For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவருக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை எளிய இரத்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம் தெரியுமா?

மனஅழுத்தம் எந்த அளவு இருக்கிறது என்பதை அளவிட முடியுமா? இந்த கேள்வியை முன்னாட்களில் கேட்டிருந்தால் இல்லை முடியாது என்று கூறலாம். ஆனால் மனஅழுத்த அளவை நம்மால் பரிசோதிக்க முடியும்.

|

மனஅழுத்தம் என்பது பொதுவாக பலரும் தங்கள் வாழ்க்கையில் கடந்து வரும் ஒரு நிலை. அதிக துயரம், அதிக கோபம் போன்றவை பல நேரங்களில் மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால் மனஅழுத்தம் எந்த அளவு இருக்கிறது என்பதை அளவிட முடியுமா? இந்த கேள்வியை முன்னாட்களில் கேட்டிருந்தால் இல்லை முடியாது என்று கூறலாம். ஆனால் தற்போது ஆம் என்று பதில் கூற முடியும். ஆம், மனஅழுத்த அளவை நம்மால் பரிசோதிக்க முடியும். நீங்கள் தொடர்ச்சியாக மனஅழுத்தத்தில் இருந்தால் ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் அதன் அளவை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி? வாருங்கள் இந்த பதிவில் அது பற்றி அறிந்து கொள்வோம்.

A Blood Test Will Tell You How Stressed You Are

நம் உடலில் இருக்கும் மனஅழுத்த ஹார்மோன் கார்டிசோல். இந்த ஹார்மோன் அளவை அளவிடுவதன் மூலம் மனஅழுத்த அளவை அறிந்து கொள்ள முடியும். இதன் மதிப்பு உங்கள் மனஅழுத்த அளவை சொல்லிவிடும். உங்கள் மனம் அதிக அழுத்தத்தில் இருக்கும் போது அல்லது உங்கள் உடலில் எதாவது பய உணர்வு தென்படும் போது அட்ரீனல் சுரப்பியால் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் இந்த கார்டிசோல். இந்த சூழலில் உங்கள் மூளை ஏ.சி.டி.எச் அல்லது அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனை வெளியிடுகிறது. இது அட்ரீனல் சுரப்பிகளை அட்ரினலின் மற்றும் கார்டிசோலை உற்பத்தி செய்ய தூண்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Blood Test Will Tell You How Stressed You Are

Can you determine the level of stress in your mind? Yes, a blood test can tell the level of stress you have. Read to know more.
Desktop Bottom Promotion