Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
உங்க வயிறு எப்பவும் வீங்கி இருக்கா? அப்ப உங்க உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு...
எப்போது ஒருவரது உடலில் தீவிரமான பிரச்சனை உள்ளதோ, அப்போது அந்த வயிறு வீக்கம் குறையாது அப்படியே இருக்கும். உங்களுக்கு அந்த மாதிரி திடீரென்று வயிறு வீக்கம் ஏற்பட்டால், உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்.
பொதுவாக நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிறு வீங்கி பெருத்து காணப்படும். இல்லாவிட்டால், செரிமான மண்டலத்தால் எளிதில் செரிமானமாகாத உணவுகளை உண்ணும் போது வயிறு உப்புசத்தை உணரக்கூடும். அதில் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அடங்கும். ஏனெனில் இந்த வகையான காய்கறிகளில் உள்ள பண்புகள், செரிமான மண்டலத்தில் உள்ள நொதிகளால் எளிதில் உடைக்க முடியாதவாறு உள்ளன.

சில சமயங்களில் மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான மருந்துகளை உட்கொண்டாலும், வயிறு வீங்கும். பெரும்பாலும் இம்மாதிரியான வயிறு வீக்கம் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் எப்போது ஒருவரது உடலில் தீவிரமான பிரச்சனை உள்ளதோ, அப்போது அந்த வயிறு வீக்கம் குறையாது அப்படியே இருக்கும். உங்களுக்கு அந்த மாதிரி திடீரென்று வயிறு வீக்கம் ஏற்பட்டால், உடனே உஷாராகிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உடலில் உள்ள தீவிர பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இப்போது எந்த பிரச்சனைக்கெல்லாம் வயிறு வீக்கம் ஏற்படும் என்பதைக் காண்போம்.

1. எரிச்சல் கொண்ட குடல்நோய்க்குறி
செரிமான பிரச்சனைகளுள் ஒன்றான எரிச்சல் கொண்ட குடல்நோய்க்குறி, செரிமான மண்டலத்தை பாதிக்கும் ஒரு பொதுவான நிலையாகும். இந்த பிரச்சனை இருந்தால், அது வயிற்று பிடிப்பு, வயிற்று உப்புசம்/வயிறு வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தென்படும். இது வாழ்நாள் முழுவதும் இருக்கும் ஒரு பிரச்சனை மற்றும் இதை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் சரியான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தால் தடுக்க முடியும்.

2. செலியாக் நோய்
செலியாக் நோய் என்பது மற்றொரு பொதுவான செரிமான பிரச்சனையாகும். இந்நிலையில் சிறுகுடல் வீக்கமடைவதோடு, ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் போகும். இந்த நோய் இருந்தால், வயிற்றுப்போக்கு, அடிவயிற்று வலி மற்றும் வயிற்று உப்புசம்/வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். செலியாக் நோயானது கோதுமை, பார்லி மற்றும் கம்பு ஆகியவற்றில் காணப்படும் க்ளுட்டனால் ஏற்படுகிறது. இந்த செலியாக் நோடய்க்கும் எந்த ஒரு சிகிச்சையும் இல்லை. ஆனால் க்ளூட்டன் இல்லாத உணவுகளை உண்பதன் மூலம், இதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்.

3. குடல் புற்றுநோய்
இங்கிலாந்தில் காணப்படும் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று தான் குடல் புற்றுநோய். அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி, வயிற்று உப்புசம், வயிற்று அசௌகரியம் ஆகியவை இந்த புற்றுநோயின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் குடல் புற்றுநோயில் பிற முக்கிய அறிகுறிகள் என்றால், அது மலத்தில் தொடர்ந்து இரத்தம் இருப்பது மற்றும் அடிக்கடி மலம் கழிப்பது போன்றவையாகும்.

4. வயிற்று புற்றுநோய்
இங்கிலாந்தில் குடல் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக வயிற்று புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறி என்றால், அது உணவு உண்டதும் வயிறு வீங்குவது, தொடர்ச்சியான அஜீரண கோளாறு மற்றும் நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை மற்றும் அடிக்கடி ஏப்பம் விடுவது மற்றும் தொடர்ச்சியான வயிற்று வலி ஆகியவை ஆகும். இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

5. கிரோன் நோய்
கிரோன் நோய் என்பது ஒரு வகையான குடல் அழற்சி நோய். இது செரிமான மண்டலத்தில் உள்ள திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் கடுமையான வயிறு வீக்கம், குமட்டல், சோர்வு, எடை இழப்பு மற்றும் குடலியக்க பிரச்சனைகள் போன்றவை.

6. கணைய புற்றுநோய்
கடுமையான வயிறு வீக்கம், முதுகு மற்றும் அடிவயிற்று வலி, பசியின்மை, மஞ்சள் காமாலை மற்றும் எடை இழப்பு போன்றவை கணையப் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நம்மில் பலர் இந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதுண்டு.



Click it and Unblock the Notifications