Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
உங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை!
ஆஸ்பெஸ்டாஸிஸ் என்பது நாள்பட்ட இதய நோய் ஆகும். இந்த நோயானது கல்நார் என்னும் பொருளை சுவாசிப்பதால் ஏற்படுகிறது.
ஆஸ்பெஸ்டாஸிஸ் என்பது நாள்பட்ட நுரையீரல் நோய் ஆகும். இந்த நோயானது கல்நார் என்னும் பொருளை சுவாசிப்பதால் ஏற்படுகிறது. அது என்ன கல்நார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆஸ்பெஸ்டாஸ் என்னும் கல்நார், தீப்பிடிக்காத தன்மையுடைய, வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கக்கூடிய, இழை வடிவில் கிடைக்கும் சாம்பல் நிறத் தாதுப் பொருளாகும்.

இந்த பொருள் நாம் பயன்படுத்தும் பல பொருட்களில் உள்ளது. அதில் கூரை ஓடுகள், நீர்த்தடங்கள், தீயணைப்புப் போர்வைகள், கிளச், பிரேக் லைனிங், தானியங்கி காஸ்கெட்டுகள் மற்றும் பேடுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த பொருளால் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட சுவாச நோய்களின் அபாயம் அதிகம் உள்ளது. அதில் முக்கியமான ஓர் நோய் தான் ஆஸ்பெஸ்டாசிஸ் ஆகும்.
இப்போது ஆஸ்பெஸ்டாஸிஸ் நோயின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் காரணிகளைக் காண்போம்.

அறிகுறிகள்:
ஆஸ்பெஸ்டாஸ் பொருளை அதிகம் சுவாசித்ததனால் உண்டாகும் நோயின் தீவிர அறிகுறிகளானது 10-40 வருடங்களுக்கு மேல் தான் நன்கு தெரியும். இப்போது அவற்றின் ஆரம்ப கால அறிகுறிகள் என்னவென்று காண்போம்.
* மூச்சுவிடுவதில் சிரமம்
* தொடர்ச்சியான வறட்டு இருமல்
* பசியின்மையுடன் எடை குறைவு
* கைவிரல் நகங்கள் மற்றும் கால் விரல் நகங்கள், சாதாரண தோற்றத்தை விட சற்று மாறி வட்டமாகவும், அகலமாகவும் மாறுவது
* நெஞ்சு வலி

எப்போது மருத்துவரை காண வேண்டும்?
குடும்பத்தில் ஏற்கனவே யாருக்கேனும் ஆஸ்பெஸ்டாசிஸிஸ் பிரச்சனை இருந்து, மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் தெரிந்தால் மற்றும் உங்களால் பேசவே முடியாத அளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

காரணங்கள்
ஒருவர் அளவுக்கு அதிகமாக கல்நார் தூசியை பல நாட்களாக சுவாசித்தால், அந்த கல்நாரின் இழைகளால், நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் இரத்தத்தில் ஆக்ஸிஜனுக்கு பதிலாக கார்பன்டைஆக்ஸைடை பரிமாறும். மேலும் கல்நார் இழைகள் நுரையீரல் திசுக்களில் எரிச்சல் மற்றும் வடுக்களை உண்டாக்கி, நுரையீரலை இறுக்கமடையச் செய்து, சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க வைக்கும்.
ஆஸ்பெஸ்டாஸிஸ் தீவிரமாகும் போது நுரையீரல் திசுக்கள் மேலும் பாதிக்கப்பட்டு, நுரையீரலால் எளிதில் சுருங்கி, விரிவடையாத நிலை ஏற்படும்.

புகைப்பிடிப்பது
ஆஸ்பெஸ்டாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர் அதிகம் புகைப்பிடிக்கும் போது, கல்நார் இழைகள் நுரையீரலினுள் நுழைந்து அப்படியே தங்கி நீடித்து, ஆஸ்பெஸ்டாஸிஸ் நுரையீரல் நோயை மிகவும் தீவிரமாக்கும்.

யாருக்கெல்லாம் இந்நோய் அதிகம் தாக்கும் அபாயம் உள்ளது?
ஆஸ்பெஸ்டாஸ் வீட்டில் இருப்போருக்கு, ஆஸ்பெஸ்டாஸ் பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு இந்நோயின் தாக்கம் இருக்கும். மேலும் ஆஸ்பெஸ்டாஸ் வெளிப்பாடு இருக்கும் இடத்தில் வேலை செய்வோருக்கும் இந்நோய் தாக்கக்கூடும். அதுமட்டுமின்றி,
* கல்நார் சுரங்கத் தொழிலாளர்கள்
* விமானம் மற்றும் ஆட்டோ மெக்கானிக்ஸ்
* கொதிகலன் ஆபரேட்டர்கள்
* கட்டிடத் தொழிலாளர்கள்
* எலக்ட்ரீசியன்
* இரயில் பாதை தொழிலாளர்கள்
* கப்பல் கட்டும் தொழிலாளர்கள்
* பழைய கட்டிடங்களில் நீராவி குழாய்களைச் சுற்றி கல்நார் காப்பு அகற்றும் தொழிலாளர்கள்
மேலே கொடுக்கப்பட்டவர்களுக்கும் ஆஸ்பெஸ்டாஸிஸ் நோயின் அபாயம் அதிகம் உள்ளது.

சிக்கல்கள்
ஆஸ்பெஸ்டாஸிஸ் நோய் இருப்பவர்கள், இந்நோய்க்கு உடனே சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், நுரையீரல் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும். குறிப்பாக புகைப்பிடித்தால், நுரையீரல் புற்றுநோய் விரைவில் தாக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications
