For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளைத்தான் மருத்துவர்களே உடம்பு சரியில்லைன்னா சாப்பிடுவாங்கலாம், மாத்திரையை இல்லையாம்...!

பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் நமக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் என்ன சாப்பிடுவார்கள் என்பதுதான்.

|

தற்போதுள்ள காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் நோயில் விழுகின்றனர். இதற்கு காரணம் மாறிவரும் காலநிலைகளும், மாறிவிட்ட உணவுப்பழக்கங்களும்தான். உடல்நிலையில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளுக்கும் மருத்துவரை அணுகுவது இப்பொழுது வழக்கமாகிவிட்டது. இந்தியாவில் தினம் தினம் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால்தான் இந்தியா உலக மருந்து நிறுவனங்களின் சந்தையாக மாற்றப்பட்டுவிட்டது.

Which Foods doctors eat when they have a cold

மருத்துவர்கள் தரும் பெரும்பாலான மருந்துகளில் நமது பிரச்சினைகள் குணமாகினாலும் அதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் நமக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் என்ன சாப்பிடுவார்கள் என்பதுதான். இதற்கான ஆய்வு சமீபத்தில் மருத்துவர்களிடையே நடத்தப்பட்டது. அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிக்கன் சூப்

சிக்கன் சூப்

மருத்துவர்களுக்கு சளி, சுவாசக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் சாப்பிடுவது சிக்கன் சூப்தான். இது சுவாசக்கோளாறு நீடிக்கும் காலகட்டத்தை குறைக்கும். வைரஸ் தாக்கியவுடன் நமது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும், சிக்கன் சூப்பில் இருக்கும் சில பொருட்கள் இரத்தம் அணுக்களின் பலத்தை அதிகரிப்பதன் மூலம் வைரஸ் தொற்றை குணப்படுத்தும். இதனை அவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே தயாரித்துதான் சாப்பிடுகிறர்களாம்.

ஸ்டராபெர்ரி

ஸ்டராபெர்ரி

இந்த பெர்ரியில் அதிக ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது. நமது உடலில் உள்ள வைரஸ் தொற்றுக்களை வெளியேற்றுவதில் உலகின் சிறந்த 20 உணவுகளில் ஒன்றாகி இது உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி உங்கள் உடலில் இருக்கும் சளியை 19 சதவீதம் குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான மருத்துவர்கள் சளி பிடித்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதாக கூறியுள்ளனர்.

பூண்டு

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது, இந்த வலிமையான ஆன்டி ஆக்சிடன்ட் பொதுவாக சளியை குணப்படுத்தக்கூடும். இது நமது முன்னோர்கள் காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வருவதாகும். இன்று சளிக்கு பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றும் பல மருத்துவர்கள் தங்களுக்கு சளி ஏற்படும்போது பூண்டை உபயோகிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

MOST READ: சனிபகவான் தரும் சோதனைகளில் இருந்து தப்பிக்க இந்த ஒரு பொருளை வைத்து வணங்கினால் போதும்...!

தேன்

தேன்

தொண்டை பிரச்சினையா? இந்த மாத்திரை சாப்பிடுங்க, அந்த மருந்து குடிங்க என்று பல விளம்பரங்களை தினமும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மறுத்தவர்களும் இதற்காக பல மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொண்டை பிரச்சினைகளுக்கு பயன்படுத்தவுது தேனைத்தான். எலுமிச்சை சாறில் தேன் கலந்து குடிப்பது தொண்டை பிரச்சினையை விரைவில் குணப்படுத்தும்.

கேரட்

கேரட்

இதன் குணப்படுத்தும் பண்பு காரணமாக இது சூப்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேரட் மற்றும் வேறு சில ஆரஞ்சு சில காய்கறிகள் பீட்டா கரோட்டினை உற்பத்தி செய்கிறது. நமது உடல் இதை வைட்டமின் ஏ வாக மாற்றக்கூடும். இதனால் நமது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும். இது சளி மற்றும் காய்ச்சலை விரைவில் குணப்படுத்தும்.

வெங்காயம்

வெங்காயம்

இந்த பிரபலமான உணவுப்பொருளில் குவெர்சிட்டின் என்னும் பொருள் உள்ளது, வலிமையான இந்த ஆன்டி ஆக்சிடன்ட் வைரஸ் எதிர்ப்பு மற்றும் எதிர் அழற்சி பண்புகளை கொண்டுள்ளது. இது சளி மற்றும் இருமலை விரைவில் குணப்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனை தாங்கள் உபயோகிப்பதாக பல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குடைமிளகாய்

குடைமிளகாய்

குளிர்காலம் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடும், ஆனால் வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடும். வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை சளி பிடித்திருக்கும்போது சாப்பிடுவதே நல்லது. ஒரு கப் குடைமிளகாயில் ஆரஞ்சை விட கிட்டத்தட்ட 3 மடங்கு வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே மருத்துவர்கள் குடைமிளகாயை தாங்கள் சாப்பிடும் உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர்.

MOST READ: இந்த மூணு ராசிக்காரங்க மட்டும் இன்னைக்கு இந்த வேலைய மட்டும் செஞ்சிடாதீங்க...

இஞ்சி

இஞ்சி

மருத்துவர்களுக்கு வயிற்றுப்புண் இருந்தால் அவர்கள் அதிகம் உபயோகிப்பது இஞ்சியைத்தான். இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். மேலும் இதில் உள்ள ஜிஞ்சரால் என்னும் பொருளில் உள்ள எதிர்அழற்சி பண்புகள் வயிறு மற்றும் தொண்டை பிரச்சினைகளை சரிபண்ணும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காளான்

காளான்

பலரும் விரும்பும் சுவையான ஒரு உணவென்றால் அது காளான். வைட்டமின் டி அதிகம் உள்ள இந்த காளான் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடும். சளி இருக்கும் போது காமா டெல்டா T செல்கள் அதிகமுள்ள இந்த காளானை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மஞ்சள்

மஞ்சள்

மசாலா பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படுவது மஞ்சள்தான். இதில் உள்ள குர்குமின் வலிமையான ஏத்தி அழற்சி பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையக்கூடியது. சளி மற்றும் காய்ச்சலால் உங்கள் உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்படும்போது அதனை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

MOST READ: சிவபெருமான் தன் தலையில் பிறை வடிவில் நிலாவை வைத்திருப்பதற்கான சுவாரசியமான காரணம் என்ன தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health healthy foods
English summary

Which Foods doctors eat when they have a cold

When illness strikes generally doctors used to take these foods only instead of medicines. Check out a list of foods which doctors eat when they have a cold.
Desktop Bottom Promotion