Just In
- 39 min ago
வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களுக்கு இந்த மோசமான நோய் வராதாம்...!
- 4 hrs ago
இன்றைய ராசிப்பலன் (21.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- 15 hrs ago
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- 15 hrs ago
போராடிக்கிற உங்கள் பாலியல் வாழக்கையை சுவாரஸ்யமாக மாற்ற இத சரியா பண்ணுனா போதும்...!
Don't Miss
- News
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சித்ராவை "குதறிய" ஹேமந்த்.. ரோகித் சொல்வது உண்மையா.. பகீர் கிளப்பும் அதிகாரி
- Automobiles
2020ம் ஆண்டில் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்... காரணம் தெரியுமா?
- Movies
பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே?
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கவலைக் கோளாறுகளைப் போக்கும் சில எளிய ஆயுர்வேத வழிகள்!
கவலை என்பது எல்லா மனிதர்களிடமும் உள்ள இயல்பான ஒன்று. அது அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து அமையும். கவலை சாதாரணமாக இருக்கும் போது அது மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதில்லை. ஆனால் கவலைக் கோளாறு ஏற்படும் போதுதான் மனதில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எவருமே கவலைக்குள் சிக்கி சின்னாபின்னமாவதை விரும்புவதில்லை. ஆனால் தற்போதுள்ள வாழ்க்கைச் சுழல் மனிதர்களை எளிதில் கவலைக்குள் தள்ளி, அந்த கவலையை அதிகரித்து அவர்களின் மன ஆரோக்கியத்தை கெடுத்துவிடுகிறது.
அளவுக்கு அதிகமாக ஒரு காரியத்தைப் பற்றி சிந்திக்கும் போது ஒருவர் மனச்சோர்வுக்கு எளிதில் பலிகடாவாகிறார். ஒருவரின் உடலில் உள்ள வாத தோஷம் (வாத தோசா) மோசமாகும் போது அவருக்கு எளிதில் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. மேலும் அளவுக்கு அதிகமான வேலைப்பளு, ஆரோக்கியமில்லாத உணவு மற்றும் ஆரோக்கியமில்லாத சுற்றுப்புறச்சூழல் போன்றவையே மனச்சோர்வு ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

ஆயுர்வேத சிகிச்சை
கவலைக் கோளாறுகளை குணப்படுத்த மேற்கொள்ளப்படும் ஆயுர்வேத சிகிச்சை மனதில் உள்ள சத்துவ குணத்தை வலுப்படுத்துவோடு, அளவுக்கு அதிகமான பிராண வாதத்தையும் குறைக்கிறது. அதனால் அது நமக்குள் சுயகட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. சுயகட்டுப்பாடு நமது மனதை ஒருநிலைப்படுத்தி, நம்மை சுயஆய்வு செய்ய வைக்கிறது. அதன் மூலம் நமது வாழ்க்கை முறையிலும், உணவுப் பழக்கவழக்கத்திலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
கவலைக் கோளாறு நமக்குள் சோம்பலை ஏற்படுத்தி நமது இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. அதோடு தூக்கமின்மையையும் ஏற்படுத்துகிறது. எனவே பின்வரும் ஆயுர்வேத சிகிச்சை எவ்வாறு நமது வாத தோஷத்தை சமப்படுத்தி நமது கவலைக் கோளாறுகளை குணப்படுத்துகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கவலை மற்றும் மனச்சோர்வைப் போக்கும் நறுமண எண்ணெய் வகைகள்
ஒருசில நேரங்களில் இனிமையான நறுமணம் நமது மூளையைத் தூண்டி நமக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். துளசி, ஆரஞ்சு, கிராம்பு மற்றும் சுகந்திப்பூ போன்றவற்றிலிருந்து வரும் நறுமணங்கள நமது வாத தோஷத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் இவற்றில் இருந்து கிடைக்கும் எண்ணெய்களை வெந்நீரில் கலந்து குளித்து வந்தால் அது மனதுக்கு புத்துணர்ச்சியைத் தரும். அதோடு நமது அறைகளில் நறுமணங்களைத் தெளித்தால், நமது மனச்சோர்வு குறையும்.

கவலையை விரட்டும் வெந்நீர் குளியல்
அளவுக்கு அதிகமான அழுத்தமும், கவலையும் நமது மூளையைத் தாக்கி ஒரு அமைதியற்ற நிலையை உருவாக்குகிறது. இந்த அமைதியற்ற நிலையில் இதமான வெந்நீரில் குளித்தால் அது கண்டிப்பாக மனதில் அமைதியை ஏற்படுத்தும். ஒரு குவளையில் மூன்றில் ஒரு பங்கு சமையல் சோடா மற்றும் இஞ்சி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை வெந்நீரில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் அந்த வெந்நீரில் குளிக்க வேண்டும். அவ்வாறு குளித்து வந்தால் அது கவலைக் கோளாறுகளைக் குறைத்து மனதிற்கு ஆரோக்கியத்தை வழங்கும்.

மனச்சோர்வைக் குறைக்கும் மூக்குவழி சுவாசம்
மூக்கு வழியாக சுவாசிக்கும் போது அது மன அழுத்தத்தைக் குறைத்து நமது தோஷங்களை ஒழுங்குபடுத்துகிறது என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. யோகாவில் கற்றுத் தரப்படும் இந்த மூக்குவழி சுவாசம் நமது மூளையை சமப்படுத்தி, நமது மனதிற்கு ஆற்றலை அளிக்கிறது. ஒரு அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் இந்த மூக்குவழி சுவாசப் பயிற்சியை செய்து வரலாம். மூக்குவழி சுவாசப் பயிற்சியில் ஈடுபடும் போது நமது மூளைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. மேலும் மூக்கு வழியாக சுவாசிக்கும் போது வாய் வழியாக சுவாசிக்கக் கூடாது. அதே நேரம் சிறிது இடைவேளை விட்டு இந்த மூக்குவழி சுவாசப் பயிற்சியை செய்ய வேண்டும்.

கவலைக் கோளாறுகளை விரட்டும் பாதாம் பால்
10 அல்லது 12 பாதாம் கொட்டைகளை இரவில் நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் அவற்றின் தோல்களை உரித்து அரைத்து அவற்றை சூடான பாலில் போட வேண்டும். அவற்றோடு இஞ்சி மற்றும் குங்குமப் பூவையும் கலந்து கொள்ள வேண்டும். இந்த சூடான சுவையான பாதாம் பால் நமது கவலைகளைக் குறைத்து நமது மூளையை அமைதிப்படுத்தும். மேலும் இந்த பாதாம் பாலோடு காய்ந்த பழங்களையும் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் அது நமது வாத தோஷத்தைக் குறைக்கும்.

கவலைக் கோளாறுகளைக் குறைக்கும் உணவுகள்
பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவுகள் நமது தோஷங்களை பாதிக்கின்றன என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. அது எந்த உணவாக இருந்தாலும் சரி. அது நமது வாத தோஷத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. ஆகவே உணவு உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். பட்டை, சீரகம், இஞ்சி, ஜாதிக்காய், கல் உப்பு, எள், பெருஞ்சீரகம், பெருங்காயம் மற்றும் நாட்டுச் சர்க்கரை போன்ற உணவு பொருள்கள் நமது வாத தோஷங்களைக் குறைத்து நமது மனதிற்கு அமைதியை கொடுக்கக் கூடியைவை. எனவே நமது உணவில் இந்த பொருள்களை சேர்த்து வந்தால் அது நமது கவலைகளை விரட்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான உணவுக் குறிப்புகள்:
- எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கார உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதோடு சூடான மற்றும் அப்போது சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். ஆறிப் போன உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
- சூப் மற்றும் பாலில் செய்யப்படும் உணவுப் பொருள்களை நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- காப்ஃபைன், போதைப் பொருட்கள், சீனி, சாக்லெட் மற்றும் புகையிலை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உண்ண வேண்டும்.
மேற்சொன்ன ஆயுர்வேத மருத்துவ முறைகளைக் கடைபிடித்து வந்தால் கண்டிப்பாக நமது கவலைக் கோளாறுகள் பறந்து நமது மனம் அமைதியடையும் என்பதில் ஐயமில்லை.