துகள் ஆரம்ப கட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட மூட்டுகள் சேதமடைவதுடன் உடலின் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

இப்போது நீரிழிவின் காரணமாக மூட்டு வலி ஏற்படுவதற்கான சில வழிகளை காணலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தசை கூட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகள்:

தசை கூட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகள்:

ஒரு குறிப்பிட்ட காலத்தில் சரியான சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் நீரிழிவு பாதிப்பு தசை கூட்டமைப்பில் பாதிப்பிற்கு வழிவகுக்கிறது. மூட்டு சேதம் மற்றும் மூட்டு அசைவில் பாதிப்பு போன்றவை இவற்றில் இணைகிறது. நீரிழிவின் காரணமாக நரம்புகளில் மற்றும் சிறு இரத்த நாளங்களில் மாற்றம் உண்டாகிறது. இதன் விளைவாக, இந்த நிலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கைகளில் அசாதாரண பாதிப்புகள் பரவலாக ஏற்படுகிறது.

சார்கோட் மூட்டு:

சார்கோட் மூட்டு:

சார்கோட் மூட்டு என்பது நரம்பியல் ஆர்தோபதி என்றும் அறியப்படுகிறது, நீரிழிவின் காரணமாக உண்டாகும் நரம்பு சேதங்களின் விளைவாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. நீரிழிவு தொடர்பான நரம்பு சேதங்களுக்கு மருத்துவ மொழியில் ‘டையபட்டிக் நியூரோபதி' என்று பெயர். இதனால் அதிகபட்ச மரத்துப்போன உணர்வு உண்டாகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதியில் மிகக் குறைந்த உணர்வு அல்லது உணர்வற்ற நிலை ஏற்படலாம். இதனால் ஒரு பகுதி எளிதில் பிறழ அல்லது உடைய வாய்ப்புள்ளது. குறைவான இரத்த ஓட்டம் மற்றும் எந்திரமுறை காரணிகள் காரணமாக மூட்டு சேதம் மற்றும் உடல் குறைபாடுகள் உண்டாகிறது.

கீல்வாதம் பாதிக்கப்பட்ட நபர் சரியாக நடக்க முடியாத காரணத்தால் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, உயர் இரத்த அழுத்த பாதிப்பு உண்டாகும் நிலை ஏற்படுகிறது. மேலும் நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் இதர நோய்களை மறைமுகமாக மோசமாக்கும் எடை இழப்பு போன்றவற்றிற்கும் வழிவகுக்கிறது.

எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில குறிப்புகள்:

எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில குறிப்புகள்:

இந்த நிலையின் தொடக்க கட்டத்தில், சில எளிய பயிற்சிகள் மற்றும் சாதாரண வலி நிவாரணி மாத்திரைகள் போன்றவற்றின் மூலம் குருத்தெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அழற்சி வகையான கீல்வாதத்திற்கு குறிப்பிட்ட நோய் திருத்தும் மருந்துகளை சரியான மேற்பார்வையின் கீழ் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. இவை எல்லாவற்றையும் மீறி, காலப்போக்கில் கீல்வாதம் வளர்ச்சி பெற்று, பல்வேறு தீவிர மாற்றங்களை கீல்வாதத்தின் இறுதி நிலையில் ஏற்படுத்துகிறது.

* உங்கள் உடல் எடை மீது கவனம் செலுத்த வேண்டும்

* மூட்டு பகுதியை சுற்றியுள்ள தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஸ்ட்ரெட்சிங் பயிற்சி மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கான பயிற்சிகளை செய்யலாம்.

மூட்டு மாற்று சிகிச்சை

மூட்டு மாற்று சிகிச்சை

கீல்வாதத்தின் இறுதி நிலையில், முக்கிய மூட்டுகளில் பெரும்பாலானவைகள் மற்றும் விரல்களைப் போன்ற சிறிய மூட்டுகள் போன்றவற்றை மாற்றம் செய்து கொள்ளும் வசதி தற்போது உள்ளது. உலோகவியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் மூட்டுகளின் உயிரிய விசையியல் தொடர்பான புரிதல், நவீன மூட்டு மாற்று சிகிச்சை போன்றவை மிகவும் ஆடம்பரமாகவும் இயற்கை மூட்டுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் அமைத்துள்ளன. மூட்டு மாற்று சிகிச்சைக்கு கணினி உதவி மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் இந்த சிகிச்சையின் தரம் மற்றும் ஆயுள் அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can Delay In Treatment Of Arthritis Lead To Diabetes And Hypertension?

Can delay in treatment of arthritis lead to diabetes and hypertension? Read on to know more...