For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிப்பதை காட்டும் சில முக்கிய அறிகுறிகள்!

நாள் முழுவதும் சாட்டிங் செய்தல், முகநூல் போன்ற விதத்தில் நம் வாழ்க்கையே மாறி விட்டது. இருப்பினும் இந்த சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்துவது நமக்கு தீங்கு விளைவிக்கிறது.

|

தற்போது எல்லாமே டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டு விட்டது. ஒரு பட்டனை அழுத்தினால் போதும் 1000 மைல் தொலைவில் இருப்பவருடன் கூட பேச முடியும். உலகத்தில் என்ன நடந்தாலும் என்ன விஷயங்கள் என்றாலும் கையளவு மொபைலில் அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது தொலைத்தொடர்பு என்பது பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது என்றே கூறலாம். ஒருபக்கம் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு நன்மை தந்தாலும் மற்றொரு புறம் நமக்கு நிறைய தீமைகளை தந்துள்ளது.

5 Signs You Are Spending Too Much Time On Social Media

கையிலேயே மொபைல் இருப்பதால் மக்கள் நிறைய தகவல்களை உட்கார்ந்தே இடத்திலயே தெரிந்து கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது ரொம்ப அதிகமாகி விட்டது. நாள் முழுவதும் சாட்டிங் செய்தல், முகநூல் போன்ற விதத்தில் நம் வாழ்க்கையே மாறி விட்டது. இருப்பினும் இந்த சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்துவது நமக்கு தீங்கு விளைவிக்கிறது.

இதில் நிறைய பேருக்கு சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியவில்லை. அந்த வகையில் நீங்கள் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்பதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்க தொலைபேசியில் முதல் மற்றும் கடைசி விஷயம்

உங்க தொலைபேசியில் முதல் மற்றும் கடைசி விஷயம்

உங்க மொபைலை ஒரு முறை பார்த்துக் கொள்வது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் ஒரு நாள் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றை பார்க்க எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதை கணக்கிடுங்கள். இப்படி சமூக வலைத்தளங்களை அடிக்கடி விஷயங்களை பார்க்கும் போது தூங்கும் போது கூட அந்த விஷயங்களை சிந்திக்க தோன்றும். காலையில் எழும் போது கூட அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற செயல்கள் நீங்கள் சமூக ஊடகங்களில் அடிமையாகி இருப்பதை காட்டுகிறது.

சமூக ஊடகத்தை தள்ளி வையுங்கள்

சமூக ஊடகத்தை தள்ளி வையுங்கள்

பொதுவாக எல்லாரும் பணியில் இருக்கும் போது நேர இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் சமூக ஊடகங்களை பார்ப்பதே வாடிக்கையாக வைத்து இருப்போம். இப்படி ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் கூட சமூக ஊடகங்களில் மூழ்கி கிடப்பது பிரச்சனையை எழுப்புகிறது. இந்த சிறிய இடைவெளியில் இப்படி சமூக ஊடகங்களில் அடிமையாவதற்கு பதிலாக ஒட்டுமொத்த இடைவெளி நேரத்தை ஒன்றாக சேர்த்து எதாவது ஆக்கப்பூர்வமாக செய்யலாம். நடைப்பயிற்சி, சிறிய ரிலாக்ஸ் பயிற்சிகள் போன்ற ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுங்கள்.

தொலைபேசி அறிவிப்பு

தொலைபேசி அறிவிப்பு

உண்மையில் தொலைபேசி அறிவிப்பு மூளையில் ஒரு டோபமைன் விளைவை உண்டாக்குகிறது. இது மகிழ்ச்சியாக இருப்பதற்கான ரசாயனம் ஆகும். மொபைலில் அறிவிப்பு வந்ததும் நம்மை அறியாமல் உள்ளுக்குள் சந்தோஷம் அடைகிறோம். அறிவிப்பை உடனே பார்க்க முற்படுவது கூட சமூக வலைத்தளங்களில் அடிமையாகி இருப்பதை காட்டுகிறது. எனவே அறிவிப்பு வந்ததும் பார்க்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் குறையுங்கள்.

சமூக ஊடகம் தான் முக்கியமான செய்தி மூலம்

சமூக ஊடகம் தான் முக்கியமான செய்தி மூலம்

சமூக ஊடகங்கள் தான் நம் செய்தி தேடல்களுக்கு தீணி போடுகிறது. தீணி போடும் அதே பட்சத்தில் நம் நேரத்தை திருடிக் கொள்கிறது. எனவே ஒரு குறிப்பிட்ட நம்பகமான செய்தி வலைத்தளங்களில் இருந்து உங்க அறிதலை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அதிலேயே நேரத்தை செலவழிக்காதீர்கள்.

சமூக ஊடகத்தை அணுகுவதில் பிரச்சனைகள்

சமூக ஊடகத்தை அணுகுவதில் பிரச்சனைகள்

சமூக ஊடகங்களை அணுக முடியாவிட்டால் அல்லது பார்க்க முடியாவிட்டால் எதாவது மெசேஜ், அறிவிப்பு வந்தால் கூட உங்களுக்கு வயிற்று வலி, இதயத் துடிப்பு போன்றவை அதிகரிக்கும். என்ன மெசேஜ், என்ன செய்தி வந்திருக்கும் என்ற ஆவலால் இந்த உணர்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் கூட நீங்கள் சமூக ஊடகங்களில் அடிமையாகி இருப்பதை காட்டுகிறது. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சமூக ஊடக கணக்கை பார்ப்பது நீங்கள் அதில் அடிமையாக இருப்பதை காட்டுகிறது.

எனவே மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை குறைக்க முற்படுங்கள். அதிலிருந்து விலகி இருங்கள். இது உங்க மன நிலைக்கு சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Signs You Are Spending Too Much Time On Social Media

There are numerous small habits which you may find normal, but in reality, they indicate your social media obsession. Here are 5 signs that you need to cut down your screen time for good.
Desktop Bottom Promotion