Just In
- 5 hrs ago
உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...!
- 8 hrs ago
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- 8 hrs ago
உங்கள நாள் முழுக்க நீரேற்றமா வைத்திருக்க இந்த மாதிரி தண்ணீர் குடிங்க போதும்...!
- 8 hrs ago
இலங்கை ஸ்பெஷல் கத்திரிக்காய் கிரேவி
Don't Miss
- News
அஸ்ஸாமில் நூலிழை பலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே!
- Movies
ஸ்கூல் யூனிபார்மில்.. நடுக்காட்டில் நாயுடன் பிரபல நடிகை !
- Finance
டாடா மோட்டார்ஸின் அதிரடி.. பயணிகள் வாகன வணிகத்தினை தனி நிறுவனமாக மாற்ற திட்டம்..!
- Automobiles
2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன? கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க
- Sports
ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தவரை மீண்டும் கொரோனா பாதிக்குமா? உண்மை என்ன?
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பாதித்து வருகிறது கொரோனா வைரஸ். பல உயிர்களை காவு வாங்கி வரும் கொரோனா கிருமியை எதிர்த்து உலகம் முழுவதும் போராடி வருகிறது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா 3,81,761 பேர்களை உலகம் முழுவதும் பாதித்துள்ளது. இதில் 16,000-க்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது வரை 400-க்கும் அதிகமானோர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.
இதற்கிடையில் 37 நோயாளிகள் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது வரை மருத்துவர்கள், நோய் தாக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா தாக்காது என்று உறுதியாக கூறுவதில்லை.

மீண்டும் வரக்கூடும்
முன்னதாக, உலக சுகாதார நிறுவனம், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பரவக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர். தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் அடுத்த 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் என்று கூறப்படுகிறது.
தற்போது உள்ள நிலவரப்படி, கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சைக்கு பின் குணமடைந்த நோயாளிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரிசோதனையில் இரண்டு முறை எதிர்மறை விளைவுகள் காணப்பட்டால் அவர்களை வீடு திரும்ப அனுமதிக்கின்றனர்.
MOST READ: கொரோனா வைரஸ் உடலின் எந்த உறுப்புக்களை பாதித்து உயிரைப் பறிக்கிறது தெரியுமா?

முதல் அமெரிக்க சோதனை
அபாயகரமான கொரோனா வைரசுக்கு தற்போது வரை தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இஸ்ரேல், அமெரிக்க போன்ற நாடுகளில் மற்றும் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர். மார்ச் 17ம் தேதி, வாஷிங்டன்னில் மனித உடலில் தடுப்பூசிக்கான முதல் கட்ட சோதனை அரங்கேற்றப்பட்டது. இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸை எதிர்த்து மனிதர்களை பாதுகாக்குமா என்ற முதல் கட்ட மருத்துவ ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுமா?
கொரோனா பாதிக்கப்பட்ட 7 நோயாளிகள் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் குணமடைந்த பின்னர் மீண்டும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா இல்லையா என்பது பற்றி தங்களால் உறுதியாக கூற முடியாது என்று மூத்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது, அடுத்த 2 வாரங்களுக்கு அவர்கள் தனியாகவே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் இந்த நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் தாங்கள் பருகும் பானங்கள் மீது சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தங்கள் மனநலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என கூறப்படுபவைகள்!

கொரோனாவிற்கு தடுப்பூசி இல்லை
இந்த கொடுமையான பாதிப்பிற்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இதற்கான கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா கிருமிக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அமெரிக்க களம் இறங்கியுள்ளது. மிகக் குறைந்த காலகட்டத்தில் ஒரு தடுப்பூசி மருத்துவ சோதனையை எட்டியுள்ளது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

சமூக இடைவெளியை பராமரிப்பதன் மூலம் இதனைத் தடுக்கலாம்
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது ஒவ்வொரு தனி நபரின் பொறுப்பாகும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய தொற்று பாதிப்புகள் பரவாமல் தடுக்க வேகமாக செயல்படுவது அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நோய் பரவும் ஆபத்து அதகிரிக்கும். மேலும் கொரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி மிகவும் அவசியமான ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே பள்ளிகள், அலுவலகங்கள், திரையரங்குகள், பொது நிகழ்வுகள் போன்றவை இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. 60 வயதிற்கு மேல் இருக்கும் முதியவர்கள் மற்றும் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆகியோருக்கு COVID-19 தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. இவர்கள் தங்கள் பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லது மற்றும் கூட்டமான இடங்கள் மற்றும் பொது வாகனங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
MOST READ: கொரோனா வைரஸ் பற்றி அதிவேகமாக பரவி வரும் சில தவறான தகவல்கள்!

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்
* கொரோனா தொற்றைத் தவிர்க்க , அடிக்கடி கைகளை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
* சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
* தும்மல் அல்லது இருமல் ஏற்பட்டால், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு மூக்கை மூடிக் கொண்டு தும்மவும் அல்லது இருமவும். அதன்பின்னர் உடனடியாக கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரை அப்புறப்படுத்தவும்.
* கொரோனா பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கும் நபர் அல்லது இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.
* ஒருவேளை கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அவசியம் நீங்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
* வீடு , அலுவலகம், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை சுத்தமாக பராமரிக்கவும். மருத்துவமனை செல்ல நேர்ந்தால் தேவையில்லாமல் எந்த இடத்தையும் தொட வேண்டாம்.