Just In
- 6 hrs ago
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- 7 hrs ago
உங்க குழந்தையோட ராசிப்படி... நீங்க அவர்கள இப்படி வளர்த்தாதான் பெரிய ஆள வருவாங்களாம் தெரியுமா?
- 7 hrs ago
உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு மரணம் ஏற்பட இந்த 5 நோய்கள்தான் காரணமாக உள்ளதாம்... ஜாக்கிரதை!
- 8 hrs ago
இந்த உணவுகளை சாப்பிட்டா முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வந்துடுமாம்..
Don't Miss
- News
40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை குறிவைத்தார் என நினைக்கவில்லை! சரத்பவார் அதிர்ச்சி
- Movies
நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?.. சுடசுட வெளியான தகவல்!
- Sports
Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு
- Finance
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!
- Automobiles
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
- Technology
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கால் பெருவிரல் இப்படி வீங்கி இருந்தா உடம்புல இது அதிகமா இருக்கு-ன்னு அர்த்தம்... அத குறைக்க இத செய்யுங்க...
உடலில் அதிகளவு யூரிக் அமிலம் இருந்தால், அது மூட்டுக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். கீல்வாதம் போன்ற நிலைமைகள் யூரிக் அமிலங்கள் அதிகளவு மூட்டுக்களில் சேரும் போது ஏற்படுகின்றன. யூரிக் அமிலம் என்பது மீன், ஒயின் மற்றும் கடல் உணவு போன்ற பியூரின்களுடன் உணவை ஜீரணிப்பதன் மூலம் உடலில் தயாரிக்கப்படும் ஒரு இயற்கை கழிவுப் பொருளாகும். நமது சிறுநீரகங்கள் பொதுவாக யூரிக் அமிலத்தை வடிகட்டும்போது, அதிகப்படியான யூரிக் அளவு நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைத் தடுக்க யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். இந்த யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த வல்லுநர்கள் உடற்பயிற்சி செய்யவும், நல்ல உணவு மற்றும் போதுமான அளவு நீரைக் குடிக்கவும் பரிந்துரைப்பார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் இதற்கு ஒருசில தீர்வுகள் உள்ளன. இவை யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும். இப்போது உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் மூட்டு வலியைக் குறைக்கும் சில ஆயுர்வேத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மூக்கிரட்டை கசாயம்
மூக்கிரட்டை என்னும் மூலிகையில் உள்ள மருத்துவ குணங்கள் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. பொதுவாக யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் போது, மூட்டுக்களில் திரவங்கள் மற்றும் நச்சுக்கள் குவிவதால் தான் மூட்டு வீக்கம் ஏற்படுகிறது. ஆனால் மூக்கிரட்டையின் மருத்துவ குணங்களால், சிறுநீர் கழிப்பதன் மூலம் மூட்டுக்களில் உள்ள நச்சுக்கள் நீக்கப்பட்டு, மூட்டு வீக்கம் மற்றும் வலி குறைகிறது. தினமும் மூக்கிரட்டை கசாயத்தை அருந்தி வந்தால், அது ஒட்டுமொத்த உடலில் உள்ள வீக்கமும் குறையும்.

குக்குலு பிசின்
குக்குலு பிசினைக் கொண்டு பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆயுர்வேதத்தில், இது ஒரு வலி நிவாரணியாக கருதப்படுகிறது. ஏனெனில் இது மூட்டு வலி மற்றும் மூட்டுக்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சீந்தில் கொடி பொடி
சீந்தில் கொடி யூரிக் அமில பிரச்சனைக்கான முக்கிய மருந்தாகும். இது பித்த அளவைக் குறைக்கிறது. பித்த மற்றும் வாத தோஷத்தை சமப்படுத்த உதவுகிறது மற்றும் இரத்தத்தில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கிறது. மேலும் இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. சீந்தில் கொடியில் இருந்து தான் அமிர்தாதி குக்குலு தயாரிக்கப்படுகிறது. இது யூரிக் அமில அளவுகளுக்கு சிறந்தது.

கோரைக்கிழங்கு
யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும் மற்றொரு மூலிகை தான் கோரைக்கிழங்கு. இந்த கோரைக்கிழங்கு பொடியை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்தால், உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலம் குறையும்.

கருப்பு உலர் திராட்சை
உலர் திராட்சை சாப்பிடுவது எலும்பு அடர்த்திக்கு நல்ல மற்றும் கீல்வாதம் மற்றும் ஆர்த்ரிடிஸ் அபாயத்தைக் குறைக்கிறது. அதற்கு 10-15 கருப்பு உலர் திராட்சையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, அந்த நீரை மறுநாள் காலையில் குடித்து, உலர் திராட்சையை மென்று சாப்பிட வேண்டும்.

மாவிலங்க சூரணம் (Varun Churna)
ஆயுர்வேதத்தில், அதிகமான யூரிக் அமிலம் காரணமாக ஏற்படும் மூட்டு வலிக்கு மாவிலங்க சூரண பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

சுக்கு பவுடர் மற்றும் மஞ்சள் தூள்
சுக்கு பவுடர் மற்றும் மஞ்சள் தூள் இரண்டையும் ஒன்றாக எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வீக்கமுள்ள மற்றும் வலிமிகுந்த மூட்டுக்களில் தடவ வேண்டும். இப்படி தினமும் தடவி வந்தால், மூட்டு வலி விரைவில் காணாமல் போய்விடும். வேண்டுமானால், இந்த கலவையை சாப்பிடவும் செய்யலாம்.