Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க..
உங்க சருமத்துல இப்படி இருக்கா? அப்ப அது இந்த புற்றுநோயின் அறிகுறி.. உஷாரா இருங்க..!
பேசல் செல் கார்சினோமா என்பது தோலில் ஏற்படும் ஒருவகையான தோல் புற்றுநோய் ஆகும். பொதுவாக இந்த தோல் புற்றுநோய் நமது உடலில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
பேசல் செல் கார்சினோமா என்பது தோலில் ஏற்படும் ஒருவகையான தோல் புற்றுநோய் ஆகும். பொதுவாக இந்த தோல் புற்றுநோய் நமது உடலில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தொடக்க நிலையிலேயே இதைக் கண்டுபிடித்துவிட்டால், எளிதில் குணப்படுத்திவிடலாம். இந்த தோல் புற்றுநோய் மிக எளிதில் பரவாது. ஒருவேளை பரவினால் அதன் வேகம் அதிகமாக இருக்கும். அதோடு ஆபத்தையும் ஏற்படுத்தும்.

தோலில் பல அடுக்குகள் உள்ளன. மேலடுக்கு, நடு அடுக்கு மற்றும் கீழ் அடுக்கு என்று மூன்று அடுக்குகள் உள்ளன. மேலடுக்கில் மூன்று வகையான செல்கள் உள்ளன. தோலின் மேலடுக்கில் உள்ள செல்களில் ஏதாவது காயம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இந்த பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் ஏற்படுகிறது. இது தோலில் உள்ள பழைய செல்களை அழித்து புதிய செல்களை உற்பத்தி செய்கிறது.
இந்தக் கட்டுரையில் பேசல் செல் கார்சினோமா புற்றுநோயின் அறிகுறிகள், அந்த நோயின் விளைவுகள் மற்றும் அவற்றைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளைப் பார்க்கலாம்.

பேசல் செல் கார்சினோமா தோல் புற்றுநோயின் விளைவுகள்
தோலின் மேலடுக்கில் பாதிப்பு ஏற்படுவதால் பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் ஏற்படுகிறது. தோலின் மேலடுக்கில் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் சூரியனின் புறஊதாக் கதிர்கள் ஆகும். புறஊதாக் கதிர்கள் நீண்ட நேரம் தோலில் படும்போது தோலின் மேலடுக்கு பாதிப்பு அடைகிறது. மேலும் தோல் பதனிடுவதில் ஈடுபட்டாலும் தோலின் மேலடுக்கு பாதிப்பு அடைகிறது.
புறஊதாக் கதிர்கள் தோலைத் தாக்கி, தோலில் இருக்கும் செல்களின் மரபணுக்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த பாதிப்பு நாளடைவில் பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் வரக் காரணமாக அமைகிறது. இந்தப் புற்றுநோய் ஏற்பட்டால், அதைக் குணப்படுத்த தேவையான சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பேசல் செல் கார்சினோமா புற்றுநோயின் அறிகுறிகள், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இருக்கும்.

பேசல் செல் கார்சினோமா எந்த பகுதியில் தோன்றும்?
பொதுவாக பேசல் செல் கார்சினோமா புற்றுநோய், கழுத்து அல்லது முகம் ஆகிய பகுதிகளில் காணப்படும். குறிப்பாக சூரியனின் கதிர்கள் படும் தோல் பகுதிகளில் வெள்ளை அல்லது அரக்கு நிறத்தில் மெழுகுக் கட்டியைப் போல் இது காணப்படும். தோலில் ஏற்பட்டிருக்கும் இந்த புற்றுநோயை மிக எளிதாகக் குணப்படுத்த முடியாது.

பேசல் செல் கார்சினோமா அறிகுறிகள்
பின்வரும் அறிகுறிகள் இருந்தால் அவை பேசல் செல் கார்சினோமா புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்பு உண்டு.
* தோலில் படர்ந்து இருக்கும் செதில்கள்,
* தோல் புண்கள்
* தோலில் ஏற்படும் வெள்ளைத் தழும்புகள் அல்லது மஞ்சள் நிறத்திலான வடுக்கள்
* தோல் அரிப்பு
* தோலில் ஏற்படும் இரத்தப் போக்கு
* வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் உருவாகும் தோல் வீக்கம்
* தோலில் ஏற்படும் காயங்கள்
* தோல் திசுக்களில் ஏற்படும் வீக்கம் போன்றவை தோல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

பேசல் செல் கார்சினோமாவிற்கான சிகிச்சைகள்
தோலில் பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் ஏற்பட்டால், அதற்கு உடனடியான மருத்துவ சிகிச்சை என்னவென்றால் அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகும். ஏனெனில் பேசல் செல் கார்சினோமா தோல் முழுவதும் ஏற்கனவே பரவியிருக்கும். அதோடு தோலின் கீழடுக்கு வரை வேர்விட்டிருக்கும். ஒருசில நேரம் எலும்பு வரைகூட ஊடுருவி இருக்கும். எனவே அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பேசல் செல் கார்சினோமா புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.
சிலருக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த புற்றுநோய் மிகவும் மெதுவாக வளர்வதால் இதைக் குணப்படுத்துவதற்கான தகுந்த சிறந்த மருத்து சிகிச்சைகள் இன்னும் வளரவில்லை.

முடிவு
மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் தோல் புற்றுநோய் நிபுணர்களை சந்தித்து முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று, மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு சூரியனின் புறஊதா கதிர்கள் தோலைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது பேசல் செல் கார்சினோமா தோல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications











