Latest Updates
-
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா?
ஆண்கள் தினமும் அத்திப்பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு ஒரு எளிய தீர்வை சுவையான அத்திப்பழம் வழங்கும் என்பது தெரியுமா? இப்போது ஆண்கள் அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
இன்று நிறைய திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றெடுப்பதில் சிரமத்தை சந்திக்கிறார்கள். குழந்தை பெற்றெடுக்க வேண்டுமானால், ஆண் மற்றும் பெண்ணின் கருவளம் மற்றும் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பிற காரணங்களால் ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமின்றி உள்ளது. குறிப்பாக விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவாக உள்ளது. இது தவிர சில ஆண்களுக்கு ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக உள்ளது.

இப்படி ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு ஒரு எளிய தீர்வை சுவையான அத்திப்பழம் வழங்கும் என்பது தெரியுமா? இப்போது ஆண்கள் அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம். உங்கள் பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க அத்திப்பழத்தை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.

ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் மேம்படும்
அத்திப்பழத்தில் ஜிங்க் வளமான அளவில் உள்ளது. ஜிங்க் தான் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை சரியான அளவில் பராமரிக்கிறது. இந்த ஜிங்க் குறைபாடு ஏற்படும் போது, ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து, பாலியல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்த ஆண்கள் அத்திப்பழத்தை சாப்பிடுவது நல்லது.

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. அத்துடன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் உள்ளதால், இவை விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் நீந்தும் திறனை மேம்படுத்துகிறது. எனவே விந்தணு பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் தினமும் அத்திப்பழத்தை சாப்பிட, அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

நல்ல தூக்கம் கிடைக்கும்
நல்ல தூக்கத்தைப் பெறாவிட்டால், அதுவே ஒருவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே தூக்க பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் தினமும் அத்திப்பழம் சாப்பிட, அதில் உள்ள மக்னீசியம் இரவு நேரத்தில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவி புரிகிறது.

புரோஸ்டேஸ்ட் ஆரோக்கியம் மேம்படும்
அத்திப்பழத்தால் ஆண்கள் சந்திக்கும் ஒரு முக்கியமான நன்மை என்றால், அது அத்திப்பழம் புரோஸ்ட்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தான். அதுவும் புரோஸ்டேட் வீக்க பிரச்சனையைக் கொண்ட ஆண்கள் அத்திப்பழத்தை தினமும் சாப்பிட, புரோஸ்டேட் வீக்கம் குறைவதைக் காணலாம்.

எலும்புகளுக்கு நல்லது
அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகளவில் உள்ளதால், தினமும் அத்திப்பழத்தை சாப்பிடும் போது, அது எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தி பாலியல் செயல்திறனிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

எடை இழப்பு மற்றும் செரிமான ஆரோக்கியம்
அதிகப்படியான கொழுப்புக்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்கின்றன. டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் பாலியல் உறுப்புக்களின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாகும். இந்த ஹார்மோன் பாதிக்கப்படும் போது, அது பாலியல் செயல்பாட்டை பாதிக்கிறது. அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது மலச்சிக்கலைத் தடுக்கும் மற்றும் மெட்டபாலிச பிரச்சனைகளை போக்கி எடை இழப்பிற்கு உதவி புரிந்து, பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம் மேம்படும்
அத்திப்பழமானது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஆண்களின் ஸ்டாமினாவை அதிகரிக்கிறது மற்றும் இது அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீரான அளவில் பராமரிக்கிறது.



Click it and Unblock the Notifications











