Latest Updates
-
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம்
தினமும் 2 வேக வைத்த முட்டையை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?
ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புதமான உணவுப் பொருள் தான் முட்டை. தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தற்போது பனி அதிகம் பொழிகிறது. அதிக பனியால் பலர் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். பனிகாலத்தில் உடலின் வெப்பநிலை குறையத் தொடங்கும் போது, இரத்த ஓட்டம் குறையும் மூட்டு வலிகள் ஆரம்பிக்கும், முடி உதிர்தல் மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகளும் வரத் தொடங்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் உண்ணும் உணவுகளில் சற்று அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.

அந்த வகையில் ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புதமான உணவுப் பொருள் தான் முட்டை. தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக குளிர் அல்லது பனி காலத்தில் முட்டையை உட்கொண்டால், அது உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர பல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும். இப்போது குளிர்காலத்தில் 2 வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

நோயெதிப்பு சக்தி வலுவாகும்
குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும். எனவே இக்காலத்தில் பலர் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆனால் முட்டையை குளிர்காலத்தில் உட்கொள்ளும் போது, அதில் உள்ள புரோட்டீன் உடலை வலுவாக்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது தவிர, முட்டையில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 போன்றவை உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, காய்ச்சலைத் தடுக்க உதவுகிறது.

எலும்புகளுக்கு நல்லது
முட்டை எலும்புகளுக்கு பல வழிகளில் நன்மையளிக்கிறது. முக்கியமாக முட்டையில் வைட்டமின் டி மற்றும் ஜிங்க் உள்ளது. மேலும் இதில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் போன்றவையும் உள்ளதால், இவை எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் மூட்டு வலி, ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்க முட்டை உதவுகிறது.

வைட்டமின் டி குறைபாட்டை போக்கும்
குளிர்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் முட்டையை சாப்பிடுவதன் மூலம் இதைத் தடுக்கலாம். அதுவும் ஒரு நாளில் 2 வேக வைத்த முட்டையை உட்கொள்ளும் போது, ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய வைட்டமின் டி கிடைக்கும். எனவே இந்த குறைபாட்டை தடுக்க உடனே முட்டையை சாப்பிட தொடங்குங்கள்.

வைட்டமின் பி12 குறைபாடு
ஒரு வேக வைத்த முட்டையில் 0.6 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது. இது தினசரி தேவையில் 25% ஆகும். பலர் முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் இருப்பதல், அதை சாப்பிட தவிர்ப்பார்கள். ஆனால் வைட்டமின் பி12 குறைபாடு வரக்கூடாது என்று நினைத்தால், முழு முட்டையை சாப்பிட வேண்டும். ஏனெனில் முட்டையின் மஞ்சள் கருவில் தான் வைட்டமின் பி12 உள்ளது. எனவே வைட்டமின் பி12 குறைபாட்டை தடுக்க 2 வேக வைத்த முட்டையை சாப்பிடுங்கள்.

தலைமுடி உதிர்வு தடுக்கப்படும்
குளிர்காலத்தில் முடி அதிகம் கொட்டும். முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இதை உட்கொள்ளும் போது தலைமுடி உதிர்வது தடுக்கப்படும். உங்களுக்கு முடி அதிகம் கொட்டுகிறதா? அப்படியானால் முட்டையை தினசரி உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள். இதனால் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான பயோடின் என்னும் பி வைட்டமின் கிடைத்து, தலைமுடி மட்டுமின்றி, சருமம் மற்றும் நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
